சொல்ல விரும்புகிறோம்!

சொல்ல விரும்புகிறோம்!
Published on

இணையதளத்தில் நேரடியாகப் பதிவான 'comments'

தாவது ஒரு வேலை மூலம் பயன் கிடைக்க மறைமுகமாக மாமியாருக்கு மருமகள் உதவினால் போதும், அத்தைமருமகள் பிரச்னை பொடிப்பொடியாகும் என்பதற்கு எடுத்துக்காட்டான கதை, 'மாமியார் மெச்சும் மருமகள்!' வாழ்த்துக்கள்.

விர்க்க முடியாத சூழலில் தவித்துத் தடுமாறும் வேளையில் கை கொடுத்து
உதவிக்கரம் நீட்டுவற்கு
, 'பெரியாத்தா' போல் பெரியோர்கள் தேவை என்ற கருத்தை வலியுறுத்தியது வள்ளியின் கதை. வாழ்த்துக்கள்.
து.சேரன், ஆலங்குளம்

கவிதைகள் அனைத்தும் விவசாயியின் வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டுவதாக அமைந்துள்ளன.
இந்திராணி தங்கவேல்

கவிதை முழுவதும் ஒரு விவசாயியின் மனக்குமுறல்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கலைமதி

வீட்டுத்தோட்டம் பற்றி தாங்கள் அளித்த அனுபவப்பூர்வமான பதில்கள் படிப்பதற்கு மிகவும் சுவையாகவும், ரசிக்கும்படியாகவும் இருந்தது அனுஷா மேடம். Awesome!

கார்த்திகை மாதம் சுவாமி ஐயப்பனுக்கு உகந்த மாதம். அதனை உணர்ந்து ஐயப்பனைப் பற்றிய சிறப்பானதொரு கட்டுரையை மங்கையர் மலரில் வெளியிட்டு மெய்யன்பர்களை மனம் குளிர வைத்துவிட்டீர்கள். குறிப்பாக, ஐயப்பனின் திருநாமங்கள், பதினெட்டு படியின் மகிமை, திருவாபரணப் பெட்டியிலுள்ள நகை விபரங்கள் போன்றவை ஐயப்ப பக்தர்கள் அனைவரும் அறிய வேண்டிய ஒன்றாகும்! கட்டுரையை எழுதிய ஆர்.ஜெயலட்சுமி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுதல்கள், நன்றிகள் உரித்தாகுக.
எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி

'வெல்டன்ஆஸ்திரேலியா' என்ற தலைப்பில் இவ்வார மங்கையர் மலரில் வந்த சூப்பரான கட்டுரை கிரிக்கெட் ரசிகர்களுக்கு சரியான தீனி போட்டது. டேவிட் வார்னர், ஆடம் லாம்பா, மிட்செல் மார்ஷ் போன்ற வீரர்களின் அபாரமான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை! அதோடு, மற்ற அணிகளைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்களுக்குக் கூடுதல் போனஸாக இருந்தது. பாராட்டுக்கள்.
ஆர்.வித்யா சதீஷ்குமார், பள்ளிக்கரணை

கைகள் பராமரிப்பு பற்றிய ஆரோக்கியக் குறிப்புகள், சுத்தப்படுத்தும் வழிகள், அதன் முக்கியத்துவம் என எல்லாமே கைத்தட்டல் பெறும் தகவல்கள். மிக அருமை.
ஆர்.மகாலட்சுமி, சென்னை

பசியின் கொடுமையை அனுபவப்பூர்வமாக உணர்ந்து, உணவின் முக்கியத்துவத்தை பலவிதமான கருத்துக்களின் மூலம் கூறி, உணவை வீணாக்காமல் இருக்கக் கொடுத்திருக்கும் விழிப்புணர்வு மிகவும் அருமையாக இருந்தது. எந்த உயிரும் உணவின்றி உயிர் வாழ முடியாது. எனவே, மீதி இருக்கும் உணவை வீணாக்காமல் பறவைக்கோ, ஆடு, மாடுகளுக்கோ கூட கொடுக்கலாம்.
வி.கலைமதி சிவகுரு, புன்னைநகர்

மழைக்காலம் வந்தாச்சு காலத்தே கிடைத்த‌ கவனத்திற்குரிய கட்டுரை.
.சம்பத், சின்னசேலம்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com