0,00 INR

No products in the cart.

அன்புவட்டம்!

காலம் காலமாய் கச்சேரி கேட்டாலும், கல்யாணி, காம்போதி அலுக்கவில்லையே… எப்படி?
-சீனு சந்திரா, சென்னை

ல்யாணி, காம்போதி இரண்டுமே கனமான ராகங்கள்… ஐ மீன்
ஹை க்ளாசிக்கல். அதனால் அவை தரும் நேர்வள அதிர்வலைகளின் வீர்யமும் மகத்தானவையாம். கல்யாணி மங்களமான ராகம். அதனால் அம்பாள் பற்றிய கீர்த்தனைகள் பலவும் இந்த ராகத்தில் அம்சமாக அமைந்துவிடுமாம். அதுமட்டுமல்ல… கல்யாணி ராகமானது, யோகா, தியானம் போன்றவற்றுக்குச் சிறந்ததாம்.

அதேபோல, சிவனைத் துதித்து மகிழ, ஏற்ற ராகம் காம்போதியாம்! சிறந்த சிவபக்தனான ராவணன் வீணையில் காம்போதி ராகத்தை வாசித்தபோதுதான் சிவபெருமான் அதில் லயித்து வரங்களைச் சும்மா அள்ளி வீசினாராம்.

பார்வதிக்கும் பிடித்த, பரமனுக்கும் பிடித்த ராகங்கள் அல்லவா? அதனால்தான் பக்தி உணர்வுகள் தூண்டப்பட்டு அவற்றைக் கேட்கும்போது அலுக்காமல் ரசிக்க வைக்கின்றன போலும்!

அதுமட்டுமல்ல… இந்த இரண்டு ராகங்களுக்கும் ஹீலிங் எஃபெக்ட்டும் உண்டாம்!

(அம்மாடி… இந்த ஒற்றைக் கேள்விக்கு என்னல்லாம் ஹோம்-வர்க் பண்ண வேண்டியிருக்கு! ஈஸியா கேளுங்கம்மா… ப்ளீஸ்! வெயில் வேற!)

***************************

விலைவாசி விஷம் போல ஏறி வருகிறதே… எப்படிச் சமாளிக்கிறீங்க அனு மேடம்?
– ச.சிவசங்கரி சரவணன், செம்பனார்கோவில்

ங்க எல்லாரையும் போலதான்… ‘சிக்கனம்’ என்கிற பூஸ்டர் தடுப்பூசி போட்டு! வேற வழி?

உங்களுக்கு சிக்கன மாமியார் Vs சமத்து மருமகள் கதை தெரியுமோ? லெட் மி டெல் எ குட்டி ஸ்டோரி!

இப்படித்தான் ஒரு மருமகள், நல்ல குணவதி, சாது… ஆனா சமையல் விஷயத்துல மைனஸ் மார்க்கு வாங்குற பொண்ணு.. ஒருநாள் வழி தெரியாமல், சமையல் அறைக்குள்ள காலை வெச்சுட்டாளாம்.

அப்பதான் தன்னோட மாமியார்காரி, எதையும் வீணாக்காமல் அதேசமயம் ருசியாக சமைக்குற பழக்கம் உள்ளவங்கன்னு தெரிஞ்சுக்கிட்டாளாம். கேரட் தோல், செளசெள தோல்ல துவையல் அரைக்கிறது, தர்பூசணியின் வெள்ளைப் பகுதியில வடாம் போடறது, ஆரஞ்சுத் தோல்ல ரசம், கொஜ்ஜு செய்வது, பலாக் கொட்டையை வேக வெச்சு வடை செய்றது, புளியம் துளிர்ல தொக்கு செய்றதுன்னு மாமியார்க்காரி அசத்தறதைப் பார்த்து நாம்பளும் அப்படி ஏதாவது புதுமையா செய்யணும்னு ஆசைப்பட்டா… ஆசை என்ன? சிக்கனத்துல அவங்களை மிஞ்சணும்னு சபதமே எடுத்துக்கிட்டா ரகசியமா…

றுநாள் மாமியார் தூங்கிக்கிட்டு இருக்குறப்போ, கிச்சனுக்குள்ள போய், கலக்கலா பஜ்ஜி செஞ்சா. சுடச்சுட ஒரு பிளேட் நிறைய அள்ளி வெச்சு,

“அத்தே… பஜ்ஜி சாப்பிடுங்க…”ன்னு பரிவுடன் சொன்னா. மாமியாரும் “இதென்னடா… பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை?” ரேஞ்சுல ஒரு பஜ்ஜியை எடுத்து ஆசையா கடிச்சாங்க… “லொடக்’னு ஒரு சத்தம்! வாயெல்லாம் ரத்தம்!  நம்ப சிக்கன எல்போர்ட் மருமக, தேங்காய்த் துருவிய பின் வேஸ்டாக இருக்குமே மூடி? அதுல செஞ்ச ‘கொட்டாங்குச்சி பஜ்ஜி’ அது!

அப்போ போனதுதான் மதர்-இன்-லாவின் பல்லும் சொல்லும் லொடக்!

***************************

உண்டியலில் பணத்தைப் போட்டுவிட்டு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் பக்தர்களைக் குறித்து…
-எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி

து ஒண்ணும் பெரிய தப்பா தெரியலையே கெஜலட்சுமி மேடம்?

“சம்பாதிக்கணும்’னுதானே கேட்கிறாங்க? ஓசியில எங்கிருந்தோ வந்து கொட்டணும், உழைக்காம யார் சொத்தோ மடி மேல வந்து விழணும்னு வேண்டலையே? அது ஒரு belief system. பணம் இருந்துவிட்டால், பாதிப் பிரச்னை தீர்ந்துவிடும் என்கிற மனோபாவம் உள்ள எளிய மனிதர்களிடம் கடவுள் தருவார் என்ற நம்பிக்கையும் ஒட்டிக் கொண்டுவிட்டது.

ஆனால் ஒரு விஷயம், உண்டியலில் பணம் போட்டாலும்,  போடாவிட்டாலும், யாருக்கு, என்ன, எவ்வளவு எப்போ தரணும்னு அவர்கிட்ட ஒரு டைம்-ஃப்ரேம் இருக்கு! அதன்படி கண்டிப்பாகக் கொடுத்துவிடும் நேர்மையான, ஆனால் ஒரு டைப்பான புதிர் ஆசாமி அவர்! எனவே… இப்ப என்ன கிடைச்சுருக்கோ, அதுக்கு ‘பிக் தாங்க்ஸ்’ சொன்னாலே போதும். டீல் எல்லாம் தேவையில்ல… ஏன்னா அவரே ஒரு  ‘BIG FEEL.’

***************************

கிரிக்கெட்டின் விஸ்டன் பட்டியலில் இடம் பெற்றுள்ள ரோஹித் சர்மா, பும்ரா…?
-வாசுதேவன், பெங்களூரு

பில்தேவ், ஸ்ரீநாத், ஸகீர்கான்க்குப் பிறகு நமக்குக் கிடைச்ச மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா! யாக்கர்கள் வீசுறதுல முடிசூடா மன்னன்.

ரோஹித் சர்மா, ஒரு நாள் பந்தயப் போட்டிகளில், தலை சிறந்த ஒப்பனர்.

இவங்க இரண்டு பேரும் லிஸ்ட் ஆனதுல ஆச்சரியம் லேது! சர்ப்ரைஸ் நஹி! ஆனா, மும்பை இன்டியன்ஸ் ஐ.பி.எல்ல தொடர்ந்து தோத்தாங்குளி ஆறதும் சீஸன்ல மொக்கை போடுறதும்… என்னத்த ஆடி? என்னத்த பார்த்து! அடப் போங்க சார்…

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

அன்புவட்டம்!

அன்னையர் தினத்தை சிறப்பித்து வந்த சலுகைகளில் தங்களைக் கவர்ந்தது எதுவோ? -ஆர்.ராஜலட்சுமி, ஸ்ரீரங்கம் “சிக்குபுக்கு, சிக்குபுக்கு ரயிலே’ ஆஃபர்தான்! சிறு குழந்தைகளுடன் இரவு ரயிலில் பிரயாணிக்கும்போது, அவர்களைத் தூங்கவைக்க போதிய இடம் இல்லாமல் அவஸ்தைப்படுவோம் இல்லையா? தனியாகப் படுக்கவைத்தால்...

அன்புவட்டம்!

டி.வி.யில் வரும் சமையல் குறிப்புகளுக்கும், பத்திரிகையில் வரும் சமையல் குறிப்புகளுக்கும் என்ன வித்தியாசம்? -கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி டி.வி. ல பார்த்து சமைக்கும்போது (அதுவும் ஏகப்பட்ட கமர்ஷியல் பிரேக்குப் பிறகு...!) கவனமா பார்த்து, எல்லாத்தையும் ஞாபகத்துல...

கவிதை!

2
-செ.கலைவாணி, சேலம்  உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்! உழைப்பென்னும் படைப்பூக்கச் செயலாலே, உருவானாதே இவ்வுன்னத உலகம். உடலெனும் இயந்திரத்தால் உழைப்பை உரமாக்கி, உலகை எந்நாளும்  இயங்கச் செய்பவனே உழைப்பாளி. உழைக்கும் வெள்ளையணுக்களால் இயங்கும் உழைப்பாளியின் உடல் உலகிற்காய் உழைக்கிறது. உழைப்போரின் வியர்வைத்துளிகள்  உருவாக்கிய உலகம், உழைப்போரால்...

கோடையை ஜில்லாக்க ஜில் ஜில் ஜூஸ்!

2
வாசகர் ஜமாய்க்கிறாங்க! -ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.   பிஞ்சு வெள்ளரி ஜூஸ் தேவையானவை: பிஞ்சு வெள்ளரிக்காய் – 250 கிராம், பூண்டு – 3 பல், தேன் – 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன். செய்முறை:...

ஜோக்ஸ்!

1
 -சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா. படங்கள்; பிள்ளை   “சபாவுல என்னோட கச்சேரிக்கு கூட்டம் வரணும்னா என்ன செய்யணும்யா?” “சபா கேன்டீன்ல உங்க கச்சேரியை வச்சுக்குங்க பாகவதரே!” ---------------------------------------------------- “தோசை என்னப்பா இவ்வளவு சின்னதா இருக்கு?” “பொடி தோசை வேணும்னு நீங்க தானே...