0,00 INR

No products in the cart.

வென்னீரும் வாழ்வியலும்!

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்
ஓவியம்: லலிதா

ப்போது போல வசதிகள் ஏதுமில்லா காலத்தில் குளிக்க வென்னீர் வைப்பது என்பது சவாலான வேலை. வென்னீர் வைப்பதற்கென்றே புழக்கடையில் (புறக்கடை) பெரிய சைஸ் இரு மண் அடுப்புகள் மண்ணில் புதைக்கப்பட்டிருக்கும். அதற்கென பெரிய பித்தளை தவலைகள் அளவில் மிகப் பெரியதாக வைத்திருப்பார்கள். இரண்டு அடுப்பிலும் மாறி மாறி அந்தத் தவலைகளில் தண்ணீரை நிரப்பி வைப்பார்கள். விடியலிலே எழுந்து விறட்டியில் சிறிது மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்து அடுப்பினை ஏற்றி வைப்பார்கள். பிறகு உடைத்த மர விறகுகளைச் சொருகி வைக்க, நெருப்பு திகுதிகுவென ரியும். பிறகு சிறு சுள்ளிகளையும் வைத்து சொருகுவார்கள்.

விடியற்காலை குளிரில் அந்த நெருப்பின் கதகதப்பில் அதன் அருகிலேயே அமர்ந்திருக்கலாம் போல் கதகதவென இருக்கும். அந்த நெருப்பில் வேகும் வறட்டியின் சாம்பல் வாசனை காற்றில் அருமையாக வீசும். ஒவ்வொரு நபரும் குளிக்கும்போது வென்னீரை ஊற்றி மறுபடி பச்சை தண்ணீர் ஊற்ற வேண்டும். சொருகியிருக்கும் கட்டைகள் கணகணவென எரிந்து அந்த விடியற்கருக்கலில் செந்தணலாக மின்னுவது கொள்ளை அழகு.

அடுப்பில் வென்னீர் தளதளவென கொதித்துக் கொண்டிருக்க, உடலில் நன்றாக எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து கொண்டு அந்த கொதிக்கும் வென்னீரை பதமாக விளாவி குளித்தால் உடல் வலியெல்லாம் பஞ்சாய் பறந்து போகும். அடுப்பில் வைக்கும் வென்னீர் உடலுக்கு மிகவும் நல்லது.

விடியற்காலையில் பற்றவைத்த அடுப்பு அனைவரும் குளித்து முடிக்கும் வரை தகதகவென எரிந்து கொண்டேயிருக்கும். அனைவரும் குளித்து முடித்த பிறகு அடுப்பில் திகுதிகுவென எரியும் பெரிய கட்டைகளை வெளியே இழுத்து விடுவார்கள். அது சிவப்பு நிற தணலாக மின்னும். அதில் தண்ணீர் தெளித்தவுடன் புஸ்ஸென அடங்கி புகையை கிளப்பி விடும். அந்த அடுப்பு அணைந்ததும் சுடச் சுட கிடைக்கும் சாம்பல் ஒருவித மயக்கும் வாசனை கொண்டது. அந்த சாம்பலை சிலர் சாப்பிடுவது கூட உண்டு. அடுப்பில் வைத்த பித்தளை தவலைகள் கரி மண்டிக்கிடக்கும். அந்த சாம்பலைக் கொண்டே பெரிய பித்தளை தவலைகளை பளபளவென தேய்த்து வைப்பார்கள். இப்போது போல சபீனாவோ விம் பார்களோ இல்லாத காலகட்டத்தில் வெறும் சாம்பலை தேங்காய் நார் கொண்டே பித்தளை செம்பு, அலுமினியப் பாத்திரங்களைத் தேய்ப்பது வழக்கம். அப்போதைய பித்தளைப் பாத்திரங்கள் முகம் பார்க்கும் அளவிற்கு பளபளக்க வெறும் சாம்பலே போதும்.

டுப்பு லேசாக எரியும்போது அந்த மீதமுள்ள சிறு தீயில் பாலை சுண்ட காய்ச்சி காபி தயாரிப்பார்கள். சுண்ட காய்ச்சி எடுத்த பால் காபிக்கு கூடுதல் சுவையை சேர்க்கும். இளங்காலை குளிரின் கதகதப்பில், அடுப்பு வெதுவெப்பின் அருகே அமர்ந்து கொண்டு சூடான காபியை பருகுவதே ஒரு இனிய அனுபவமாக இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த எண்ணெய் மசாஜும், வென்னீர் குளியலும் மிகவும் பிரசித்தம். உடல் வலி போக சூடான நீரில் குளித்து முடித்த பின்பு அதே அடுப்பு தணலிலிருந்து எடுத்த கரித் துண்டுகளின் மேல் அரிசி சல்லடையை மூடி சாம்பிராணி போட்டு ஊதி விடுவார்கள். அந்தத் துளைகளில் இருந்து வெளிவரும் சாம்பிராணி புகையில் தலை முடியைக் காட்டி உலர வைப்பார்கள். தலைமுடி சாம்பிராணி மணத்துடன் ஜம்மென்று உலர்ந்து மணத்துடன் இருக்கும்.
உடல் வலி போக குளித்த பின் சைவமெனில் மல்லிகை பூ இட்லியும், சின்ன வெங்காய சாம்பாரும் மெதுவடையும் மசால் வடையும் சாப்பிட்டால் அது சொர்க்கம் பூலோகத்தில் இறங்கியதைப் போல இருக்கும்.

அசைவமெனில் கோழி அடித்து குழம்பு வைப்பார்கள். சுடச்சுட மெத்தென்ற இட்லி தோசையுடன் கொதிக்கும் ஆட்டுக்கறி குழம்புடனோ, கோழிக்கறி குழம்புடனோ சாப்பிடுவது நாமே சொர்க்கத்திற்கு சென்று வருவது போல இருக்கும்.

கொஞ்சம் நாகரிகம் அதிகமான நகர்ப்புறங்களில் வென்னீர் வைக்க பாய்லர் உபயோகிப்பார்கள். அந்த பாய்லர்களையும் பளபளவென விறட்டி சாம்பலில் தேய்த்து வைப்பார்கள். அதில் நடுவிலுள்ள குழாயில் விறட்டியை மண்ணெண்ணெயில் தோய்த்து பற்ற வைத்து உள்ளே போடுவார்கள். சிறு சிறு விறட்டிகள் பற்றி எரிந்ததும் அதில் அடுப்புக்கரிகளை எடுத்துப் போட்டு எரிய விடுவார்கள். அதைச் சுற்றியுள்ள பகுதியில் தண்ணீர் ஊற்றி வைக்கப்படும். கரி துண்டங்கள் கணகணவென எரிந்து சீக்கிரம் தண்ணீர் சூடாகிவிடும். அதன் கீழே இருக்கும் குழாயில் வென்னீர் பிடித்துக் கொள்ளலாம். அடுப்பினை விட சற்று எளிமையான முறை இது. கீழே இருக்கும் தட்டினை நீக்கினால் சாம்பலும், கரி துண்டுகளும் கிடைக்கும். கரிகளை மறுநாளும் உபயோகம் செய்து கொள்ளலாம். அதனை சாம்பலாகும் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

க்காலத்தில் வீடுகளில் கிடைக்கும் மாட்டு சாணங்களில் விறட்டி தட்டி வைத்துக் கொள்வார்கள். அருகிலுள்ள மரங்களில் விறகு எடுத்துக் கொள்வதோ, முள் சுள்ளிகளை எடுத்துப் பயன்படுத்திக் கொள்வதென இயற்கையோடிணைந்த இயல்பான வாழ்க்கை. அதிலிருந்து கிடைக்கும் கரி மற்றும் சாம்பல் உபயோகங்கள் என அவர்களின் நிர்வாகத் திறனும் அலாதியானதே. ஒரு பொருள் பல உபயோகங்கள் என அனைத்துமே இயற்கையோடு தொடர்புடையவையே. அவை மனிதர்களின் உடலுக்கும், பூமிக்கும் எவ்வித ஊறுகளையும் விளைவிக்காதவை. ஒரே முறைதான் அடுப்பினையோ, பாய்லரையோ பற்ற வைக்க முடியும் என்பதால் அனைவரும் ஒரே நேரத்தில் குளிப்பது என வேலைகளில் அவர்களின் நேர மேலாண்மைகளும் மிகச் சிறப்பானவை. விடியலிலே அனைவரும் குளித்து முடிப்பது என நேர்த்தியும் நெறிமுறைகளும் இணைந்த வாழ்க்கை வசந்த காலமல்லவா?

ன்று ரே ரு மின்சார ஸ்விட்ச்சில் அனைத்து வேலைகளும் முடிந்து விடுகிற வசதி வாய்ப்புகள் வந்துவிட்டன. வீட்டுக்குள்ளேயே கிடைக்கும் அனைத்து வசதிகளும் நம்மை பெரிய சோம்பேறியாக்கி விட்டன. நினைத்த நேரத்தில் ஸ்விட்ச் ஆன் செய்து, நினைத்த நேரத்தில் குளித்துக் கொள்கிறோம் என்பது வசதிதான். ஆனால், அந்த சுவாரசியமும், அனுபவங்களும் இன்றைய தலைமுறை குழந்தைகள் அறியாததே!

4 COMMENTS

 1. அந்த சுவாரஸ்யங்களையும்,அலுவல்களையும் இந்த தலைமுறையினர் விரும்புவதில்லை. வாழ்வியலில் ஒரு மாற்றத்தை நோக்கி செல்ல இவை
  எல்லாம் நேர விரயமாக கருதப்படுகிறது. நாம் வாழ்ந்த வாழ்க்கை மனத்தால் இப்போது பணத்தால் எல்லாம் அளவிடப்படுகிறது. எனவே கட்டுரைப் படைத்த தனுஜாவுக்கு வாழ்த்துக்கள்.

 2. தனுஜா ஜெயராமனின் வாழ்க்கை யாே டு கலந்த
  “வென்னீரும் வாழ்வியலும்” கட்டுரை அல்ல.
  சிறுகதை பாே ல் அருமையாக மனதை க்
  கவர்ந்தது.வாழ்த்துகள்.
  து.சே ரன்
  ஆலங்குளம்.

 3. வென்னீரும் வாழ்வியலும் .கட்டுரை , எங்கள் வீட்டு அடுக்களைக்கு அழைத்து சென்று விட்டது .நினைவுகள் ஐஸாய் உருகின . கட்டுரை..குளித்து முடித்து சாப்பிட்டது போல் இருந்தது.

தனுஜா ஜெயராமன்
சென்னையை சேர்ந்த தனுஜா ஜெயராமன் வளரும் பெண் எழுத்தாளர். M.com படித்து அலுவலக கணக்காளராக பணிபுரியும் அவர் கதைகள் , கட்டுரைகள், ஜோக்ஸ், துணுக்குகளை எழுதுவதில் ஆர்வமுடையவர். பல்வேறு முன்னணிப் பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகி உள்ளன. அமேசான் கிண்டிலில் அவரது சிரிப்பு கதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

“நெசவும் கவிதையும் என் இரு கண்கள்” –நெசவுக் கவிஞர் சேலம் சீனிவாசன்

0
- சேலம் சுபா  “நான் நெசவாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையும் நெசவுக் கவிஞர் என்று அறியப்படுவதில் பெருமிதமும் கொள்கிறேன்...” என்று தலைநிமிர்ந்து சொல்லும் சீனிவாசன் தன்னை வளர்த்து, அடையாளம் தந்த குலத்தொழிலை உலகறியச் செய்யும் முயற்சியில்...

“ரஜினி சார் கூட நடிக்கணும்”

- ராகவ் குமார் ராட்ஷசன் படத்தில் அறிமுகம் ஆகி தனுஷின்  ‘அசுரன்’ படத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அம்மு அபிராமி ‘பேட்டரி’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.  அம்முவை சந்தித்துப் பேசினோம்: எப்படி இருக்கீங்க...

சமூக சேவகியாக அரசியலில் நுழைந்தேன்!

0
களஞ்சியம்! - மஞ்சுளா ரமேஷ் மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும்,  அவற்றுள்  சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக  அமைகிறது. அந்த வகையில்  பிப்ரவரி -...

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...