0,00 INR

No products in the cart.

பூனை சகுனம்! – காரணக் கதை!

எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி

பூனை குறுக்கே சென்றால், ‘அபசகுனம்’ என்று சொல்லுவதற்கு பின்னால் இப்படி ஒரு காரணக் கதை இருக்காம்!

ந்தக் காலத்தில் தெரு விளக்கு கிடையாது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால், மாட்டு வண்டியிலோ அல்லது குதிரை வண்டியிலோதான் பயணம் செய்ய வேண்டும். நீண்ட தூர பயணமாக இருந்தால் கட்டாயம் அது இரவு நேரப் பயணமாக இருக்கும். இப்படி இருட்டு சமயத்தில் குதிரை வண்டியிலோ மாட்டு வண்டியிலோ பயணம் செய்யும்போது எதிரே வரக்கூடிய பூனை, வண்டியை ஓட்டிச் செல்பவருடைய கண்களுக்குத் தெரியாது.

பூனையின் கண்கள் மட்டும்தான் இருட்டில் தனியாகத் தெரியும். அதாவது, பொதுவாகவே பூனையின் கண்களை இருட்டில் பார்க்கும்போது ஒரு ரேடியம் எஃபெக்டில் நமக்குத் தெரியும். பூனையின் உருவம் இருட்டில் தெரியாது. ஆனால், லைட் போட்டு வைத்திருப்பது போல இரண்டு கண்களும் அப்படியே மின்னும். பூனைக்கு மட்டுமல்லாது; புலி, சிறுத்தை, சிங்கம், கருஞ்சிறுத்தைஇப்படி எல்லா வகையான காட்டு விலங்குகளுக்கும் கண்கள் இப்படித்தான் ரேடியம் மின்னுவது போலத் தெரியும். (ஆங்கிலத்தில் இந்த மிருகங்களை Big Cats என்று சொல்லுவார்கள்.) இப்படிப் பூனையின் கண்களைப் பார்த்து வண்டியில் பூட்டி வைத்திருக்கும் மாடு அல்லது குதிரை பயந்து மிரண்டு விடக் கூடாது. இருட்டில் பூனையின் கண்களைப் பார்த்து, காட்டு விலங்குகள்தான் எதிரே வருகின்றது என்ற அச்சத்தில் குதிரையும் மாடும் மிரண்டு பயந்து விடக்கூடாது என்பதற்காக இந்த வண்டியை ஓட்டுபவர்கள், பூனை எதிரே வந்தால் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, குதிரைக்கும் மாட்டிற்கும் தண்ணீர் காட்டி விட்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டுச் செல்வார்களாம்.

தே சமயத்தில் குதிரையை ஓட்டிச் செல்பவர்களும் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, தண்ணீர் பருகிவிட்டு அதன் பின்பு தங்களுடைய பயணத்தைத் தொடர்வார்களாம். இந்தப் பழக்கம்தான் காலப்போக்கில் மாறி மாறி பூனை குறுக்கே வந்தால் அபசகுனம். தண்ணீர் குடித்துவிட்டு, ஓய்வு எடுத்து விட்டுச் செல்ல வேண்டும் என்று நம்முடைய ஜனங்க மாத்தி வச்சுட்டாங்களாம்.

பூனை குறுக்கே வந்தால் அது அபசகுனம் என்று நினைத்துத் தேவையில்லாமல் உங்கள் மனதைப் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். எந்த ஒரு காரியத்தையும் குழப்பமாக செய்யும்போது அதில் பிரச்னைகள் வரத்தான் செய்யும்; பூனை குறுக்கே வந்தாலும் சரி, வரவில்லை என்றாலும் சரி. மனத் திருப்தியோடு செய்யக்கூடிய காரியங்கள் வெற்றியில் முடியும்.

வாசகர்களே! இப்படிப்பட்ட நம்பிக்கைகளின் பின்னணியில் இருக்கக்கூடிய காரணக் கதைகள் உங்களுக்கும் தெரிந்திருந்தால் எழுதி அனுப்பலாமே!
(-
ஆர்.)

4 COMMENTS

 1. பூனை குறுக்கே சென்றால் அபசகுனம் என்பதற்குரிய காரணக் கதையை மிக அழகாக விளக்கியுள்ள விதம் அருமை பாராட்டுக்கள்.

 2. பூனை சகுனம் பார்ப்பது அபத்தம் என்பதை அ சாே க் ராஜாவின் காரணக் கதை மூலம் அறிந்து காெ ண்டதால் இனி சகுனம் பார்க்க அவசியம் இல்லை.
  து .சேரன்
  ஆலங்குளம்

 3. இந்த கதையின் மூலம் இனிமேல் பூனை குறுக்கே வந்தால் மனதை
  போட்டு குழப்பி கொள்ள வேண்டாம் என்று
  நினைக்கிறேன்.நன்றி

 4. மனம் தெளிவாக இருந்தால் சகுனம் என்பதெல்லாம் மூடத்தனம் என்பதை புரிய வைத்ததோடு ,எதற்கும் ஒரு காரணம் இருக்கும் என்று உணர்ந்தால் சிக்கல் இல்லை என்றுணர்ந்தோம்.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

மூக்குத்தியின் கதை!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!  நாயக்கரின் ஆண்டாள் பக்தி மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை அனைவரும் அறிவோம். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது கொண்டிருந்த அளவிட முடியாத பக்தி பற்றி அறிவோமா? ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உச்சிவேளை (பிற்பகல்) பூஜை...

ஆதாயம் தேடும் மனிதர்கள்!

2
சிறுகதை - கே. அம்புஜவல்லி, புத்தூர் ஓவியம்: சேகர் சி. ஏ.  படித்து தில்லியில் மத்திய அரசாங்கத்தில் தலைமைப் பதவி வரை வகித்த நடேசன், நாற்பது ஆண்டு கால பணிக்குப் பிறகு ஒய்வு பெறுகிறார். அவர் மனைவி...

மங்கையர் மலர்  F.B. வாசகர்களின் சுதந்திர தின தகவல்கள்!

0
  காந்திஜியின் தபால் தலைகள் அரிதாகப் போற்றப்படுகிறது. பத்து ரூபாய்  மதிப்பிலான தபால் தலைகள் பதினெட்டு  மட்டுமே  தற்போது  உள்ளதாக கூறப்படுகிறது. மகாத்மாவை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் 48-க்கும் மேற்பட்ட  தபால் தலைகளும், 200...

அணை கட்டும் பிராணி!

இயற்கை அதிசயம் வியந்தவர்: பத்மினி பட்டாபிராமன் ரோடன்ட் என்னும் (Rodent) பெருச்சாளி இனத்தைச் சேர்ந்த விலங்கு பீவர் (Beaver). பாலூட்டி வகையைச் சேர்ந்தது. குளம், ஏரி, ஆறுகள் போன்ற சுத்தமான நீர்நிலைகளின் அருகே வசிக்கக்கூடியவை. அமெரிக்கன்...

ஆழ்வார்கள்!

0
பகுதி -11 - ரேவதி பாலு ஆண்டாள்! பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்தான்.  ஆண்டாள் என்றாலே அவர் அருளிச் செய்த திருப்பாவையும் அது பாடப்பட்ட புனிதமான மார்கழி மாதமும்தான் நம்...