0,00 INR

No products in the cart.

கோவில் தூணைக் கட்டிப் பிடித்தால் புத்திர பாக்கியம் கிடைக்குமாம் ! 

பயணம். 

-ஜானகி பரந்தாமனுடன்  விசாகப்பட்டினம் செல்லுவோம்…

ன்  அண்ணன் மகளின் நெடுநாள்  அழைப்பின் பெயரில் விசாகப் பட்டிணத்திற்கு  குடும்பத்தோடு முதல் விமாணப்பயனமாக  சென்றோம். அண்ணன் மகளுக்கு தெலுங்கு அத்துப்படி என்பதால், மொழிப்  பிரச்னையில்லை. பல இடங்களுக்குச்  சென்றோம். அதில் சில இடங்களை  பகிர்ந்துள்ளேன்.

இறைவனின் ஆசியுடன் ஆரம்பிக்கலாம் என்று “சிம்மாசலம்” சென்றோம். இது விசாகப்பட்டினம் கடற்கரை ஒட்டியுள்ள, ரத்தினகிரி மலையின் வனப்பகுதியின் நடுவில் அமைந்துள்ளது. இங்குள்ள பெருமாள் கோவில் 108திவ்ய தேசங்களில் ஒன்று. இங்கு படியேறியும் (1000 படிகள் ) வரலாம். வாகனங்களிலும் வரலாம். இங்கு சந்தன மரங்கள் இருக்கிறதோ இல்லையோ, பெருமாள் சந்தன காப்புடன் காட்சி  தருகிறார். இரண்யகசிபு விடமிருந்து ப்ரகலாதனை காக்க இந்த மலையில் இறங்குகிறார்,அது தான் சிம்மாத்ரி (சிம்மாசலம்) மலை. பின்பு முனிவர்களின், பக்தர்களின் வேண்டுகோளுக்கினங்கி  பெருமாள் இங்கேயே தங்கி விட்டார். அடுத்த யுகத்தில் சந்திர வம்சத்தைச் சேர்ந்த புரூரவன் என்ற மன்னன் எடுத்து கட்டினார் என்று புராணங்கள் கூறுகிறது.

கோவிலின் நுழைவு வாயிலை ‘கலி கோபரம்’ என்கிறார்கள். கோவிலின் ப்ரதான வளாகத்தின் நடுவே கருவறை. அதன்  நாடுவே சிறிய மேடையில் மூலவர் ‘வராக லட்சுமி நரசிம்மர்’ என்ற திரு நாமத்துடன், சந்தன பூச்சில் காட்சி தருகிறார். வைகாசி வளர் பிறை மூன்றாம் நாள் மற்றும் அட்சய த்ருதி நாட்களில் சந்தனப்பூச்சு விளக்கப்பட்டு த்ரிபங்க தோரணையுடன், அதாவது இரு கைகள், காட்டுப்பன்றி தலை, சிங்க வால்மனித உருவுடன் காட்சி தருவாராம் மேலே குறிப்பிட்டுள்ள நாட்களில் சென்றால் தரிசிக்கலாம்.

 இக்கோவிலின் மேலும் ஓர் சிறப்பு. கருவறைக்கு இடப்பக்கம்  ‘கப்பஸ்தம்பம்’ என்ற தூண் பட்டுத்துணியால் அலங்கரிக்கப்பட்டு  காட்சியளிக்கிறது. அதன் கீழே சந்தான கோபாலரின் யந்திரம் இருப்பதாகச்  சொல்கிறார்கள், இதை கட்டிப்பிடித்துக் கொண்டால் நினைத்த காரியம் நிறைவேறும். குறிப்பாக  புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.இங்கும் லட்டு ப்ரசாதமாக தருகிறார்கள்  இந்த சிம்மாசல பெருமாளை ‘வைசாக் திருப்பதி’ என்கிறார்கள் வைசாக் மக்கள்.

அப்படியே   கைலாசகிரி பப்ளிக் பார்க்கில்  சும்மா பளிச்சென்று வெள்ளை நிறத்தில் உயரமான சிவன் பார்வதி சிலைகள் கைலாயத்தில் இருப்பது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்துகிறது . அதனையடுத்து மனதில் நிற்பது மலர்களால் ஆன Floral clock. அதை பார்த்ததும் அங்கே மலர்ந்த இரு வரிகள்.

“நேரம் மலர்களைப் போன்றது, வாடிய மலர்களும், கடந்து போன நேரமும  திரும்ப மலராது.”

பொழுது போக்கு அம்சமாக கடைகள், திண்பண்டங்கள், குதிரை சவாரி, பொம்மை ரயிலில் மலையைச் சுற்றி வரும் போதே ஓரிரு அருவிகள், மலர் தோட்டங்கள், கண்ணுக்கு விருந்தாக இருந்தது.

அரக்கு வேலி பள்ளத்தாக்கு   இதை வைசாக்கின் ஊட்டி என்கிறார்கள் இங்குள்ள போராகுகை  இந்தியாவில்  பெரிய அளவு கனிம படிவ  வகை குகைகளில் இரண்டாவது இடத்தையடைகிறது. இங்கு ஆதி வாசிகள் வாழ்ந்ததற்கான  வரலாறு குறியீடுகள் உள்ளன . போரா குகைள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஓரிடம் .இங்கு போன முதல் நாளே அரக்கு பள்ளத்தாக்கில் விடுதி எடுத்து தங்கி விட்டோம் .குளிர் ஆட்டிப்படைத்தது. அன்றே கொரோனா உடை போல் போட்டுவிட்டேன். உடல் முழுக்க கம்பளிதான். வின் வெளியில் நீல் ஆம் ஸ்ட்ராங்க் நடந்தது போல் நடக்க வேண்டி இருந்தது. முடியாதே… கங்காரு போல் தாவி, தாவி கட்டில் மீது ஏறி அமர்ந்து கொண்டேன். இளவட்டங்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.

போராகுகைக்கு செல்ல விஷாகபட்டிணத்திலிருந்து ரயில் வசதிகள் உள்ளது. ரயில் பயணம் என்றால் நீளமான சுரங்கத்திற்குள் வரும் பொழுதும், பாலங்களின் மேல் வரும் போது , இயற்கையை ரசித்தபடியே ஆனந்தமாக பயணிக்கலாம். இங்கே காபி தோட்டங்கள் அதிகம் இருப்பதால் காபி வாசனை மூக்கை துளைக்க்கும்.

இந்த போராகுகை உலகத்திற்கு முதன் முதலில் காட்டியது ஒரு பசு மாடு. இங்கு கோஸ்தானி என்ற ஆறு இருக்கிறது. இங்குள்ள இடையர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது,  ஒருமாடு வழி தவறி இந்த குகைக்குள் போக, இடையர்கள் தேடி வர, இந்த குகை கண்டு பிடிக்கப்பட்டது . பின்பு 1807 ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டு புவியியல் நிபுனரான William King என்பவர் இதை முறையாக கையாண்டிருக்கிறார் ,என்கிறது  வரலாறு. இதைப் பற்றிச் சொல்வதென்றால் நிறைய சொல்லலாம் . மலரில்  பக்கம் பத்தாது அதனால்  சுருக்கமாக சொல்கிறேன்.

இந்த குகை ஒரிஸா பார்டரில், அனந்தகிரி மலைத்தொடரில் உள்ளது.

ஒரிய மொழியில் ‘போரா’ என்றால் துளை என்று அர்த்தம். இது கடல் மட்டத்திலிருந்து 705 மீட்டர் அடி உயரத்தில் உள்ளது. இதன் நுழைவு வாயில் 100 மீட்டர் அகலம், 75மீட்டர் உயரம் .குகையின் ஆழம் 80 மீட்டர். குகைக்குள்  நீளம் 200 மீட்டர், அகலம் 2  கி.மீட்டர் அகலத்துக்கு பரந்து விரிந்துள்ளது.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம்   அடுக்கு சுண்ணாம்பு பாறைகளாக இருந்தது. ஆற்று நீர் அமிலத் தன்மையடைந்து, சுண்ணாம்பு பாறையை கரைத்து வெடிப்புகள் உண்டாக்கி இந்த  வெடிப்புகள் குகைகளாக மாறியதாம்.

இந்த  குகை படிவங்கள் அனுபவமிக்க சிற்பிகள் செதுக்கியது போல் இருக்கும் .இந்த கணிம படிவங்கள் உருகி தொங்கிய நிலையில் உறைந்து போயிருக்கும். தரை மட்டத்திலிருந்து உயர்ந்து உறைந்த நிலையில் இருக்கும். பார்ப்பதற்கு பல வடிவங்களை உணர்த்தும் .அந்த காலத்தில் குழந்தைகளிடத்தில் சொல்வோமே ‘பாட்டி நிலவில் வடை சுடறாள்’ என்று, அது  போலபல வடிவங்கள் தெரியும் .  சிவன் பார்வதி போன்று, நாய்குடை, சூனியக்கார கிழவி என்று ஆளாளுக்கு ஒன்றை யொன்று சொல்லிக் கொண்டு குழந்தையாகிப் போவோம் .இது உருவாக பல லட்சம் ஆண்டுகள் aanadhu ஆச்சர்யம் என்றால் .அழிவதிலோ ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.ஆம் லேசாக இடித்தால் கூட சட்டென்று உடைந்து விடும். மீண்டும் உருவாகாதாம். அதனால் அதை மிகவும் கவனமாக பாதுகாத்து வருகின்றனர்.

இதனுள் சுமார்  முப்பது அடி உயரத்தில் சிவன் இருக்கிறார். காரைக்கால் அம்மையார் நடந்து சென்று  கைலாயம் போன சினிமா படக்காட்சியை நினைவுபடுத்தியது. மறக்க முடியாத இடங்களில் இதுவும் ஒன்று.

அடுத்ததாக பழங்குடியினர் அருங்காட்சியகம்.

ங்கு இவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் விதமாக மண் மற்றும் உலோகங்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்கு இவர்கள் வசிக்கும் வீடு மண்ணினால் கட்டப்பட்டு தத்ருபமாக காட்சியளிக்கிறது. விட்டால் போதும் அதனுள்ளேயே போய் அமர்ந்து கொள்வோம் போல அப்படியிருக்கிறது .வீடு வட்டமாகவும், சுவர்கள் சிகப்பாகவும், அதில் கோலங்கள், சித்திரங்கள், ஜன்னல் கதவுகள், கம்பிகள் வெள்ளை நிறத்திலும் காட்சியளிக்கிறது.

திண்ணைகள், கூடங்கள் கூட இருக்கிறது. சமையலறைப்  பாத்திரங்கள் அழகழகாக மண்ணினால் மணக்கிறது. பெண்களுக்கெல்லாம் அதன் மீது ஒரு கண் என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மேலும் அவர்கள் அன்றாட வேலைகளில் ஈடுபட்டுள்ளது போன்ற மனித உருவங்கள் இமை கொட்டாமல் பார்க்க வைக்கிறது ‘ஏங்க எங்க வீட்டுப்பக்கம் வந்து போங்க,’ என்று பேசினாலும் பேசி விடுவோம் போல, அத்தனை இயற்கையாக உள்ளது.

இதுபோக, கல்யாண காட்சிகள், அலங்காரங்கள், வசீகரமான உடைகள், பழமையான நகைகள் கண்ணை கவர்கின்றன. தங்கத்தின் மீதுள்ள ஆசையே போய் விடும் போலிருக்கிறது. (போகட்டும் அப்படியாவது தங்கத்தின் விலை குறையட்டுமே).

மேலும் தொழில் பட்டறைகள், சந்தை கடைகள் இசைக்கருவிகள்  என பல இடங்கள் மற்றும் உபகரணங்களை தத்ருபமாக அமைத்துள்ளனர்.  இவர்களின் பாரம்பரிய நடனம் ‘திம்சா’ வை அவர்கள் சுற்றுலா வருபவர்களுக்கு ஆடி காட்டி, நாம் ஆசையாய் தரும் பணத்தைப்பெற்று கொள் கின்றனர். சுற்றுலா  பயணிகள் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர் (நானும் எடுத்துள்ளேன்).

சிறுவர்களுக்கேற்ற படகு சவாரி குளம் இருக்கிறது. சவாரி செய்யும் குழந்தைகளிடத்திலும் அங்கிருக்கும் பொம்மை களிடத்திலும் பை…பை… சொல்லிவிட்டு பத்ம புரம் தாவரவியல் பூங்காவிற்கு கிளம்பி விட்டோம்.

பத்மபுரம் தாவரவியல் பூங்கா இரண்டாம் உலகப்போர் படைவீரர்களின் உணவிற்கான காய்கறித்தோட்டமாக இருந்திருக்கிறது. தற்போது தாவரவியல் பயிற்சிக் கூடமாக விளங்குகின்றது. ராமோஜி ஃபிலிம் சிட்டி போல  பிரம்மாண்டமாக இருந்தது. இங்கேயே  ஒரு நாள் கழிந்து விடும் .

மொத்தத்தில் என் வாழ்க்கையில் மறக்க முடியாத சுற்றுலா பயணம் விசாகப்பட்டினம்.

2 COMMENTS

  1. கடந்து போன நேரத்தையும், வாடிய மலரையும் ஒப்பிட்டிருப்பது மிகவும் புதிதாக
    இருந்தது.விசாகபட்டிணத்திற்கு போய் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.மிகவும்
    நன்றி.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா  “கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கருணை காட்டும் கஸ்தூரி சுகாதாரத் துறையில் 39 வருடங்களாக திறம்படப் பணியாற்றி வரும், சமுதாய நல செவிலியரான திருமதி. கஸ்தூரி மணிவண்ணன், தனது சமூகப் பணிக்காக  மத்திய அரசு வழங்கும்...

ஜில்லென்ற மூணாறு டூர்!

வாசகர் சுற்றுலா! -ஜெயகாந்தி மகாதேவன் சென்னை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை என் நெருங்கிய தோழி சியாமளா சிவராமன் தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரித்துவிட்டு அவங்க  கூறியது, "ஜெயா, ஸ்டெர்லிங் ஹாலிடேஸ்...

ஜோக்ஸ்!

படங்கள் : பிள்ளை "ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!” "நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!" -வி.ரேவதி,தஞ்சை -----------------------------                    ...