சரிவிகித உணவு கொள்வோம், நோய்களை வெல்வோம்.

சரிவிகித உணவு கொள்வோம், நோய்களை வெல்வோம்.
Published on

பகுதி – 3

உணவியல் நிபுணர் டாக்டர் தாரிணி கிருஷ்ணன்.
சந்திப்பு: பத்மினி பட்டாபிராமன்

டெட்ரா பேக் செய்த மோர், பழரசங்கள் அருந்துவது பாதுகாப்பானதா டாக்டர்?

வை உடலுக்கு அவ்வளவாக உகந்தது அல்ல. அட்டைப் பெட்டிகளில்
'No added Sugar' என்று போடப்பட்டிருக்கும். இனிப்பு அதிகம் கொண்ட  ஆப்பிள், ஜூஸை ஆரஞ்சு ஜூஸ்களில் கலந்து விடுகிறார்கள். சில ஜூஸ்களில் ஃப்ரக்டோஸ் சிரப் (Fructose Syrup) சேர்த்திருப்பார்கள். அது உடலுக்கு நல்லதல்ல.

பொதுவாக இத்தகைய பழரசங்கள், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்து விடுவதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பழங்களை அப்படியே உண்பதுதான் சிறந்த முறை.

ஃப்ரீ ராடிகல்ஸ் (Free  Radicals) என்பது என்ன? அதை கட்டுப் படுத்தும் உணவுகள் என்னென்ன?

ம் உடலில் உள்ள மூலக்கூறுகள், (molecules) ஆக்ஸிடேஷன் ஆகும் போது, அதாவது அவற்றில் இருக்கும் அணுக்களின் எண்ணிக்கையில் மாறுதல் ஏற்படும் போது, அவை ஃப்ரீ ராடிகல்ஸ் ஆகி விடுகின்றன.

அவை ஒரு பிங்பாங் பந்து போல அசைவதால் நம் உடலில் இருக்கும்  செல்களுக்கு பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு, சர்க்கரை நோய்,கேன்சர் போன்ற நோய்களை உண்டாக்கக் கூடும்.

இவற்றை கட்டுப்படுத்தும் சக்தி,  Anti Oxidents கொண்ட உணவுப் பொருட்களில் உள்ளது.

உதாரணமாக, பெரிய நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் இருக்கும் விட்டமின் சி, தாவர எண்ணைகளில் இருக்கும் விட்டமின் ஈ,

முழு (உளுந்து போன்ற) தானியங்கள், மற்றும் பருப்பு வகைகளில் இருக்கும் சிங்க் (zinc)  சத்து, பூண்டு, சிக்கன், முழு தானியங்களில் கிடைக்கும் செலினியம்  இவையெல்லாம் ஆக்ஸிஜனேற்றப் பொருட்களே.

ப்ரோ பையாடிக்ஸ் என்பது என்ன? நம் ஜீரண சக்தியில் அவற்றின் பங்கு என்ன?

டாக்டர் தாரிணி கிருஷ்ணன்.
டாக்டர் தாரிணி கிருஷ்ணன்.

வை நம் உடல் நலத்தைக் காக்கும் நுண்ணுயிரிகள். நல்ல பேக்டீரியா. என்றும் சொல்லலாம். பொதுவாக ஒரு பேக்டீரியாவில் ஒரு செல் இருக்கும். நம் உடலில் கோடிக்கணக்கான செல்கள் இருப்பதால், நல்ல பேக்டீரியா க்கள் எண்ணிக்கையில் அதிகரிக்கும் போது உடல் நலமும் மேம்படும். நொதித்தல் என்று சொல்வோமே அந்த  Fermentation ஆகும் உணவு வகைகளில் இந்த நல்ல பேக்டீரியாக்கள் உள்ளன.

தயிர், புளிப்பான கம்பு சாதம், புளித்த நீர் மோர், பழைய சாதம்,இவையெல்லாம் உடலுக்கு நன்மை செய்யும் ப்ரோ பையாடிக்ஸ் கொண்டவை. சாதாரணமாக நாம் வீட்டில் தோய்க்கும் தயிரில், சுமார் 30,000 வகை நல்ல பேக்டீரியாக்கள் தயிர் தோய காரணமாகின்றன.

வெளியில் சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, அதை சரி செய்ய இந்த பேக்டீரியாக்கள் மில்லியன் கணக்கில் கொண்ட உணவுகள்  கொடுக்கப் படுகின்றன.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற முழு சரிவிகித உணவு  எப்படி இருக்க வேண்டும் டாக்டர்?

காலையில் காஃபி, டீ, பால் எது வேண்டுமானாலும் சர்க்கரை இல்லாமல் லைட்டாக அருந்தலாம். ஷுகர்ஃப்ரீ என்று கிடைக்கும் செயற்கை சர்க்கரையும் வேண்டாம். கசப்பாக இருக்கிறதென்று  நினைத்தால் கொஞ்சம் கூட பால் சேர்த்துக் கொள்ளலாம்.

காலை எட்டு மணிக்கு ப்ரேக்ஃபாஸ்ட். பப்பாளி, கொய்யா, பியர், மாதுளை, நாக்பூர் ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களை சீசனுக்கு ஏற்றவாறு உண்னவேண்டும். ஜூசாக அல்ல, பழமாக ஒரு கப், அதாவது 200 கிராம். தொடர்ந்து சிறுதானிய இட்லி அல்லது தோசை இரண்டு அல்லது சிறுதானிய உப்புமா முக்கால் கப். சட்னி சாம்பார் தொட்டுக் கொள்ளலாம்.

காலை பதினோரு மணிக்கு மோர் அல்லது க்ரீன் டீ ஒரு கப். மதியம் ஒரு மணிக்கு லன்ச். மில்லெட் எனப்படும் சிறுதானியங்களான கம்பு, தினை போன்றவற்றில் செய்த சாதம் முக்கால் கப், தால், சாம்பார், முளைவிட்ட பயிறு வகைகள் இவற்றில் ஏதாவது ஒரு கப், (அசைவம் சாப்பிடுபவர் என்றால் மீன், சிக்கன் இவற்றை குறைந்த எண்ணையில்,  சமைத்து கிரேவியாக ஒரு கப்)  காய்கறிகள் இரண்டு கப், தயிர் ஒரு கப்.

மாலை 4 மணிக்கு, டீ அல்லது காஃபி சர்க்கரை இல்லாமல் ஒரு கப், அரிசிப் பொரி ஒரு கப், அல்லது சுண்டல் ஒரு கப். இரவு உணவு 8 மணிக்கு, சிறுதானியங்களில் செய்த சாதம் முக்கால் கப் அவற்றில் தயாரித்த தோசை இட்லி போன்ற டிஃபன் என்றால் இரண்டு. அல்லது உப்புமா, கிச்சடி  போன்றவை ஒரு கப், இதோடு, தால், சாம்பார், முளைவிட்ட பயறுகள் உண்ணலாம். (முட்டை பிடித்தவர்கள் இரண்டு வெண்கரு மட்டும் எடுத்துக் கொள்ளலாம்) காய்கறிகள் 2 கப், தயிர் அரை கப். இந்த உணவு முறைக்கு குறித்த நேரத்தில் சாப்பிடுவது  மிக மிக அவசியம்.

சர்க்கரை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு எது ?

ஜங்க் ஃபூட் என்னும் துரித உணவுகளை சர்க்கரை உள்ளவர்கள் அவசியம் தவிர்க்க வேண்டும். (எல்லோருமே தவிர்த்தால் நல்லது). இனிப்புப் பொருட்கள், மைதா, சோள மாவு இவற்றில் செய்த உணவை சாப்பிட வேண்டாம். எண்ணெயில் பொரித்தவற்றையும் தவிர்க்கவும்.

சேர்க்க வேண்டியவை என்னென்ன?

ச்சை, ஆரஞ்சு, சிவப்பு வண்ணத்தில் இருக்கும் கீரை, குடைமிளகாய், கேரட், சிவப்பு முள்ளங்கி  தவிர, வாழைத்தண்டு, வாழைப்பூ இவை நல்ல பலன் தரும். பழங்கள் முன்பே குறிப்பிட்டபடி உண்ண வேண்டும்.

புரதச் சத்துக்கு, தால், சாம்பார், அல்லது முழு தானியங்கள், முட்டை, மீன் சிக்கன் சேர்க்கலாம். தினம் 400 மில்லி லிட்டர் அளவுக்கு பாலாகவோ அல்லது தயிராகவோ எடுத்துக் கொள்ள வேண்டும்.  எண்ணையைப் பொறுத்த வரை தினம் 15 மில்லி லிட்டர் அளவு மட்டும் போதும். அதில் 10 மில்லி லிட்டர் சமையல் எண்ணை, 5 மில்லி லிட்டர் நெய் என்ற அளவில் சரியாக இருக்கும்.

நாம் சாப்பிடும் உணவு நம் குணாதிசயத்தை  தீர்மானிக்கிறதா?  மேலும் நம் உடலின் இயற்கை யான அமைப்பை மாற்றுகிறதா?

நூறு சதவீதம் நம்  உணவைப் பொறுத்தே எல்லாம் அமைகின்றன. உணவே மருந்து என்று சொல்வார்கள் அல்லவா? காரம் அதிகம் சேர்ப்பவருக்கு அதிகம் கோபம் வரும்.   அதிகமாக சர்க்கரை, மைதா, சோளம் போன்ற உணவுகளை உண்ணும் குழந்தைகள், ADHD  (Attention-Deficit / Hyperactivity Disorder ) என்ற நோயால் பாதிக்கப்படலாம்.

——————-

 உணவு எப்படி நம் தன்மையை தீர்மானிக்கிறது,  சாத்வீக உணவு என்றால் என்ன, இவற்றைப் பற்றி அடுத்த இதழில் டாக்டர் தாரிணி கிருஷ்ணன் கூற இருக்கிறார்.
Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com