
ஐம்பூதச் சேர்க்கையில்
ஐம்புலன்கள் உருவாக்கம்!
வாதம், பித்தம், சிலேத்துமம்,
மூன்றும் சேர்ந்ததே
உடல்!
மூன்றில் எது மிகினும்,
எது குறையினும்
அதுவே நோயாகும்!
உடலுக்கேற்ற உணவு
உடற்பயிற்சிக்குப் பின்
நன்கு பசித்திடும்போது
உமிழ்நீர் சுரப்போடு உண்டிட வாராது பிணி!
அளவிற்கு அதிகமானால்
அமிர்தமும் விடம்…
அறிந்திடுக!
அற்றது அறிந்து
உடலுக்கேற்ற உணவைப்
பசித்திட புசிக்க
நோயின்றி வாழலாம்!
நோயற்ற வாழ்வே
குறைவற்ற செல்வம்
இதை உணர்ந்திடுக!
உடலினை ஓம்பி
உவப்போடு வாழ்ந்திடுக!
……………………………………….
எண்ணங்கள், கண்ணாடியாய்
பிம்பம் காட்டும்!
எண்ணிய, எண்ணியாங்கு
எய்தத் தேவை
திண்ணிய உயர்வெண்ணங்கள்!
தரையில் அழுந்தும் பந்து
உள் நிறைக் காற்றால்
மேலெழும்பினாற் போல்
உள்ளத்தில் அழுத்தும்
உயர்வெண்ணங்கள்
உன்னத உயர்வைத் தரும்!
நிலத்தின் இயல்பாய்த் திரியும் நீர் போல்
மனதின் போக்காய்த்
திரியும் உள்ளம்!
மனம் போன போக்காய் ஏகிட
பரிசாய்க் கிடைப்பது இன்னலே!
நல்லெண்ணெங்களை
மனதிலிருத்தி
நல்வழி நடந்திட
நாடு போற்றும்
நல்லோர் வரிசையில்
நாளும் நிற்போம், நாமும்!