இளம் புயல் குட்டி சாய்னா!

இளம் புயல் குட்டி சாய்னா!
Published on
-ஆர். மீனலதா, மும்பை

குட்டி சாய்னாவா? யார்? குட்டி சாய்னா என்றழைக்கப்படும் 13 வயது நய்ஷா கெளர், மும்பை செம்பூர் St. gregarious High School 8வது வகுப்பு படித்து வரும் சுட்டி மாணவி.

சமீபத்தில் ஆல் – இந்தியா சப்- ஜுனியர் Ranking பேட்மிண்டன் விளையாட்டுப் போட்டி U-15 கேட்டகிரியில் விளையாடி முதலாவதாக வந்து கோப்பையைப் பெற்றுள்ளார்.

குட்டி சாய்னா எவ்வாறு?
துகோனே அகாடமியில் பேட்மிண்டன் பயிற்சி பெற்று கொண்டிருக்கையில், சாய்னா நேஹ் வாலின் Biographical Sports Film இல் சாய்னாவாக நடிக்கவிருந்த "பரினிதி சோப்ரா", நய்ஷாவின் விளையாட்டைக் கண்டு டைரக்டரிடம் கூற, படத்தில் சிறு வயது சாய்னாவாக நடிக்கத் தேர்வானார். படப்பிடிப்பு சுமார் ஒன்றரை மாதங்கள் நடந்தது. சாய்னாவின் மிகப் பெரிய விசிறியான நய்ஷா, படத்தில் அவரது சிறு வயது தோற்றத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

பேட்மிண்டன் ஆர்வம்:
பேட்மிண்டன் விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்ட நய்ஷா, தனது 7வது வயதில் இருந்து 'மும்பை ஜித்தேஷ் பதுகோனே ஷட்டிலர்ஸ் அகாடமி' மற்றும் 'ஹைதராபாத் புலேலா கோபிசந்த் பேட்மிண்டன் அகாடமி' இரண்டிலும் பயிற்சி பெற்று வருகிறார்.

படிப்பு காரணம், குடும்பம் மும்பையில் வசிக்க, நய்ஷாவின் தகப்பனார் தனது மும்பை வேலையை நய்ஷாவின் பயிற்சிக்காக, ஹைதராபாத்திற்கு மாற்றிக் கொண்டுள்ளார்.

பெற்றோரின் ஊக்கம் ஒருபுறம், பள்ளிக்கூடத்தின் ஊக்கம் மறுபுறம்.
மும்பை – ஹைதராபாத் – மும்பை என பயிற்சியின் பொருட்டு அங்குமிங்கும் சென்றாலும், நய்ஷாவிற்கு ஆதரவளிக்கும் வகையில், அவரது பள்ளிக்கூடம் அவரை அன்றே ஆன்லைன் வகுப்பு வழியே படிக்க உதவியது சிறப்பானதொரு விஷயமாகும்.

இந்தியாவின் தலைமை கோச் ஆன கோபி சந்த் மற்றும் கோச் பதுகோனே இருவரும் நய்ஷாவின் திறமை, உற்சாகம், விளையாட்டில் முழு அர்ப்பணிப்பு ஆகியவைகளைக் கண்டு பாராட்டியதோடு, எதிர்காலத்தில் பெரிய பேட்மிண்டன் சாம்பியனாவார் என்று வாழ்த்து தெரிவித்துள்ளது பெருமைக்குரிய விஜயம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com