– லிடியா இம்மானுவேல், மயிலாடுதுறை
அங்கெல்லாம் இல்லை!
விலங்குகள் வாழும்
காட்டில் இல்லை!
பறவைகள் வாழும்
கூட்டில் இல்லை!
மனிதர்கள் வாழும்
நாட்டில் இருக்கின்றது
முதியோர் இல்லங்கள்!
************************************
மனமுறிவு!
தடாக வாழ்வில்
தாவிய தவளையால்
நிலவிற்கும்!
அந்த குளத்திற்கும்
உறவில் விரிசல்
உண்டானது!
************************************
பாதை மாறிய பயணங்கள்
அமைதியான ஓடை நீர்
கடலில் கலந்ததும்
பிரளயமானது!
தீப்பந்த நெருப்பு
தீபத்தில் ஏற்றியதும்
அமைதியானது!
************************************
காணவில்லை…
திருவிழாவில்,
காணாமல் போன
அந்த குந்தை
கிடைத்துவிட்டது!
குழந்தை
தேடிச் சென்ற
அந்த பொம்மை
கிடைக்கவில்லை!
************************************
-பாரதிமகள், திருச்சி
அவதாரம்
அவதாரங்கள் பல எடுத்தார்கள்
அரியும், சிவனும் முன்பு
அசுரர்களை அழிக்கவென்று
சென்ற யுகங்களில்.
எடுக்க வேண்டும் ஒரு
அவதாரம், கலியுகத்தில்
கொரோனா அரக்கனை
வதம் செய்வதற்காக
வேண்டுவோம் இன்று!
************************************
ஓய்வு எடுப்பதில்லை!
சுகமான காற்று தருகிறது
விட்டத்தில் சுற்றும் விசிறி
காய், கனி, பால், தயிர்
கெடாமல் காக்கிறது
ஒரு பெட்டி,
துணி துவைக்கிறது இயந்திரம்
வீடெங்கும் வெளிச்சம்
வழங்கும் விளக்குகள்
நமக்காக நாள் முழுதும்
உழைக்கும் மின் சாதனங்கள்
ஓய்வெடுப்பதில்லை
நம்மைப் போல.
கவிதை தூறல் மழை வருமுன் . எதார்த்தமாக மே னியை வருடும் தென்றல்
பாே ல் இதமாக அருமை யாக இருந்தது.
து.சேரன்
ஆலங்குளம்