0,00 INR

No products in the cart.

ஒரு வார்த்தை!

கேரளா, தமிழ்நாடு, ஆந்திரான்னு… (லாட்டரிச் சீட்டு இல்லீங்க…. இது வேற மேட்டர். கொஞ்சம் சீரியஸ்!) தினசரி நம்பப் பொண்ணுங்க தில்லா, எப்படியோ நியூஸைப் பிடிச்சுடறாங்கப்பா!

**************

  • கேரளாவில் சமீபத்துல நடந்த கூத்து இது. கல்யாண மேடை. முகூர்த்த நேரம். சிவப்புப் பட்டுப்புடைவை, நகை அலங்காரத்தோட மணப்பெண் பதுமை போல மேடை ஏறுகிறார். தாலி கட்டும் சமயம் வந்ததும், “ஸாரி… எனக்கு சம்மதமில்லை. எனக்கு வேற ஒருவருடன் காதல் இருக்கு!”ன்னு அறிவிச்சுட்டு, மேடையை விட்டு இறங்கிப் போகிறார். கல்யாணம் நின்று போகிறது.
  • தமிழ்நாட்டில் நடந்தது இன்னும் பரபரப்பு… தோழிகள் இருவர் நெருங்கிப் பழகுகிறார்கள். ஊர் அறிய கல்யாணம் பண்ண முடியாது என்பதால், ஒரு தோழி “ஆபரேஷன் மூலம் ஆண் ஆகிவிடு;” என்று ஐடியா கொடுக்கிறார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஹார்மோன் ஊசிகள் போட்டும், அறுவை சிகிச்சை செய்தும் பாதி ஆண் ஆகிவிடுகிறார். அவரது மார்பகம் வெட்டி எடுக்கப்பட்டு தலைமுடி கிராப் செய்யப்பட்டு, பேண்ட் சட்டை போட்டதும் ஆண் போல தோற்றம் வருகிறது. கோயிலில் ரகசியமாய்த் திருமணம் செய்து கொள்கின்றனர். மூன்றே மாதம்தான். உறவு கசந்து போக, காதலி பிரிந்து சென்று விடுகிறாள். ‘திருநம்பி’ ஆக்கப்பட்ட பெண்ணோ, நடுத்தெருவில் நியாயம் கேட்டு பைத்தியமாய் அலைந்து கொண்டிருக்கிறார்.

**************

ந்திராவில் நடந்ததோ ஸ்பெசல் ஐட்டம்! ஓர் இளஞ்ஜோடிக்குத் திருமணம் நிச்சயம் செய்கிறார்கள். கல்யாணத்துக்கு சில நாட்கள் இருக்கும்போது, வருங்காலக் கணவனை அத்துவான மலைப்பகுதிக்கு ரகசியமாக வரச் செய்கிறாள் மணப்பெண். “கேக் வெட்டிக் கொண்டாடலாம்” என்று இவனும் ஆசையாகப் போகிறான். “சர்ப்ரைஸ்” என்று அவனது  கண்களை தனது துப்பட்டாவால் கட்டிவிட்டு, ‘சரக்’ என்று கழுத்தை வெட்டிவிடுகிறாள் அந்த இளைஞி!

“கல்யாணத்தை நிறுத்த எனக்கு வேற வழி தெரியலை. நான் வேறொருவரைக் காதலிக்கிறேன்”னு சொல்றா.

அவளே கழுத்தையும் அறுத்துட்டு, மருத்துவமனையிலும் கொண்டு சேர்த்திருக்கா… டைம்லி ஹெல்ப்! அந்தப் புண்யவதியின் பெயர் புஷ்பா!

“புஷ்பான்னா ஃப்ளவர்னு நினைச்சியா? ஃபயர்டா!”ங்கிற ‘புஷ்பா’ பட டயலாக்தான் நினைவுக்கு வருகிறது.

ஓர் ஆணை நயவஞ்சகமாகக் கழுத்தை அறுக்க தைரியம் இருக்கு… ஆனா பெற்றோர்கிட்ட தன் காதலைச் சொல்ல தைரியம் இல்லியாம்! சரி, நம்பிட்டோம்!

**************

ம்மா, குலத்  தெய்வங்களே…!

‘கல்யாணக் கனவு’ என்பது பெண்ணுக்கும் பெண்ணைப் பெத்தவங்களுக்கும் மட்டுமில்லை… ஆண்களுக்கும் அவர்களைப் பெற்றவர்களுக்கும்கூட ஆயிரம் கனவுகள் உண்டு!

‘பெண்’ என்ற ஒரே காரணத்தால், காவல்துறையும் சட்டமும் உங்களை ஒன்றும் செய்யப் போவதில்லை. விசாரித்து, கண்டித்து அனுப்பிவிடுவார்கள். ஆனால் இதில் சம்பந்தப்பட்ட ஆண்கள், அவர்களின் பெற்றோரின் மனநிலை? எவ்வளவு மன உளைச்சல் அடைவார்கள்?

  • பெண் உரிமை, பெண் சுதந்திரம் போன்றவைச் சிறப்பாகப் பாதுகாக்கப்படணும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. வான் அளவு சலுகைகள் நமக்குத் தரப்பட்டுள்ளன. அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதில்தானே நமது கெளரவம் அடங்கியுள்ளது.

நம் கைதான்… அதை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நீட்டலாம். அது நம் விருப்பம். ஆனால் அது மற்றவர்களின் கண்களைக் குத்தி ரணம் ஆக்காமலும் பார்த்துக் கொள்ளணும் இல்லையா?

1 COMMENT

  1. இந்த காலத்தில் ஆண்களை பெற்ற பெற்றோர்கள் நிம்மதியாக வாழவில்லை
    என்பதை உங்கள் “ஒருவார்த்தையில்”
    ஊர்ஜிதபடுத்தி விட்டீர்கள். படிக்கும் போது
    மிகவும் வேதனை அளிக்கிறது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

ஒரு வார்த்தை!

“டர்ர..டர்ர்... டர்ர...” டெலிப்ரின்டரில் செய்திகள் மடிந்து மடிந்து சீராக விழும். அதை வாகாகக் கிழித்து, எடிட்டோரியல் டெஸ்க்கில் உள்ளவர்களுக்குப் பங்கிட்டுத் தருவார்கள். ஆங்கிலத்தில் இருக்கும். அந்தச் செய்திகளைத் தமிழ்ப்படுத்திச் சுடச்சுட முந்தித் தருவது எங்கள்...

ஒரு வார்த்தை!

என்னுடைய உறவினர் ஒருவர் மும்பையிலிருந்து எங்க வீட்டுக்கு வந்திருந்தார். எழுபத்தைந்து வயதைக் கடந்திருந்த அவருக்கு இலேசாகத் தலைச்சுற்றல் வரவே, “ரத்த அழுத்தப் பரிசோதனை செஞ்சுக்கறேன்” என்றார். நானும் அவசரத்துக்கு அருகில் இருந்த எம்.பி.பி.எஸ்....

கவிதை!

2
-செ.கலைவாணி, சேலம்  உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்! உழைப்பென்னும் படைப்பூக்கச் செயலாலே, உருவானாதே இவ்வுன்னத உலகம். உடலெனும் இயந்திரத்தால் உழைப்பை உரமாக்கி, உலகை எந்நாளும்  இயங்கச் செய்பவனே உழைப்பாளி. உழைக்கும் வெள்ளையணுக்களால் இயங்கும் உழைப்பாளியின் உடல் உலகிற்காய் உழைக்கிறது. உழைப்போரின் வியர்வைத்துளிகள்  உருவாக்கிய உலகம், உழைப்போரால்...

கோடையை ஜில்லாக்க ஜில் ஜில் ஜூஸ்!

2
வாசகர் ஜமாய்க்கிறாங்க! -ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.   பிஞ்சு வெள்ளரி ஜூஸ் தேவையானவை: பிஞ்சு வெள்ளரிக்காய் – 250 கிராம், பூண்டு – 3 பல், தேன் – 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன். செய்முறை:...

ஜோக்ஸ்!

1
 -சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா. படங்கள்; பிள்ளை   “சபாவுல என்னோட கச்சேரிக்கு கூட்டம் வரணும்னா என்ன செய்யணும்யா?” “சபா கேன்டீன்ல உங்க கச்சேரியை வச்சுக்குங்க பாகவதரே!” ---------------------------------------------------- “தோசை என்னப்பா இவ்வளவு சின்னதா இருக்கு?” “பொடி தோசை வேணும்னு நீங்க தானே...