spot_img
0,00 INR

No products in the cart.

ஒரு வார்த்தை!

ராமநாதன் எங்கள் வீட்டில் குடியிருந்தவர். சிறு வியாபாரி. எங்கள் காலனியில் உள்ள அரசமரப் பிள்ளையாரிடம் அவ்வளவு பக்தி! சங்கடஹர சதுர்த்தி, பிள்ளையார் சதுர்த்தி போன்ற நாட்களில் கோயிலே கதியாகக் கிடப்பார்.

ஆனால், அவர் நினைத்த அளவுக்கு தொழிலில் லாபம் இல்லை. யாரோ சொன்னார்கள் என்று தீவிர அய்யப்ப பக்தர் ஆனார். சபரிமலைக்கு மாலை போட்டு அமர்க்களம் செய்தார். நடுவே நண்பர் வாங்கிக் கொடுத்தார் என, ‘சந்தோஷிமா’ பூஜை செய்தார். ஜோசியர் சொன்னார் என்று வாராஹி, பிரத்யங்கிரா வழிபாட்டில் ஆர்வம் காட்டினார். ரஜினி, லாரன்ஸால் கவரப்பட்டு, ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் உபாசகர் ஆனார். இப்போது, ஷீரடி சாயி பக்தராக ஒன்பது வியாழக்கிழமை பூஜை செய்துகொண்டிருக்கிறார்… “சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்குப் போனால் பலன் கிடைக்குமாமே! சதுரகிரி மலை போலாம்னு இருக்கேன்” இது லேட்டஸ்ட்.

ஆடு, மாடு, மான் மட்டுமே கூட்டம் கூட்டமாக வாழ்வது இல்லை; நமக்கும் அந்த மனோபாவம் நிறையவே உண்டு.

எங்கே கூட்டம் சேர்கிறதோ அங்கே போய் விழுவது மனித சுபாவம்! ரிஸ்க் எடுக்க பயம்!

l கூட்டமாக இருக்கும் ஜவுளிக் கடைக்குப் போய், ஊர்ப்பட்ட விலையைக் கொடுத்து, பழைய ஸ்டாக்கை வாங்கி வந்த அனுபவம் யாருக்குத்தான் இல்லை?

l FBல சிநேகிதிகள், ‘லைக்ஸ்’ போட்டால், நாமும் போடுவது… (விஷயம் என்னன்னு தெரியாமலேயே.)

l அண்ணி குடும்பத்துடன் போனாள் என்பதற்காக, நாமும் அமர்நாத், கேதார்நாத் போவது

l தேனிலவுக்கு லோன் போட்டு மொரீஷியஸ் போவது

l கல்யாணத்தில் சங்கீத், மெஹந்தி வைத்து, பொருத்தமே இல்லாமல் லெஹங்கா, டிஸைனர் குர்த்தா அணிவது

l பல காலமாய் ஜெயிக்கக்கூடிய சின்னத்துக்கே வோட்டு போடுவது

l அலுவலக நண்பர்கள், ‘க்ரீன் டீ’யை மெச்சிப் பேசினால், நாமும் உடனே, ‘க்ரீன் டீ’க்கு மாறுவது

l எல்லோரும் போராடுகிறார்கள் என்பதால் சுய சிந்தனை இல்லாமல் நாமும் போராடுவது

l ஹேர் கலரிங், டாட்டுஇன்ன பிற

இவை எல்லாமே, ‘மந்தை மனநிலை’ எனப்படும் ஹெர்ட்மென்டாலிடியின் அறிகுறிகளாக மனோதத்துவம் சொல்கிறது. இந்த மந்தைநிலை, நிச்சயம் மாற வேண்டிய மந்தநிலை. இதனால் சுய விடுப்பு, ரசனை, சுய சிந்தனை எல்லாமே மாறிப்போய் நமக்குத் தேவையோ இல்லையோ, யாரையோ இம்ப்ரஸ் செய்ய, எதையோ செய்து கொண்டிருக்கிறோம்.

புதிதாக, தனியாக, சொந்தமாக எதையாவது யோசித்து செய்தால், பிரச்னையில் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படுவோமோ? நாலு பேர் கேலி செய்வார்களோ? நம்ப ஸ்டார் ரேட்டிங் குறைஞ்சுடுமோங்கிற அச்சம்தான் இதற்குக் காரணம்!

வாழ்க்கையில ஜெயிச்சவங்களை கூர்ந்து கவனிச்சீங்கன்னா, அவங்க எல்லாருமே புதுமையா எதையாவது செஞ்சவங்கதான்!

எல்லோரும் போற பாதை சுலபமா இருக்கலாம். ஆனா, நீங்க உங்க உள்ளுணர்வால உந்தப்பட்டு, சுயமா போடற பாதைதான் சுவாரசியமா இருக்கும். கூட்டத்துல ஒரு பகுதியா இருக்கிறது சேஃப்தான். ஆனா, அது உங்களோட தனித்திறனை சிதைக்கிற அளவுக்குப் போயிடக் கூடாது.

அண்டை வீட்டாரை, உறவினர்களை, நண்பர்களை நகல் எடுக்காமல், உங்கள் சொந்த மூளையை, திறமையை நம்பி முடிவெடுங்க

மந்தை மனநிலை’யிலேயே இருந்தால் மகிழ்ச்சியும், நிறைவும் பெறாத தேடல் மனிதர்களாகவே இருப்போம், கடைசி மூச்சு வரை!

வாழ்க்கையில ஒரு, ‘கிக்’ வேணும்னா, ‘யூனிக்’கா இருந்து பாருங்களேன்! டோன்ட் பி எ ’காப்பி கேட்’ ப்ளீஸ்

 

5 COMMENTS

 1. அனுஷா மேடத்தின் ஒரு வார்த்தை மந்தை மனநிலை (Herd mentality) பற்றிய பதிவு மிக அருமை. எதார்த்தத்தை அழகாகச் சுட்டிக் காட்டியுள்ளார் …யோசிக்க வைத்த பதிவு ..நன்றி மேடம்.

 2. மனித மனத்தை அப்படியே அனுஷா வின் ஒரு வார்த்தை பிரதிபலித்தது.அடுத்தவர்கள்எது செய்தாலும் நாமும் செய் வதால் மனநிறைவு கி டைக்காது,தனித்துவம் வேண்டும் என்பதை அழகாக புரிய வைத்தது.

 3. சொந்த புத்தியோட பொழச்சுக்கோ. அப்பதான் வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்கும் அப்படின்னு சொல்ற நம்ப ஆசிரியருக்கு எல்லோரும் ஓரு’ ஓ’ ‘போடுங்கோ.

 4. பிரச்சனையின்றி அ னைவரிடமும் ஒத்து
  வாழத்தான் பெ ரும் பா லாே ர்
  ஆசைப்படுவார்கள்.தனிக்கவனம் தன் மீது விழுந்தால் பிரச்சனை பீறிட்டு வந்து விடு மாே என்ற அச்ச மனஅழுத்தமே சிலர்
  தன்ஆற்றலை வெ ளிச்சத்துக்கு காெ ண்டு வருவதி ல்லை. அனு ஷா மேடம் வழங்கிய
  ஒரு வார்த்தை தலையங்கம் படித்தவர்கள்
  இனி சுய அறிவின் மூலம் தங்களின் தனித்துவத்தை நிலைநாட்டுவது உறுதி
  என்பதில் துளியளவு ஐயமில்லை. வாழ்த்துகள் .
  து.சே ரன்
  ஆலங்குளம்

Other Articles

Stay Connected

263,924FansLike
1,885FollowersFollow
3,140SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

ஒருவார்த்தை!

மரணம் - எல்லாருக்கும் வரும்; ஆனால் இறக்க யாரும் தயாரில்லை! உணவு - எல்லாருக்கும் வேணும்; ஆனால் விவசாயம் செய்ய யாரும் தயாரில்லை! நீர் - எல்லாருக்கும் அவசியம் வேணும்; ஆனால் நீர்வளம் பாதுகாக்க யாரும்...

ஒருவார்த்தை!

நம் அனைவருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை ஒளிந்திருக்கும். அதை சரியான நேரத்தில் பயன்படுத்தத் தூண்டினால், நன்மையும் வரும்; கொசுறாக மனத் திருப்தியும் தரும். (எப்பவும் மெசேஜை கடேசீலதான் எழுதணுமா என்ன? ஜஸ்ட் ஃபார் எ...

ஒரு வார்த்தை!

ஹாய் கண்மணீஸ்... புது வருஷத்தன்னிக்கு உங்களுக்கெல்லாம், 'இளமை, இதோ... இதோ...’ பாட்டைத்தான் (40 வருஷமா) நிறைய பேர் அனுப்பியிருப்பாங்க! கரெக்டா? ஆனா, நான் கொஞ்சம் வித்யாசம்! நான் அனுப்பியது, ‘வரவு எட்டணா... செலவு பத்தணா...’ பழைய பாடலை! காரணம்,...

ஒரு வார்த்தை!

ஓவியம்: பிரபுராம் ஹலோ... செக்... செக்... மைக் டெஸ்டிங்! ஒன்... டு ...த்ரீ! செக்... இந்த வாரம் ஒரு ராஜா - மந்திரி கதை கேட்க உங்களை அன்புடன் அழைப்பது அனுஷா நடராஜன்... ஜன்... ஜன்...! ஒரு...

ஒரு வார்த்தை!

ஆண்டவன் ஒரு நாள் ஒரு வாட்ஸ் அப் குரூப்பைத் துவங்கினார். அதற்கு, ‘உலகம்’ என்று அழகான பெயரையும் சூட்டினார். முதலில் பஞ்ச பூதங்களைச் சேர்த்தார். ஆகாயம், பூமியைச் சேர்த்ததும், சூரியன், நிலவு, நட்சத்திரங்கள் ரிக்வெஸ்ட்...