0,00 INR

No products in the cart.

உணவு உண்ணும் முறை!

-இந்திராணி தங்கவேல், சென்னை

ன்றைய அவசர உலகில் உணவுப் பழக்கமும், உண்ணும் முறையும் மாறியதன் காரணமாக பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. சரியான முறையில் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். முறையாக சாப்பிடுவதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

இலைகளில் மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளதாக ஆயுர் வேதம் போதிக்கின்றது. இலைகளில் உண்ணும்போது சுத்தம் கடைபிடிக்க இயலுகின்றது என்பது மட்டுமல்லாமல், ஒருவர் உண்ட பின் அதில் மற்றொருவருக்கு பரிமாறுவதும் இல்லை. ஆதலால் வாழை போன்ற தீங்கற்றதும் சுத்தமானதுமான இலைகளில் உணவு அருந்துதல் நலம் .

உட்கார்ந்த நிலையில் உணவருந்த வேண்டும்.

ணவருந்தும் கலாச்சாரம் மாறி வர … இன்று, நம் , நடந்தும் நின்று கொண்டும் உணவருந்துகின்றோம். குழந்தைகளுக்கும் அவ்வாறு உண்ண பழக்குகின்றோம் .

சாணம் பூசிய தரையில் தடுக்கில் சப்பணமிட்டு உட்கார்ந்து முன்பக்கப் பார்வையுடன் உணவருந்த வேண்டும் என்பது தொன்றுதொட்டு உள்ள பழக்கம்.

தரையில் பலகையிட்டு அதில் சப்பணமிட்டு அமர்ந்தும் நம் நாட்டினர் உணவு அருந்துகின்றனர். அவ்வாறு அமர்ந்து உண்பதில் உடலுக்கு சில பயன்கள் உள்ளதாகவும் நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர்.

நாம் உணவருந்தும்போது உடலின் மூட்டுகளில் அசைவு ஏற்படுகின்றது என்று இன்றைய மருத்துவம் அறிவிக்கின்றது. இந்த அசைவு மூட்டுகளுக்கு அதிக பாரம் உண்டாக்கும். அமர்ந்த நிலையில் உணவருந்தினால் இந்த பாரத்தை குறைக்க இயலும்.

மேலும், நின்றுகொண்டு உணவருந்தினால் மிதமிஞ்சி உணவருந்த வாய்ப்புண்டு. அதிகமாக உண்பதும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதும் நாம் அறிவோம். வயிறு நிரம்ப உண்ணாதவர்கள் பல நோய்களில் இருந்தும் விலகி இருப்பார்கள் என்று மருத்துவத் துறை பலவழியில் அறிவித்துள்ளது.

பசியறிந்து உண்ண வேண்டும்.

சீரான ஆரோக்கியத்துக்கு அறுசுவை உணவு உண்பது அவசியமானது. அதேநேரம், ஆறு சுவையுடைய உணவுகளையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது. ஒரு நேரத்துக்கு ஒரு சுவை உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும் .

காபி, டீ ,ஐஸ்கிரீம், பழச்சாறு போன்றவற்றை, உணவு உண்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவோ ,சாப்பிட்ட உணவு செரித்த பிறகோ உட்கொள்ள வேண்டும்.

காலநேரம் பார்க்காமல் உடனுக்குடன் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பது பெரும் தவறு .முதலில் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகிவிட்டதை அறிந்த பிறகே, அடுத்த வேளை உணவை சாப்பிட வேண்டும்.

நன்கு பசி எடுத்தால் நான்கு வேளை கூட சாப்பிடலாம் தவறில்லை. ஆனால், பசி எடுக்கவில்லை என்றால், ஒரு உணவு பிடித்திருக்கிறது என்பதால் ஆசைக்காக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்தப் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொண்டால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். உடல்நலக் குறைவால் அடிக்கடி மருந்து சாப்பிட வேண்டிய தேவை ஏற்படாது.

நொறுங்கத் தின்றால் நூறாண்டு வாழ்வோம்.

தைச் சாப்பிட்டாலும் சிறிது சிறிதாக வாயில் போட்டு நன்றாக மென்று நிதானமாக விழுங்க வேண்டும் .அப்போதுதான் அந்த உணவின் சுவைக்கு ஏற்ற உமிழ்நீர் சுரந்து உணவுடன் கலந்து செரிமானம் எளிதாகும்.
உணவை உண்ணும்போது, தவம் போல முழு கவனத்தையும் உணவில் செலுத்தி, ரசித்து ருசித்து நன்றாக மென்று நிதானமான சாப்பிடுவதற்கு குறைந்தது 20 நிமிடங்களாவது எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரவு உணவை வயிறு நிரம்ப உண்டால் உடனே தூக்கம் வரும். அதனால் இரவு மிதமாக உண்ணுவதே நல்லது. இரவு உணவுக்குப்பின் அரைக்காதம் நடக்க வேண்டும்.

எப்போதும் இரவு வயிறு நிரம்ப உண்பவர்களில் சிலருக்கு வயிற்றுக் கோளாறுகளும் இருதயம் சம்பந்தமான நோய்களும் எளிதில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அண்மையில் ஆராய்ச்சிகள் தெளிவாக்கி உள்ளன.

மேலும், இரவு மிதமாக உண்பவர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள் என்றும் கண்டறிந்துள்ளனர். ஆதலால், இரவு உணவை 8 மணிக்குள் சாப்பிட்டு விட்டு இரண்டு மணி நேரம் கழித்த பிறகே, தூங்குவதற்கு செல்ல வேண்டும்.

உணவை மெல்லும்போது, வாயைத் திறந்தபடி அசை போடாமல், வாய் மூடிய நிலையிலேயே மென்று சாப்பிட வேண்டும். இதன் மூலம் உணவு பைக்குள் அதிகப்படியான காற்று புகுவதையும், வாயுத் தொல்லையையும் தடுக்கலாம்.

உடனே சமைத்து, உடனே சாப்பிடு.

(பழைய சாதத்தைத் தவிர,) முதல் நாள் செய்த உணவு அமுதமாக இருந்தாலும் ,அதை அடுத்த நாள் உண்ணக்கூடாது என்பது சித்தர்கள் வாக்கு.

முதல்நாள் செய்தவற்றை குளிர்பதனப் பெட்டியில் வைத்து மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் எல்லா வீடுகளிலும் இருக்கிறது. இவ்வாறு சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவு பொருட்கள் பல உள்ளன.

உதாரணமாக அசைவ உணவுகள், கிழங்கு வகைகள், கீரை வகைகள் போன்றவற்றை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவற்றை மாலைப் பொழுதிலும், இரவிலும் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

இம்முறைகளை பின்பற்றினோமானால், நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம் என்பது உறுதி.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வெயிலுக்கேற்ற குளுகுளு மோர்! தேவையான பொருட்கள்: மோர்-1கப், இஞ்சிச் சாறு  - 2 டீஸ்பூன், விதை நீக்கிய நெல்லிக்காய் - 3, நாட்டுச் சர்க்கரை-1டேபிள் ஸ்பூன், புதினா - 1 பிடி, உப்பு -...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் இந்தியாவின் முதல் பெண் ஸ்கிப்பர் “கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போது என் பெயரை அழைத்த கேப்டன் அருண், என்னை கேப்டன் ஹரிதா என்று அழைத்து புல்லரிக்க  வைத்தார்.’ என்கிறார்...

ஒரு நாள் முழுவதும் ப்ளாஸ்டிக்கை தவிர்க்கும் சவாலை ஏற்கிறீர்களா?

-தனுஜா ஜெயராமன் ப்ளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருட்களின் தீமைகள் குறித்து அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கிய நிகழ்வாக வரும் மே 25 ம் தேதி ப்ளாஸ்டிக், குறிப்பாக டிஸ்போசபிள்...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

கடவுளை வணங்குவதும் பழக்கமே! தினமும் காலை கடமைகளை செய்துவிட்டு குளித்து பின் கடவுளை வணங்கவும். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். சின்ன, சின்னதாக 2 வரியில் சொல்லும் ஸ்லோகங்கள் சொன்னாலும் பக்தியுடன் சொல்ல பழக்குங்கள். எனக்கு அதற்கு...

ஜோக்ஸ்!

ஓவியம்: பிரபுராம்   “உன் வீட்டுக்காரர் ஜெயிலே கதின்னு இருக்காரா? அவர் என்ன ஆயுள் கைதியா?” “இல்லை… ஜெயில் வார்டனா இருக்காரு!” -ஆர். மகாதேவன், திருநெல்வேலி =================== “வோட்டுப் போட வந்தவங்களை ஏன் திரும்பிப் போகச் சொல்றாங்க?” “ஏற்கனவே 120 சதவிகிதம் வோட்டு...