0,00 INR

No products in the cart.

அநாவசியக் கவலை அவசியமா?

ஆர்.மீனலதா, மும்பை

வ்வுலகில் கவலை இல்லாதவர்களே கிடையாது. மனிதர்களாகப் பிறந்த நாம், ஏதாவது ஒன்றிற்குக் கவலைப்படுவது வழக்கம். ஆனால், தேவையில்லாமல் அநாவசியமாகக் கவலைப்பட்டால் ஆரோக்கியம் பல வழிகளில் பாதிக்கப்படுமென்பது மறக்கப்படுகிறது.

அறிஞர் அரிஸ்டாட்டில்,
எதிர்பார்ப்புகள் அநாவசிய
ஏமாற்றத்திற்குக் காரணமாவதினால்
, எதிர்பார்ப்பதைத் தவிர்த்தல்
அவசியம்’ எனக்
கூறியிருப்பதை
நினைவு கூறுவது
அவசியம்
.

அநாவசியக் கவலைகளைத் தவிர்க்க

 •  தேவையற்ற வீண் வம்புகள் பேசுவதை விட்டு உருப்படியான விஷயங்களைப் பேசலாம்.
 •  எதையும் எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுதல் அவசியம்.
 •  எதற்கெடுத்தாலும் இது முடியுமா? முடியாதா? கிடைக்குமா? கிடைக்காதா? என்று எண்ணுவதை விடுத்து, முடியும், கிடைக்கும் என்கிற ஆக்கப்பூர்வமான நேர்மறை எண்ணத்தை மனதில் தக்கவைத்துக் கொள்வது தேவை.
 • சில விஷயங்களை மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கலந்து பேசினாலும், இறுதியில் எடுக்கும் முடிவு சொந்த முடிவாக இருப்பது அவசியம்.
 • மன நிறைவு தரும் செயல்களை முடிந்தவரை செய்துகொண்டு சுறுசுறுப்பாக இருந்தால் ஆரோக்கியம் தேடி வரும்.
 • மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் கூடவே இருக்க, மனதை பசுமையாக வைப்பது மிகவும் அவசியம்.
 • பழைய திரை இசைப் பாடலான, ‘இன்பமென்ன? துன்பமென்ன? மனதுதானே காரணம்!’ என்கிற வரிகளை அசை போடுகையில், அநாவசியக் கவலை அவசியமற்றதெனப் புரியும்.

மகிழ்வான பயணத்திற்கு மனப்பக்குவம் அவசியம்!

யணம்அதுவும் தனியாகச் செல்கையில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது தவிர்க்க இயலாதது. ஒரு பக்கம் புது இடம்; மனதை கொள்ளைகொள்ளும் இயற்கைக் காட்சிகள்; போகிற இடத்தில் கிடைக்கின்ற வித்தியாசமான உணவு, மாறுபட்ட கலாசாரமென இருந்தாலும், மறுபக்கம் தெரிந்தோ தெரியாமலோ எதிர்கொள்ளும் எதிர்பாராத நிகழ்வுகள் பல உண்டு. அதாவது, ஃப்ளைட் கேன்சலாவது; பொருட்கள் தொலைந்துபோவது; தங்கும் இடம் மிகவும் சாதாரணமாக இருப்பது; இடைஞ்சல்கள்இத்யாதி…! இத்யாதி!

சங்கடங்களைத் தவிர்த்து பயணத்தில் நல்லதொரு அநுபவம் கிடைக்க மனப்பக்குவம் வேண்டும். எவ்வாறு?

புது முயற்சி

தொலைக்காட்சி பெட்டிக்கு முன்பாக அமர்ந்து பிடித்த டிரிங்கைத் தனியாக ரசித்துக் குடிப்பது மாதிரி, பயணத்தின்போது தெரிந்த, பிடித்த மலையேற்றம், போட் சவாரி போன்றவற்றைத் தனியாக மேற்கொண்டு ரசிக்கலாம். தெரியாத சிலவற்றையும் முயற்சி செய்யலாம். ஓவர் ஸ்மார்ட் தேவையில்லை.

Go with the flow

த்தனையோ முன்னேற்பாடுகளைக் கவனித்து பயணத்தை மேற்கொண்டிருந்தாலும், வழியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், ப்ளேன் தாமதமாவது போன்றவை எரிச்சலை ஏற்படுத்தும். அச்சமயம் மூச்சை நன்கு உள்ளே இழுத்து வெளியே விட்டு, ‘இது பெரிய விஷயமில்லை’ என்று சொல்லியவண்ணம், அனைவருடனும் இயல்பாகப் பயணத்தை மகிழ்ச்சியாக மேற்கொள்வது அவசியம்.

கலாசார அனுபவம்

ழக்கமான வாழ்வினைத் தவிர்த்து, செல்லுமிடத்தின் புதுக் கலாசாரத்தை அனுபவிப்பது புத்துணர்ச்சி தரும். ஒருசில விஷயங்கள் பொறுமையை சோதித்தாலும், புது விஷயங்களைத் தெரிந்துகொண்ட திருப்தி கிடைக்கும். பிடிக்காதவற்றை விட்டு விடலாம். நிர்ப்பந்தம் கிடையாது.

ஓய்வெடுக்கும் முறை (relax mode)

னச்சோர்வு அடைகையில் தனக்குத்தானே, ‘இது vocation. என்னுடைய வழக்கமான செயல்களை விட்டு ரிலாக்ஸ் ஆக இருக்கவே இப்பயணத்தை மேற்கொண்டுள்ளேன்’ எனச் சொல்லிக்கொள்வது தேவை. லிஸ்ட் போட்டுக்கொண்டு வந்தபடி, பார்க்க வேண்டிய இடங்களைப் பார்க்க இயலாமல் போகலாம். எது முடிந்ததோ அதை மட்டும் செய்தால் போதும். ரிலாக்ஸேஷன் கிடைத்துவிடும்.

வீடு மற்றும் அலுவலகத்தின் ஸ்ட்ரெஸை ரிலீஸ் செய்ய, செல்கின்ற இடத்தை ரசிக்க, அங்குள்ள சுத்தமான காற்றை சுவாசிக்க பக்குவம் அவசியம். அநேக இடங்களைப் பார்த்து விடலாம் என ஓடி ஓடிச் செல்வது ஸ்ட்ரெஸை அதிகரிக்கும். அந்த இடத்தில் கிடைக்கும் மாறுதலான உணவை ருசி பார்த்து ஓய்வெடுக்கலாம்.

இயற்கை ரசிப்பு

தெரியாத இடங்களுக்குச் செல்ல நேர்கையில், கூகுள் மேப் இருந்தாலும், வழிகாட்டியின் துணையை வைத்துக் கொள்ளலாம். உள்ளூரிலுள்ள அல்லது பக்கத்திலுள்ள இடங்களைக் காணச் செல்கையில், அங்குள்ள போக்குவரத்தில் பயணித்தோ, முடிந்த வரை நடந்தோ சென்று பார்ப்பது இயற்கையழகை ரசிக்க வழி வகுக்கும்.

எஞ்சாய் எஞ்ஜாமி

விருப்பப்படி சாப்பிடலாம்; உடற்பயிற்சி செய்யலாம்; செய்யாமலும் விடலாம்; அந்தந்த இடத்தின் Souvenier கிடைத்தால் வாங்கிக்கொள்ளலாம். Selfieஐ மொபைலில் எடுத்து ஷேர் செய்யலாம். நம்முடைய பயணமென எண்ணி வினாடிக்கு வினாடி எஞ்சாய் செய்யலாம்.

 • பயணம் மேற்கொள்கையில் டீ ஹைடிரேஷன் ஆகாமலிருக்கவும், சுகமாகச் சுற்றவும் நிறைய தண்ணீர் அருந்துவது அவசியம்.
 • பாலைவனப் பகுதியானாலும், நகரத்தின் பீச் பகுதியானாலும் சரி! நல்ல தரமான ஸன் ஸ்கிரீன் லோஷன் (Sunscreen Lotion) கைவசம் அவசியம்.
 • மிகவும் அவசியமான, முக்கியமான பொருட்களை மட்டும் கவனத்துடன் லிஸ்ட் போட்டு பேக் செய்துகொள்வது, தேவையற்ற கனத்தைக் குறைக்க வழி வகுக்கும்.
 • எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம், தனிமைப் பயணத்தை இனிமையாக்கி, புத்துணர்ச்சியை அளிக்கும்.

2 COMMENTS

 1. மனம் என்னும் கூண்டுக்குள் அடைபட்டு
  சஞ்சலத்தை கி லாே கணக்கில் கவலையாக உறுமாற்றம் செய்வதை நீக்க மீனலதா வின் கட்டுரை மூலம் தீர்வு பெறலாம்.
  து.சேரன்
  ஆலங்குளம்

மீனலதா
ஆர். மீனலதா, தொலைபேசி நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். விருதுகள் பல பெற்றவர். சிறந்த நாடக நடிகர், பேச்சாளர், எழுத்தாளர், சினிமா, இசை, கவிதை, சமையல், Ad.supervision, விளையாட்டு என பல்வேறு துறைகளில் ஈடுபாட்டுடன் பங்கேற்கும் ஆல்ரவுண்டர். நிகழ்ச்சி அமைப்பாளரும்கூட.. பழகுவதற்கு இனிமையான பண்பாளர். பலருக்கும் முன்னோடியாக விளங்குபவர். மங்கையர் மலரின் மும்பை நிருபர். உற்சாக ஊற்று.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

போற்றி செல்வனும் போளியும்!

2
-ஆர். மீனலதா, மும்பை ஓவியம்: பிரபுராம் ஆவணி அவிட்டம் 11.08.22 “பொன்! பொன்னம்மா! கொஞ்சம் இங்க வரமுடியுமா?” லேடீஸ் க்ளப் பிரஸிடெண்ட்டுடன் பேசிக்கொண்டிருந்த ‘பொன்’ என்கிற பொன்மலர், மொபலை அணைத்து, “என்ன விஷயம்? ரொம்ப குழையற மாதிரி இருக்கே!” “நோ குழைசல்!...

ஊறுகாய் ரெசிபிஸ்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க! - ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி முள்ளங்கி ஊறுகாய் தேவை: முள்ளங்கி – 400 கிராம், கடுகு – 50 கிராம், மிளகாய்ப் பொடி – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி – 2 மேஜைக்கரண்டி,...

ஜெயித்திடடா!

0
கவிதை! - ஜி. பாபு, திருச்சி வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடமடா! அது வழங்கும் பாடங்கள் அதிகமடா! வரும் நாட்களை நினைத்துப் பாரடா! அது வளமாவது உன் கையில் இருக்குதடா! சிக்கனமாய் செலவு பண்ணுடா! வாழ்க்கை சீரும் சிறப்புமாயிருக்கும் பாரடா! எக்கணமும் யாரிடமும் ஏமாறாதேடா! வரும் இன்பத்தை...

நன்மைகள் அறிவோம்!

0
- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி தலைச் சளி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, ருசியின்மை, சிறுநீ்ர் தடங்கல், தாது பலவீனம் ஆகிய பிரச்னைகளைத் தயிர் போக்கும். நன்கு உறைந்து இனிப்புச் சுவையுடன் உள்ள தயிர்தான்...

கோயில் யானை வருகுது…

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க... ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம் - ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி   காந்திமதியின் காலுக்குச் செருப்பு! திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானைக்கு பக்தர்கள் சிலர்...