0,00 INR

No products in the cart.

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன்

 

முருங்கை மூலம் அழகு சாதனங்கள்!

முருங்கைக்காயிலும், முருங்கைக்கீரையிலும் இரும்புச் சத்து நிறைய இருக்கிறது , அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அல்லவா?

ஆனால் இந்த முருங்கையிலிருந்து 40 வகை மதிப்பு மிக்க பொருட்களை உற்பத்தி செய்ய முடியும், அதன் மூலம் லட்சக் கணக்கில் சம்பாதிக்க முடியும் என்று நிரூபித்து வருகிறார் திருமதி. பொன்னரசி.

உணவுப் பொருள் மட்டுமல்ல, அழகுப் பொருட்களும் தயாரித்து விற்பனை செய்கிறார். திண்டுக்கல் மாவட்டம் ஆரவல்லோடு கிராமத்தைச் சேர்ந்தவர். பத்து வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருபவர்.

Arasi Moringa Products என்ற பெயரில் முருங்கை சூப், முருங்கை எண்ணை, முருங்கைப் பொடி, உட்பட பலவகை உணவுப் பொருட்களையும், சோப், முக ஆயில், லிப் பாம் போன்ற அழகுப் பொருட்களையும் முருங்கையிலிருந்து தயார் செய்கிறார்.

40 வகை முருங்கைப் பொருட்கள் இவரது ஒருங்கிணைந்த பண்ணையில் தயாரிக்கப்படுகின்றன. சாதனையாளர் விருது, சிறந்த தொழில் முனைவர் விருது உட்பட பல விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றிருக்கிறார் இந்த முருங்கை அரசி.

**********************

இட்லி மூலம் சேவை

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஆலாந்துறை வடிவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள். 85 வயதானவர். 30 வருஷமாக இட்லி கடை நடத்திவரும் இவர், ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார். உதவிக்கு யாரும் இல்லாமல் தனி ஆளாக இட்லி, சட்னி, சாம்பார் என்று தயாரித்து விற்பனை செய்கிறார்.

சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது இந்த இட்லிக் கடை. இவரது சேவையைப் பற்றி கேள்விப்பட்ட  மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பு, கிரைண்டர், மிக்சி, ஆகியவற்றை கமலாத்தாளுக்கு வழங்கினார். பாரத் கேஸ் மாதம் தோறும் இரண்டு சிலிண்டர்களையும், ஹெச் பி கேஸ் ஒரு சிலிண்டரையும் இந்த மூதாட்டிக்கு வழங்கி வருகின்றனர்.

மஹிந்திரா குழுமம் தற்போது இவருக்கு வீடு கட்டிக் கொடுத்து உள்ளது.  அன்னையர் தினத்தன்று இவரிடம் புதிய வீட்டின் சாவியை, மஹிந்திரா குழுமத்தின் திருப்பூர் முதன்மை செயல் அதிகாரி வழங்கினார்.

**********************

பழங்கள் மூலம் பரிவான சேவை

னநல ஆலோசகர் கல்யாணந்தி சச்சிதானந்தன்,ஏழை எளியோருக்கு பிறந்த மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக ‘சூப்பர் ஹூமன்ஸ்’ என்ற பெயரில் ஒர் நிறுவனம் துவங்கி அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருபவர். இலங்கையில் பிறந்தாலும் இவரது பூர்வீகம் தமிழ்நாடு. இவர் வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில்தான். அப்பா சச்சிதானந்தன் மருத்துவர், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறார்.

கல்யாணந்தி, ஃபார்மஸி பட்டப் படிப்பை முடித்து விட்டு, உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார்.  ‘புராஜக்ட் பியூச்சர் இந்தியா’ என்ற அமைப்பை  நிறுவி, சமூகத்தில் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்குத் தொடர்ந்து உதவி வருகிறார்.

தற்போது வறுமை கோட்டுக்கு கீழ், குடிசை பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு, சரியான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதனால், படிப்பில் கவனம் செலுத்த முடியாது என்பதால் ‘டாக்டர்ஸ் அவே’ என்ற பெயரில் குழந்தைகளுக்கு வாழை, மாதுளம், திராட்சை, பேரீச்சம் போன்ற பழங்களை வழங்கி வருகிறார். வாரத்திற்கு நான்கு நாட்கள் என, மாதத்திற்கு 16 நாட்கள் பழங்களை வழங்குவதன் மூலம் 1500 குழந்தைகள் பயனடைகிறார்கள்.

குடிசைப்பகுதியில் வசிக்கும் இளம் பெண் குழந்தைகளுக்கு, ரத்தசோகை பாதிப்பு அதிகம் இருக்கும். ‘இளவரசி’ என்ற திட்டம் மூலம் சானிட்டரி நாப்கின்கள், பேரீச்சம் பழங்களை வழங்கி வருகிறார்கள்.

குழந்தைகளின் கல்வி விஷயத்திலும் அதிக் கவன்ம் செலுத்தி வருகிறார் கல்யாணந்தி.

பத்மினி பட்டாபிராமன்
பத்மினி பட்டாபிராமன் மூத்த எழுத்தாளர். பத்திரிகையாளர். குறுநாவல்களும் சிறுகதைகளும் பிரபல பத்திரிகைகளில் நிறைய எழுதி முதல் பரிசும் பெற்றவர். இவற்றின் தொகுப்பாக இதுவரை ஏழு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். மருத்துவம், தோட்டக் கலை, புகைப்படக் கலை பற்றிய தொடர் கட்டுரைகள், கட்டுரைகள் மங்கையர் மலரிலும், கல்கியிலும், தினமணி நாளிதழிலும், வெளிவந்து கொண்டிருக்கின்றன உலக நாடுகளில் சுமார் 80 நாடுகளுக்கு மேல் சென்றிருப்பவர். தன் அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக, எழுதி வருபவர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக (VISITING FACULTY) 14 வருடங்களுக்கு மேலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் வகுப்புக்கள் நட்த்திய அனுபவம். சென்னை தொலைக்காட்சியில் அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அகில இந்திய வானொலி எஃப். எம்மில் செய்தி வாசிப்பாளர், பிக்ஸல் மாயா அனிமேஷன் பயிற்சி நிலையத்தின் மந்தவெளிப் பிரிவு இயக்குனர். மாணவர்களுக்கு மல்டிமீடியா, அனிமேஷன் வகுப்புக்கள் எடுத்து வருகிறார். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் வீணை வாசிப்பதிலும் ஆர்வம் உடையவர். சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். “உரத்த சிந்தனை” அமைப்பின் தற்போதைய தலைவர்.

Stay Connected

261,078FansLike
1,920FollowersFollow
11,300SubscribersSubscribe

Other Articles

போற்றி செல்வனும் போளியும்!

2
-ஆர். மீனலதா, மும்பை ஓவியம்: பிரபுராம் ஆவணி அவிட்டம் 11.08.22 “பொன்! பொன்னம்மா! கொஞ்சம் இங்க வரமுடியுமா?” லேடீஸ் க்ளப் பிரஸிடெண்ட்டுடன் பேசிக்கொண்டிருந்த ‘பொன்’ என்கிற பொன்மலர், மொபலை அணைத்து, “என்ன விஷயம்? ரொம்ப குழையற மாதிரி இருக்கே!” “நோ குழைசல்!...

ஊறுகாய் ரெசிபிஸ்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க! - ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி முள்ளங்கி ஊறுகாய் தேவை: முள்ளங்கி – 400 கிராம், கடுகு – 50 கிராம், மிளகாய்ப் பொடி – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி – 2 மேஜைக்கரண்டி,...

ஜெயித்திடடா!

0
கவிதை! - ஜி. பாபு, திருச்சி வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடமடா! அது வழங்கும் பாடங்கள் அதிகமடா! வரும் நாட்களை நினைத்துப் பாரடா! அது வளமாவது உன் கையில் இருக்குதடா! சிக்கனமாய் செலவு பண்ணுடா! வாழ்க்கை சீரும் சிறப்புமாயிருக்கும் பாரடா! எக்கணமும் யாரிடமும் ஏமாறாதேடா! வரும் இன்பத்தை...

நன்மைகள் அறிவோம்!

0
- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி தலைச் சளி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, ருசியின்மை, சிறுநீ்ர் தடங்கல், தாது பலவீனம் ஆகிய பிரச்னைகளைத் தயிர் போக்கும். நன்கு உறைந்து இனிப்புச் சுவையுடன் உள்ள தயிர்தான்...

கோயில் யானை வருகுது…

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க... ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம் - ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி   காந்திமதியின் காலுக்குச் செருப்பு! திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானைக்கு பக்தர்கள் சிலர்...