0,00 INR

No products in the cart.

கல்லாதது கடலளவு!

மினி தொடர் – 3
– நாராயணி சுப்ரமணியன்
மீன்கள் தண்ணீர் குடிக்குமா?

நீருக்குள்ளேயே வாழும் மீன்கள் தனியாகத் தண்ணீர் குடிக்கவேண்டுமா என்பதே முதல் கேள்வி. மீன்கள் எதற்காகத் தண்ணீர் குடிக்க வேண்டும்?
வெளியில் உள்ள நீர் மற்றும் உடலுக்குள் உள்ள திரவங்களைச் சமப்படுத்த வேண்டியிருந்தால், அந்தச் சூழலில் வாழும்போது மீன்கள் தண்ணீர் குடிக்கவேண்டும்.

ஒரு உருளைக்கிழங்கை வட்டமாக வெட்டி, சில துண்டுகளை உப்புத்தண்ணீரிலும் சில துண்டுகளை சாதா நீரிலும் போட்டுவைத்துவிடுங்கள். காலையில் எழுந்து பார்த்தால் உப்புநீரில் இருக்கும் துண்டு நீரை இழந்து சுருங்கியிருக்கும். சாதா நீரில் உள்ள துண்டு நீரை உறிஞ்சியிருக்கும். திரவங்களின் பொதுவான தன்மை அது.

இதை மீன்களின் சூழலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், கடல்நீரில் இருக்கும் மீன்கள், உடலில் இருந்து வெளியேறும் நீரின் அளவைச் சமன் செய்ய, நீரைக் குடிக்கவேண்டும், குடிக்கும் நீரிலிருக்கும் கூடுதல் உப்பு உடலை பாதிக்காமல் இருக்க சரியான முறையில் உப்பையும் வடிகட்டி வெளியேற்றிவிடவேண்டும். ஆகவே கடல்மீன்கள் நீர் குடிக்கின்றன.

நன்னீர் மீன்களுக்கு அந்தப் பிரச்னையெல்லாம் இல்லை, உடலின் மேற்பரப்பின்மூலம் கொஞ்சமாக உறிஞ்சப்படும் நீரே அவற்றின் உறுப்புகள் இயங்கப் போதுமானது.

சுனாமி எப்படி உருவாகிறது?

சுனாமி என்ற சொல்லுக்கு ஜப்பானிய மொழியில், “துறைமுக அலை” என்று பெயர். தமிழில் இது ஆழிப்பேரலை என்று அழைக்கப்படுகிறது.
கடலுக்கடியில் உள்ள தரையில் ஏற்படும் நிலநடுக்கம், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு ஆகியவற்றால் கடல் தரையில் மாற்றங்கள் ஏற்படும்.

இந்த மாற்றங்களால் கடல்நீர் மேல் நோக்கி தள்ளப்படும். இப்படி தள்ளப்படும்போது அதனால் உருவாகும் அலையின் உயரம் 30 சென்டிமீட்டர் மட்டுமே இருக்கும், ஆனால், அதில் உள்ள நீரின் அளவு மிகவும் அதிகம். இந்த அலை வேகமாகப் பயணிக்கக்கூடியது. மணிக்கு 800கிலோமீட்டர் வேகத்தில் இந்த அலை விரைவாகப் பயணித்துக் கரையை நோக்கி வருகிறது.

ஆழம் குறைவான கடற்கரைப் பகுதிகளில், உராய்வு காரணமாக, அலையின் வேகம் திடீரென்று குறையும், ஆனால், இதில் உள்ள நீர் மற்றும் பின்னால் வரும் அலைகளின் வேகம் உடனே குறையாது. அவை முண்டியடித்துக்கொண்டு மேலெழும்புகின்றன. இது உயரமான ஒரு அலையாகக் கடற்கரையைத் தாக்குகிறது. அதையே நாம் சுனாமி என்கிறோம்.

மீன்கள் எத்தனை காலம் வாழும்?

மீன்கள் சராசரியாக 3 முதல் 7 ஆண்டுகள்வரை வாழக்கூடியவை. இது மீனின் சராசரி அளவு, உணவுப்பழக்கம், அவை வாழும் சூழல், அவற்றின் உணவு ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.

க்ரீன்லாந்து சுறா என்ற ஒருவகை சுறா இனம், அதிக வயது கொண்ட முதுகெலும்பு உயிரி என்ற பெருமையை சமீபத்தில் பிடித்துள்ளது. இந்த சுறா இனம் 400 ஆண்டுகள் வரை வாழுமாம்!

னினும் உலகில் உள்ள உயிரினங்களிலேயே அதிக வயதான விலங்கு என்ற பெருமை அதற்குக் கிடையாது. “மிங்” என்று பெயரிடப்படுள்ள ஒருவகை மட்டி சிப்பி இனம், 500 ஆண்டுகள் வாழ்ந்து அந்தக் கிரீடத்தைத் தட்டிப் பறித்துள்ளது! இதுபோன்று நீண்டநாட்கள் வாழும் தன்மை எதனால் வருகிறது என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். குறிப்பாக சுறா மீன்களின் உடலில் பல சிறப்பம்சங்கள் உண்டு என்பது ஏற்கெனவே கண்டறியப்பட்டிருப்பதால், அதற்கும் அதிக வாழ்நாளுக்கும் தொடர்பு இருக்குமா என்பதையும் விஞ்ஞானிகள் ஆராயத் தொடங்கியிருக்கிறார்கள்.

நாராயணி சுப்ரமணியன்
நாராயணி சுப்ரமணியன் கடல்சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்ற கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளராவார். சிறந்த ஆய்வுக்கான இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் ஆய்வுக்கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர். பிரபல இதழ்கள், நாளிதழ்களிலும், குழந்தைகளுக்கான அறிவியல் இதழ்களிலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பறக்கும்  பாவைகள்!

 பகுதி -1 எங்களாலும் பறக்க முடியும்!  -ஜி.எஸ்.எஸ் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோ மாநிலத்தில் உள்ளது சிலிக்கான் பள்ளத்தாக்கு.  இங்கு மிக அதிக எண்ணிக்கையில் பிரபல மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன. அதேபோல் இந்தியாவில் கர்நாடகத் தலைநகரில் அதிக...

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி...  பகுதி - 4 இந்தப் பாடலைக் கேட்கும்போது அன்றைய சென்னையின் பஸ் பயணம் நம் கண்முன்னே அழகாய் நிழலாடும். இந்தப் பாடலில் ஒரு புதுமையை புகுத்தி இருப்பார். இரண்டு குரல்கள் ஒரே...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்   ஆஸ்கார் விருது பெண் திரைப்பட இயக்குனர்கள்! சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதை வென்ற முதல் பெண் இயக்குனர் யார் தெரியுமா? அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரின் பிகிலோ. (Kathryn Bigelow) என்பவர். உலகம் முழுவதும்...

 ‘யுவர் ஆனர் ரோபோட் அவர்களே!’

 பகுதி -2 -ஜி.எஸ்.எஸ். ரோபோட் என்றதும் ஏதோ மனிதன் போன்ற உருவம் ஒன்று உங்களுக்கு மனதில் தோன்றியிருக்கலாம்.  ஆனால் மருத்துவமனைகளில் ஆபரேஷன் செய்யும் ரோபோட் வேறு ஜாதி.  ஒரு ஆக்டோபஸைப் போன்று தோற்றமளிக்கும். இதன் கைகள்...

பாட்டொன்று கேட்டேன்…

இது மங்கையர் மலரின் விவித பாரதி… பகுதி-3 மங்கையர் மலர் விவித பாரதியில் இன்று நாம் கேட்க இருக்கும் பாடல்... தலைமுறை தலைமுறையாய் கேட்டு ரசிக்கும் பாடல் . உலகம் இருக்கும் வரை தேவைப்படும் கருத்துகள்...