0,00 INR

No products in the cart.

என்ன விலை அழகே…?

விசிட், படங்கள்:
சேலம் சுபா

பொண்ணு பார்க்கப்போன இடத்துல தக்காளி சொஜ்ஜியும் தக்காளி பிரியாணியும் போட்டாங்கபெரிய பணக்காரங்க போல. அதான் பொண்ணைப் பார்க்காமலேயே சரின்னு சொல்லிட்டான் எம்மவன்…”

ன் பொண்டாட்டிக்கு இன்னும் பொறுப்பே வரலைதக்காளி சட்னி செய்யட்டுமான்னு கேட்கறா?”

ந்த டாக்டர், பீசுக்கு பதிலா தக்காளி இல்ல கேட்கறாராம். என்ன கொடுமை சார்?”

கோதரிகளுக்கு பச்சைப் புடவை எடுத்துத் தந்தால் அண்ணனின் ஆயுளுக்கு நல்லது என்று ஒரு கதையைப் பரப்பி, ஜவுளிக்கடையில் தேங்கிப்போன பச்சைப் புடைவைகளை எல்லாம் விற்றார்கள் சாமர்த்தியமான வியாபாரிகள் அன்று! தக்காளிக்கு பிரியாணி தந்து, விலையேறிப்போன தக்காளியுடன் தங்கள் பிரியாணிக்கும் மறுவாழ்வு தருகின்றனர் சில புத்திசாலி உணவக முதலாளிகள் இன்று

தக தக’ன்னு எகிறுது தக்காளி விலை

ழைப்பதே எண் சாண் வயிற்றுக்குத்தானே’ என்று கணக்குப் பார்க்காமல் காய்கறிகளை வாங்குவோர் இன்று, நாளொரு விலையும் பொழுதொரு வண்ணமுமாக ஏறிக்கொண்டே போகும் தக்காளியைப் பார்த்து பெருமூச்சு விடும் நிலை. வீட்டில் பிள்ளைகள், ‘இன்னிக்கும் தக்காளி சோறு இல்லையாம்மா?’ என்று ஏக்கத்துடன் கேட்கும் பரிதாபம்.

தினம் ஒரு விலையாக எகிறிக்கொண்டே போகும் தக்காளி மற்றும் காய்கறிகளின் விலையேற்றம் மக்களை எப்படிப் புலம்ப வைத்துள்ளது என அறிய, சேலம் புது பஸ் ஸ்டாண்டு பகுதியில் ஒரு சின்ன விசிட் அடித்தோம். விசிட்டில் கண்ணில் விழுந்து, கருத்தைத் தொட்ட தக்காளிப் பதிவுகள் இங்கே

முத்துக் கிருஷ்ண ரெட்டி

முதலில் நாம் நுழைந்தது ஹோட்டல் ஸ்ரீனிவாசா எனும் உயர்தர சைவ உணவகம். அங்கு கல்லாவில் ஒரு கண்ணும், மாஸ்டர் கை மீது (எல்லாம் தக்காளிக்காகத்தான்) ஒரு கண்ணுமாக இருந்த முத்துக்கிருஷ்ண ரெட்டியிடம் விலையேற்றம் குறித்துக் கேட்டோம்.

முப்பது வருசமா இதே ஓட்டல் தொழில்தான். ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு வாங்கி அதை எப்படி தாராளமா சாம்பார் வெக்க முடியும்? நீங்களே பாருங்க. கவனமெல்லாம் மாஸ்டர் தக்காளியை அதிகம் போட்ருவாரோன்றதுலதான் இருக்கு. இங்க சாப்பிட வரவங்க மிடில் கிளாஸ் மக்கள்தான். தக்காளி விலை ஏறிப் போச்சுன்னு, உணவோட விலையை நாங்க ஏத்த முடியலியே! விலை மலிவா இருக்குன்னு நம்பி வரவங்களை ஏமாற்ற முடியாதே. சாப்பாடும் ருசியா வேணும், விலையும் மலிவா இருக்கணும்… இரட்டைக் குதிரையில சவாரி நிலைமைதான் இப்ப. இப்படியே விலைவாசி ஏறிக்கிட்டே போனா, எங்களை மாதிரி சாதாரண மக்களின் உணவகங்கள் எல்லாம் மூடும் நிலைதான் வரும். அரசுதான் மக்களோட முக்கியத் தேவையான காய்கறிகளோட விலைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

அங்கு சாப்பிட வந்த இல்லத்தரசி ராமாயி கவலையுடன் சொன்னது இது

ராமாயி

‘‘வீட்டுல தினம் ரசம்
வெக்கணும்
. ஆனா, இப்ப
தக்காளி இல்லாத ரசத்தை வெக்கறதுல கெட்டிக்காரி ஆயிட்டேன்
. ஒரு நாளைக்கு ஒண்ணுனு எடுத்து வெச்சு,
அதை வைத்து என்ன பண்ண முடியும்னு ஒரே ஆராய்ச்சிதான். கூடவே வெங்காயம்
யானை விலை விக்கும்
. கத்தரிக்காய் வெண்டைக்காய் இதெல்லாம் கூட சமையல்ல தள்ளுபடிதான். என்னவோ
போங்க
. இனிமே, தக்காளியை மியூசியத்துலதான்
பாக்கணும் போல
.”

வேலைக்குச் செல்லும் பெண்ணான மஞ்சுவிடம் தக்காளி பற்றிக் கேட்டதும் அழகாக சிரித்தார்.

மஞ்சு

என்னங்கஎல்லோரும் கவலையா இருக்காங்க. நீங்க மட்டும் சிரிக்கிறீங்க?” “அடப்போங்கநான் கவலைப்பட்டா தக்காளி விலை கிலோ பத்துக்கு வருமா? இடுக்கண் வருங்கால் நகுகன்னு தெரியாதா உங்களுக்கு? ஒரு தக்காளி பத்து ரூபான்னு வாங்கி புள்ள கையில தந்து, ‘கண்ணு தங்கத்தை விட பெரிசு இது. மறக்காம பிரிஜ்ஜுகுள்ள வை’ன்னு சொல்லிட்டு வந்துருக்கேன். பயபுள்ள என்ன பண்ணுச்சோன்னு மனசு திக்கு திக்குங்குது. எப்ப தக்காளி விலை குறையுமோஅப்பத்தான் எங்களை மாதிரி வேலைக்குப் போகும் பெண்களுக்கு நிம்மதி. சட்டுப்புட்டுனு தக்காளியப் போட்டு சாம்பார வெச்சமா, வேலைக்கு வந்தமான்னு இல்லாம, என்ன செய்யறதுன்னு தெரியாம இல்லாத முடிய பிச்சுக்க வேண்டி இருக்கு” ஜாலியாகத் துவங்கி, பெருமூச்சுடன் முடித்தார் மஞ்சு.

அங்கம்மாள் காலனியில் பத்து வருடங்களாகக் காய்கறிக்கடை வைத்திருக்கும் ரத்தினம், நிதர்சனத்தை அறிந்தவராக விலையேற்றம் பற்றி மிகவும் பொறுப்பாகப் பேசினார்.

ரத்தினம் மற்றும் விஜயா

ந்த விலையேற்றத்திற்கு அரசும் காரணமில்லை; வியாபாரிகளும் காரணமில்லை; விவசாயிகளும் காரணமில்லை. இயற்கையின் சீற்றம் மழையாக வந்ததில் தக்காளி போன்ற பயிர்கள் இருந்த தாழ்வான பகுதிகள் அழிந்து விட்டன. பத்து கூடை தக்காளி வந்த இடத்துல, ஒரு கூடை மட்டுமே வந்தால் யார்தான் என்ன செய்ய முடியும்? இன்று விலையேற்றம் பற்றிக் கவலைப்படும் நாம்தானே, அன்று விலை இல்லை என்று சொல்லி விவசாயிகள் தக்காளிகளை கீழே கொட்டி வீணாக்கியதையும் பார்த்தோம்.

எவ்வளவு விலை வந்தாலும் வாங்குபவர்கள் வாங்கிக்கொண்டுதான் உள்ளனர். என்னநாலைந்து கிலோ வாங்குபவர்கள் ஒரு கிலோ வாங்குகின்றனர். காய்கறிகளும் அப்படித்தான். கொஞ்ச நாள் முன்பு கிலோ பத்து ரூபாய் இருந்தும் வாங்க ஆளின்றி வீணானது. இதோநான் இந்தத் தக்காளிகளை எல்லாம் இன்றே விற்றால்தான் எனக்கு லாபம். இல்லையெனில் நஷ்டம்தான். எங்கள் நிலைமைதான் விவசாயிகளுக்கும்இவை சீக்கிரம் அழியக்கூடிய உணவுப்பொருட்கள் என்பதால், அன்றன்று விற்றால்தான் நல்லது. எல்லோருக்குமே இக்கட்டான நிலைதான் இப்போது. மழை தரும் பரிசுகளில் ஒன்றுதான் இந்த விலையேற்றமும். வேறு வழியே இல்லைஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.”

வர் கடையில் தக்காளி வாங்க வந்த விஜயா எனும் பெண்மணி, “ஆமாங்கஅவர் சொல்றதும் உண்மைதான். கட்டாயம் வாங்க வேண்டும் எனும் நிலையில் உள்ளோம் நாம். ஒரு தக்காளியாவது சமையலுக்குச் சேர்த்தாக வேண்டுமே? மழையினால்தான் இந்த விலை. இதுவும் கடந்து போகும் ஒரு நாள். அப்போது நாம் சாப்பிடலாம் தக்காளி பிரியாணியும் வெங்காய சாம்பாரும்” முகத்தில் சிரிப்புடன் தத்துவ வேதாந்தி போல் இந்தப் பிரச்னைக்கு தீர்வு தந்து விட்டு, காணாமல் போனார்.

மூக வலைதளங்களில் தக்காளி ஜோக்குகள் (memes) தகதகன்னு ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து ஒருசில இந்தக் கட்டுரையில் அங்குமிங்குமாக சாம்பிளுக்குஇன்னும் சிறிது நாட்கள். பின் மக்களும் மறந்து மன்னிப்பார்கள் விலை இறங்கிவிட்ட தக்காளியில் பிரியாணியை ருசித்தபடியே

1 COMMENT

  1. தக்காளிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கணும் . தக்காளி இல்லன்னா என்ன மிளகு ரசம் ஒரு நாள், ஜீரக ரசம் ஒருநாள், இஞ்சி ரசம் ஒரு நாள், எலுமிச்சம் பழரசம் ஒரு நாள், மைசூர் ரசம் ஒருநாள், அரைச்சு விட்ட ரசம் ஒரு நாள் என கலக்கி விடலாமே கலக்கி. கிலோ 10 ரூபாய்க்கு வந்தபோது வாங்கி நிறைய சாப்பிட்டாச்சு. பொறுத்தார் பூமி ஆள்வார். விலை குறையட்டும் திரும்ப தக்காளி ரசம் என்ன பிரியாணியே செய்து சாப்பிடலாம். எது கட்டுப்படி ஆகிறதோ அதை வாங்கி சாப்பிடலாமே.

சேலம் சுபா
பெயர் சுபா தியாகராஜன். பிறந்த ஊர் சேலம் என்பதால் சேலம் சுபா எனும் பெயரில் முன்னணி பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். கதை கவிதை கட்டுரைகள் எழுதினாலும் தன்னம்பிக்கையாளர்களின் நேர்காணல் இவரது சிறப்பு. கல்கி குழும இணையதளம், கல்கி ஆன்லைன்.காம் மற்றும் கல்கியின் வலையொலி, காணொளி வாயிலாகவும் பங்கேற்பதில் பெருமிதம் இவருக்கு.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

“நெசவும் கவிதையும் என் இரு கண்கள்” –நெசவுக் கவிஞர் சேலம் சீனிவாசன்

0
- சேலம் சுபா  “நான் நெசவாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையும் நெசவுக் கவிஞர் என்று அறியப்படுவதில் பெருமிதமும் கொள்கிறேன்...” என்று தலைநிமிர்ந்து சொல்லும் சீனிவாசன் தன்னை வளர்த்து, அடையாளம் தந்த குலத்தொழிலை உலகறியச் செய்யும் முயற்சியில்...

“ரஜினி சார் கூட நடிக்கணும்”

- ராகவ் குமார் ராட்ஷசன் படத்தில் அறிமுகம் ஆகி தனுஷின்  ‘அசுரன்’ படத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அம்மு அபிராமி ‘பேட்டரி’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.  அம்முவை சந்தித்துப் பேசினோம்: எப்படி இருக்கீங்க...

சமூக சேவகியாக அரசியலில் நுழைந்தேன்!

0
களஞ்சியம்! - மஞ்சுளா ரமேஷ் மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும்,  அவற்றுள்  சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக  அமைகிறது. அந்த வகையில்  பிப்ரவரி -...

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...