0,00 INR

No products in the cart.

காந்தியடிகளின் பொன்மொழிகள்!

-சுந்தரி காந்தி, பூந்தமல்லி

ஜனவரி 30, 1948 ஆம் ஆண்டு, நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்கள் இப்பூவுலகை விட்டு இன்னுயிர் நீத்தார். அவரை நினைவு கொள்ளும் வகையில், அவரது பொன்மொழிகள் இதோ நமக்காக…

 • மைதி மற்றும் சமாதானத்துக்காக சிந்திப்பதிலும் பேசுவதிலும், எதையேனும் செய்வதிலும் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.
  பாவத்தைதான் வெறுக்க வேண்டும். பாவம் செய்தவரிடம் அன்பையே செலுத்த வேண்டும்.

 • நான் வன்முறையை எதிர்க்கிறேன். வன்முறையால் விளைந்ததாகத் தெரியும் நன்மை தரற்காலிகமானது.
 • வலிமை என்பது உடல் உறுதியில் இல்லை. எந்தக் கட்டத்திலும் நிலைத்து நிற்கும் மன உறுதியில்தான் உள்ளது.
 • கோழை யாரையும் மன்னிப்பதில்லை. மன்னித்தல் என்பதே வீரத்தின் அடையாளம்.

 • உலகத்தை நீ எப்படியெல்லாம் மாற்ற நினைக்கிறாயோ, அந்த  மாற்றங்கள் எல்லாம் முதலில் உனக்குள் நிகழ வேண்டும்.
 • வன்முறையால் கிட்டும் வெற்றி சில நொடிகளே நிலைக்க கூடியது. எனவே அது தோல்விக்கு சமமானது.
 • கண்ணுக்கு கண் என்று பழி தீர்த்துக் கொண்டு போனால், உலகமே குருடாகி விடும்.
 • கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ, அவனே சரியான குருடன்.
 • எப்போதும் உண்மையை மறைக்காது சொல்லக்கூடிய மனத்திடம் வேண்டும்.

 • மகிழ்ச்சி என்பது பெறுவதில் இல்லை, பிறருக்குப் கொடுப்பதில்தான் இருக்கிறது.
 • எப்படி வேண்டுமானாலும் பணத்தை சம்பாதித்து விடலாம் ஆனால் அதை ஒரு அறிவாளியால்தான் காப்பாற்ற முடியும் .
 • செலவழிக்கும் பணத்துக்கு கணக்கு எழுதிவை, செலவழித்தது அவசியம்தானா என்று சிந்தித்துப்பார். சிக்கனம் தானாகவே வந்துவிடம் .
  ஒருவன் தனக்குத் தேவையற்றதை விலைக்கு வாங்கினால், அது அவன் பணத்தை அவனே திருடுவதற்கு சமமாகும் .
 • தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை .

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா  “கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கருணை காட்டும் கஸ்தூரி சுகாதாரத் துறையில் 39 வருடங்களாக திறம்படப் பணியாற்றி வரும், சமுதாய நல செவிலியரான திருமதி. கஸ்தூரி மணிவண்ணன், தனது சமூகப் பணிக்காக  மத்திய அரசு வழங்கும்...

ஜில்லென்ற மூணாறு டூர்!

வாசகர் சுற்றுலா! -ஜெயகாந்தி மகாதேவன் சென்னை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை என் நெருங்கிய தோழி சியாமளா சிவராமன் தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரித்துவிட்டு அவங்க  கூறியது, "ஜெயா, ஸ்டெர்லிங் ஹாலிடேஸ்...

ஜோக்ஸ்!

படங்கள் : பிள்ளை "ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!” "நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!" -வி.ரேவதி,தஞ்சை -----------------------------                    ...