0,00 INR

No products in the cart.

சரும கருமை குறைய…

-ஜெனிபர் டேனியல்

உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் உகந்த ஒரு மூலிகைப் பொக்கிஷம் கற்றாழை.

நாம் அனைவருமே நம் வாழ்வில் நிச்சயம் சரும பிரச்சனைகளை சந்திப்போம். இப்படி சந்திக்கும் சரும பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பல்வேறு சரும பராமரிப்புபொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால் கெமிக்கல் கலந்த சரும பராமரிப்பு பொருட்கள் அனைவருக்குமே பொருந்தாது. சிலருக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதற்கு சிறந்த மாற்று வழி இயற்கைப் பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்பு கொடுப்பது தான். அப்படி பல சரும பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் ஓர் பொருள் தான் கற்றாழை ஜெல்.

ஆலோவேரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட கற்றாழை, அழகு, ஆரோக்கியம் மற்றும் உணவு வணிகத்தில் கோலோச்சி வரும் காயகற்ப மூலிகை. ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட கற்றாழை ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் வளர்கிறது. இந்தியாவில் ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் அதிகமாகச் சாகுபடி ஆகிறது. தமிழ்நாட்டில் சேலம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இது அதிகம் பயிரிடப்படுகிறது.

கற்றாழை பெரும்பாலான வீடுகளிலும் பொதுவாக வளர்க்கப்படும் ஒரு செடி. இந்த கற்றாழையில் ஏராளமான மருத்துவ பண்புகள் உள்ளதல், இது பல வீட்டுவைத்தியத்தில் மட்டுமின்றி, பல சருமபராமரிப்புபொருட்களின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

கண்களின் அழகைக் கெடுக்கும் வண்ணம் கண்களைச் சுற்றி வரக்கூடியதுதான் கருவளையங்கள். ஒருவருக்கு கருவளையங்கள் தூக்கமின்மை, கண்களில் அதிகப்படியான அழுத்தம் மற்றும் அதிகளவு காப்ஃபைன் உட்கொள்ளல் போன்றவற்றால் வருகிறது. இப்படி வரும் கருவளையங்களைப் போக்க கற்றாழை ஜெல்லை தினமும் இரவு படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதனால் கருவளையங்கள் மறைவதோடு, முகமும் பொலிவோடு காணப்படும்.

கற்றாழை ஜெல்லில் அலோயின் உள்ளது. இது சருமத்தில் உள்ள கருமையைக் குறைக்க சிறப்பாக செயல்படும் ஒரு பொருள். அதற்கு கற்றாழை ஜெல்லை கருமையாக இருக்கும் பகுதியில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், கருமையானது விரைவில் குறைந்துவிடும்.

கற்றாழை ஜெல்லானது சருமத்தில் கொலாஜனை உருவாக்கும் செல்களை அதிகரிக்கும். மற்றும் இதில் வைட்டமின் ஈ மற்றும் சி அதிகம் உள்ளது. ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் பால் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

கற்றாழை ஜெல் முகப்பருவைக் குறைக்க பெரிதும் உதவி புரியும். அதற்கு கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் காலை மற்றும் மாலையில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்து வந்தால், முகமானது பருக்களின்றி காணப்படும்.

ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து, தினமும் இரவு தூங்கும் முன் பஞ்சுருண்டையில் அந்த கலவையை நனைத்து முகத்தைத் துடைக்க வேண்டும். இதனால் முகத்திற்கு மேக்கப் போட்டிருந்தால், அது எளிதில் வெளியேறி, முகம் பளிச்சென்று இருக்கும்.

1 COMMENT

  1. கருமை குறைய கூறப்பட்ட வழிகள் எளிமையாக பின்பற்றக்கூடியதாய் இருந்தது. கடைப்பிடித்து பலன் பெறுவோம் என்பதில் ஐயமில்லை.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...

மால் எனும் மாயா பஜார்!

-மஞ்சுளா சுவாமிநாதன் என் குடியிருப்புல சுமார் பதினஞ்சு வருஷ  பழசான செடான் கார் ஒண்ணு இருக்கு. ஆனால், அந்த காருக்கும் மாலுக்கும் என்ன சம்பந்தம்? அத தெரிஞ்சுக்க நீங்க வெயிட் பண்ணனும். போன வாரம் சென்னையில...

ஐம்பது வயதிலும் அசத்தும் இரும்புப் பெண்மணி!

சாதனை! -தனுஜா ஜெயராமன். பெண்கள் நினைத்தால் எந்த வயதிலும் சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மஹாலக்ஷ்மி  ரவி.  வேலைக்குச் சென்று கொண்டே வீட்டையும் திறம்பட கவனித்துக் கொண்டு சைக்கிளிங்,...

ரவீந்திரநாத் தாகூர் என்கிற பன்முகக் கலைஞர்!

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ரவீந்திரநாத் தாகூர் இந்தியா மற்றும் வங்காள நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவர். இருநாடுகளுக்கு தேசிய கீதத்தை எழுதிய ஒரே நபர் இவரே. இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர். ரவீந்திரநாத்...