0,00 INR

No products in the cart.

ஜோக்ஸ்!

ஓவியம் : பிரபுராம்

“நம் மன்னர் போரிலிருந்து வருகிறாராம். நெற்றிக்கு திலகம் தயார் செய்யவா?”
“வேண்டாம். உடம்புக்குத் தைலம் தயார் செய்!”
-நிலா, திருச்சி

………………………………………………………….

“டாக்டர் தூரத்துல வர்ற பொண்ணுங்க எல்லாம் மங்கலா தெரியுது. இது எட்ட பார்வையா? கிட்ட பார்வையா?””
“கெட்ட பார்வை!”
-நிலா, திருச்சி

………………………………………………………….

“இந்த ஏரியாவுல தண்ணி நல்லா வருமா?”
“வெள்ளமே வரும்!”
-நிலா, திருச்சி

………………………………………………………….

“மன்னா! போர் பீரங்கிகளுக்கு போடும் குண்டுகள் தீர்ந்துவிட்டன!”
“கவலை வேண்டாம் மந்திரி! மகாராணி செய்திருக்கும் குலோப்ஜாமூன் உருண்டைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்!
-நிலா, திருச்சி

………………………………………………………….

 “பதுங்கு குழிக்குள் இருந்த நம் மன்னர் எதிரிநாட்டு மன்னனிடம் எப்படி பிடிபட்டார்?”
“மகாராணி பதுங்குகுழியை சுற்றி மார்கழி கோலம் போட்டிருந்தாராம்!”
-நிலா, திருச்சி

………………………………………………………….

“அந்த மந்திரி வீட்டுக்கு ஏன் திருட போக வேணாம்னு சொல்ற?”
“நேத்துதான் அவர் வீட்டுக்கு ரெய்டு வந்தாங்க!”
-நிலா, திருச்சி

………………………………………………………….

“மந்திரி ஏன் சார் இவ்வளவு பெரிய மரத்தை நடறாரு?”
“மரம் நடு விழான்னு அறிவிச்சுட்டு செடியை நடமாட்டாராம்!
-ஆர். கற்பகபூமி, திருநெல்வேலி

………………………………………………………….

 “நீங்க தொடர்ந்து நாலு வாரம் ரெஸ்ட்ல இருக்கணும்.”
“அது முடியாதே டாக்டர்! ஞாயிற்றுக்கிழமை ஆபீஸ் கிடையாதே?”
-ஆர். கற்பகபூமி, திருநெல்வேலி

………………………………………………………….

“டாக்டர் உங்க தெர்மாமீட்டர் மிகவும் சக்தி வாய்ந்தது!”
“எப்படி?”
“என் மனைவியின் வாயை மூட வைத்து விட்டதே?”
-ஆர். கற்பகபூமி, திருநெல்வேலி.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா  “கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கருணை காட்டும் கஸ்தூரி சுகாதாரத் துறையில் 39 வருடங்களாக திறம்படப் பணியாற்றி வரும், சமுதாய நல செவிலியரான திருமதி. கஸ்தூரி மணிவண்ணன், தனது சமூகப் பணிக்காக  மத்திய அரசு வழங்கும்...

ஜில்லென்ற மூணாறு டூர்!

வாசகர் சுற்றுலா! -ஜெயகாந்தி மகாதேவன் சென்னை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை என் நெருங்கிய தோழி சியாமளா சிவராமன் தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரித்துவிட்டு அவங்க  கூறியது, "ஜெயா, ஸ்டெர்லிங் ஹாலிடேஸ்...

ஜோக்ஸ்!

படங்கள் : பிள்ளை "ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!” "நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!" -வி.ரேவதி,தஞ்சை -----------------------------                    ...