0,00 INR

No products in the cart.

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்

 

கல்பாக்கத்தில் வீசும் அலை!

லை என்ற அமைப்பை நிறுவி,மீனவ மற்றும் இருளர் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று முழு மூச்சாக சேவை செய்து வருபவர் செரினா.

கல்பாக்கத்தைச் சேர்ந்த இவர் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர். முதுகலை படிப்பை முடித்து பல நிறுவனங்களிலும் வேலை பார்த்தி ருக்கிறார். விடுமுறை நாட்களில் சொந்த ஊரான கல்பாக்கத்திற்கு வரும் போதெல்லாம் அங்கிருந்த மீனவ, இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இளம் சிறுவர் சிறுமிகளைச் சந்திப்பது வழக்கம். அவர்களில் நிறைய பேர், குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் இருந்ததை அறிந்திருக்கிறார்.

ஐந்து வருடங்களுக்கு முன், கல்பாக்கத்தில் ‘அலை’ எனும் அமைப்பை நிறுவி தனது நண்பர்களோடு இணைந்து, அடிப்படைக் கல்விகூட கிடைக்காத மீனவ மற்றும் இருளர் சமூக குழந்தைகளுக்கு முழு நேரமாக களத்தில் இருந்து உதவிகள் செய்து வருகிறார். இங்கிருக்கும் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்திருக்கிறார்.

சேவை மனப்பான்மை கொண்ட “அலை” அமைப்பின் இளைஞர்கள் ,மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு கல்வியோடு, பிற கலைகளையும் கற்றுக்கொடுத்து வருகிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு கல்வியின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது.எல்லா வாய்ப்புகளையும்  இவர்களுக்கும் ஏற்படுத்திக்கொடுத்து அதன் மூலம் இவர்களின் திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும், கல்வியோடு கலையும் குழந்தைகளிடம் போய் சேர வேண்டும் என்பது செரினாவின் நோக்கம்.

இருளர் சமூகத்தைச் சேர்ந்த சில குழந்தைகளின் பெற்றோர் நிரந்தர தொழில் இல்லாததால், வேறு ஊர்களுக்கு போய்விடுகிறார்கள்,  இதனால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கும்.  எனவே பெற்றோருக்கும்  சிறு, குறு தொழில்களை ஏற்படுத்தி, ஆடு, மாடு, கோழிகள் வாங்கிக் கொடுத்து உதவுகிறார்.  தற்போது இந்த அமைப்பில் ஐம்பது குழந்தைகளுக்கு மேல் இருக்கிறார்கள்.

*********************

சாந்திபுரத்தில் செழிக்கும் பண்ணை!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள சாந்திபுரம் கிராமத்தில் பண்ணை அமைத்து இயற்கை விவசாயம் செய்து வெற்றி பெற்றிருக்கிறார் விவசாயி கஸ்தூரி.   தனது வேளாண் பண்ணையில் விளையும் காய்கறிகள், பழங்கள், செவ்விளநீர் போன்றவற்றை ஊர் மக்களுக்கு இலவசமாக அளித்து வருகிறார் இவர். வியப்பாக இருக்கிறதல்லவா?
இவரது தந்தை, சின்னசாமி, தாய் சாத்தம்மாள், இருவருமே பள்ளி ஆசிரியர்கள். விவசாய ஆர்வம் அதிகம் உள்ளவர்கள். அவர்களைப் பார்த்து வளர்ந்த இவரும், பள்ளிப் பருவத்திலேயே எல்லா விவசாய வேலைகளையும் விரும்பி செய்யத் தொடங்கி விட்டார். பின்னர் திருமணமான போது, இவரைப் போலவே விவசாயத்தில் தீவிர ஈடுபாடு உள்ள கணவர் அமைந்ததால், மகிழ்ச்சியோடு விவசாயத்தில் தொடர்ந்து ஈடுபடுவதாகக் குறிப்பிடுகிறார்.
கணவரது ஊர் அருகே, பொட்டல் காடாய், பாலைவனம் போல இருந்த இடத்தில் உறவினர்கள் உதவியுடன் ‘சாந்திபுரம்’ என்ற கிராமத்தை உருவாக்கி, அங்கே அறுபது ஏக்கரில் ‘வேளாண் பண்ணை’ அமைத்திருக்கிறார்கள். அது இன்று சோலைவனம் ஆகிவிட்டது.
சங்ககால இலக்கியங்களில் சொல்லப்பட்ட அத்தனை வகை மரங்களும் இந்தப் பண்ணையில் இருக்கின்றன என்கிறார். மா, பலா, வாழை, தென்னை, ஈச்ச மரம், தாழை விசிறி வாழை, போன்ற மரங்கள் தவிர,
நெல்லிக்காய், நாவல் பழம், ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் நந்தியாவட்டை உட்பட அனைத்து வகையான பூக்கும் தாவரங்களும் உள்ளன.
ஒவ்வொரு விதையும், ஒரு விருட்சம் என்பதால் நிறைய விதைகளை இங்கேயே விதைத்து வைத்திருக்கிறார்கள். கிராமத்தில் மாடு மேய்க்கும் சிறுவர்கள் தண்ணீர் தாகம் எடுத்தால் பிடுங்கிச் சாப்பிடும் ‘கட்டை காடை’ போன்ற அரியவகை தாவரங்கள் பல இங்கே இருக்கின்றன. குழந்தைகள் பூங்காவும் அமைத்திருக்கிறார் கஸ்தூரி.

*********************

மீனாட்சிபுரத்தில் துணிவு தரும் கலை!

திருச்சியைச் சேர்ந்த சங்கீதா. திருமணத்துக்குப் பின்னர் கராத்தே கற்க ஆரம்பித்து, அறுவை சிகிச்சை மூலம் இரண்டு குழந்தை பெற்ற பின்பு கராத்தே தற்காப்புக் கலையில் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் மீனாட்சிபுரத்தில் வசிக்கும் சங்கீதா 40 வயதானவர். இவரது கணவர் ஐயப்பன் கராத்தே பள்ளிகளை  நடத்தி வருகிறார்.

திருமணத்துக்கு முன்பு வரை கராத்தே பற்றி இவருக்கு எதுவுமே தெரியாதாம். பிறகு 2013ம் ஆண்டில் கராத்தே கற்றுக் கொள்ள ஆரம்பித்து, மூன்று ஆண்டுகளில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறர்.

2019-ம் ஆண்டு 24 மணி நேரம் தொடர்ந்து கராத்தே டெமான்ஸ்ட்ரேஷன் செய்து உலக சாதனை படைத்துள்ளார் சங்கீதா.

இந்த ஆண்டு மார்ச் மாதம், தலா 100 கிலோ எடை கொண்ட 11 கற்களை, இவர் மேல் வைத்து சுத்தியால் உடைத்திருக்கின்றனர். இவை “சோழன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெகார்ட்ஸ்” ல் இடம் பெற்றுள்ளன. உலக அளவில் பெண்கள் யாரும் இது வரை செய்யாத சாதனை இது. இத்தனைக்கும் இவரது இரு பெண் குழந்தைகளும்  அறுவை சிகிச்சை மூலம் பிறந்தவர்கள். அதை ஒரு தடையாக நினைக்காமல் சாதித்திருக்கிறார் சங்கீதா.

ஈகோ, பயம், சோம்பல் போன்ற எதிர்மறை குணங்களில் இருந்து வெளிவர, கராத்தே உதவும்.  பெண்கள் மனதாலும், உடலாலும் பலமானவர்கள்.

ஏதேனும் ஒரு தற்காப்புக் கலையை கற்றுக்கொள்ளும் போது அந்த வலிமை அதிகரிப்பதோடு, பாதுகாப்பும்,தன்னம்பிக்கையும் கொடுக்கும்.

வாழ்க்கையில் எந்த முயற்சியிலும் துவண்டுபோகாமல், முன்னேறி செல்லும் மனநிலையைத் தரும். என்பது மற்ற பெண்களுக்கு இவரது செய்தி.

2 COMMENTS

பத்மினி பட்டாபிராமன்
பத்மினி பட்டாபிராமன் மூத்த எழுத்தாளர். பத்திரிகையாளர். குறுநாவல்களும் சிறுகதைகளும் பிரபல பத்திரிகைகளில் நிறைய எழுதி முதல் பரிசும் பெற்றவர். இவற்றின் தொகுப்பாக இதுவரை ஏழு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். மருத்துவம், தோட்டக் கலை, புகைப்படக் கலை பற்றிய தொடர் கட்டுரைகள், கட்டுரைகள் மங்கையர் மலரிலும், கல்கியிலும், தினமணி நாளிதழிலும், வெளிவந்து கொண்டிருக்கின்றன உலக நாடுகளில் சுமார் 80 நாடுகளுக்கு மேல் சென்றிருப்பவர். தன் அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக, எழுதி வருபவர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக (VISITING FACULTY) 14 வருடங்களுக்கு மேலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் வகுப்புக்கள் நட்த்திய அனுபவம். சென்னை தொலைக்காட்சியில் அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அகில இந்திய வானொலி எஃப். எம்மில் செய்தி வாசிப்பாளர், பிக்ஸல் மாயா அனிமேஷன் பயிற்சி நிலையத்தின் மந்தவெளிப் பிரிவு இயக்குனர். மாணவர்களுக்கு மல்டிமீடியா, அனிமேஷன் வகுப்புக்கள் எடுத்து வருகிறார். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் வீணை வாசிப்பதிலும் ஆர்வம் உடையவர். சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். “உரத்த சிந்தனை” அமைப்பின் தற்போதைய தலைவர்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா  “கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கருணை காட்டும் கஸ்தூரி சுகாதாரத் துறையில் 39 வருடங்களாக திறம்படப் பணியாற்றி வரும், சமுதாய நல செவிலியரான திருமதி. கஸ்தூரி மணிவண்ணன், தனது சமூகப் பணிக்காக  மத்திய அரசு வழங்கும்...

ஜில்லென்ற மூணாறு டூர்!

வாசகர் சுற்றுலா! -ஜெயகாந்தி மகாதேவன் சென்னை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை என் நெருங்கிய தோழி சியாமளா சிவராமன் தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரித்துவிட்டு அவங்க  கூறியது, "ஜெயா, ஸ்டெர்லிங் ஹாலிடேஸ்...

ஜோக்ஸ்!

படங்கள் : பிள்ளை "ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!” "நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!" -வி.ரேவதி,தஞ்சை -----------------------------                    ...