0,00 INR

No products in the cart.

அம்மனுக்கு வளைகாப்பு!

ஆடிப்பூரம் (01.08.2022)
 – ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.

டி மாதம் பிறந்துவிட்டால் போதும். அம்மன் கோயில்களில் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு விசேசம்தான். அதுவும், ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து குளித்து விட்டு, காலை நாலரை அல்லது ஐந்து மணிக்கெல்லாம் அம்மன் கோயில்களில் அதன் சன்னிதிகளில் வரிசை கட்டி நின்று கொண்டிருப்பார்கள். ஆடிக் கிருத்திகையும் ரொம்பவே விசேசம். அதைப் போல ஆடிப்பூரம் ஆலயங்களில் அம்மனுக்கு சிறப்பு மிகு பூஜைகள் அலங்காரங்களுடன் வளைகாப்பு அலங்காரமும் நடைபெறும்.

திருச்சி புத்தூர் திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம் திருநாளில் அம்பாளுக்கு ஆண்டுதோறும் வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆண்டும் வருகிற ஆகஸ்ட் மாதம் ஒண்ணாம் தேதி திங்கட்கிழமை அன்று, அம்மனுக்கு வளைகாப்பு விழா நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக நாம் கோயிலை ஒரு வலம் வந்து விடுவோம்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, புத்தூர் திரௌபதி அம்மன் கோயில். ஜி.ஹெச். எனப்படும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை எதிரில் ஆபீசர்ஸ் காலனியில் அமையப் பெற்றுள்ளது. கோயிலுக்கு உள்ளே நுழைந்தவுடன் நமக்கு, நாம் கோயிலுக்கு உள்ளேதான் வந்துள்ளோமா அல்லது ஏதேனும் புதிதாகத் திறந்துள்ள பூங்கா ஏதேனும் ஒன்றுக்குள் புகுந்து விட்டோமா என்கிற சந்தேகம் வந்துவிடுகிறது. கோயிலின் பிரதான வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பச்சைப்பசேல் என்று பூச்செடிகள்.

அவைகளில் பல வண்ண வண்ணப் பூக்கள். ஆங்காங்கு அமர்ந்துகொண்டு ரசிப்பதற்கு கடப்பா பலகைக் கல் பெஞ்சுகள். அம்மனைத் தரிசிக்கும் முன்பும் அல்லது தரிசித்த பின்னரும் நம்முடைய மன அமைதிக்காகச் சில நிமிடங்கள் அமர்ந்து விட்டுப்  போகலாம். அந்த இடமே ரம்மியமாக இருக்கவும் நீங்கள் அங்கேயே நின்றுகொண்டு இருந்தால் என்னாவது? வாருங்கள் மகா மண்டபத்தின் உள்ளே செல்வோம்.

கா மண்டபத்தின் இடதுபுறம் ஆஞ்சநேயர், பிரதோஷ நாயகர், முருகன் வள்ளி தெய்வானை, சத்யநாராயணர், விஷ்ணு, துர்கை தனித்தனி சிறு சன்னிதிகளில் அமைந்துள்ளனர். மகா மண்டபத்தின் வலதுபுறம் தட்சிணாமூர்த்தி, நடராஜர் சிவகாமி, ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியோர் அமைந்துள்ளனர. அம்பாள் திரௌபதி அம்மன் கருவறையில் அமர்ந்த நிலையில் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறாள். மூலவர் அம்மனுக்கு வலதுபுறத்தில் புற்றுடன் கூடிய நாகதேவதை அமைந்துள்ளாள். அந்தப் புற்று சுயம்பு எனச் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல முன்னொரு காலத்தில் இந்தப் பகுதிகளில் ஆங்காங்கு பார்க்கும் இடங்களில் எல்லாம் புற்றுகள் இருந்துள்ளனவாம். அதனால்தான் இந்தப் பகுதிக்கு புத்தூர் என்கிற காரணப் பெயரும் அமைந்துவிட்டது என்கின்றனர். கருவறையில் மூலவருக்கு இடது  புறமாகத் தனி சன்னிதி கொண்டுள்ளார் மீனாட்சி சுந்தரேஸ்வரர். கருவறை முகப்பில் விநாயகர், பாலமுருகன். திருச்சுற்றின் வடக்கில் கால பைரவர். தேய்பிறை அஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகள்.

அரசு, வேம்பு, வன்னி மரம் கோயிலின் உள்ளே உள்ளன. தினசரி காலை ஆறு முப்பது மணிக்கு கோயில் நடை திறந்து, பகல் பனிரெண்டு மணிக்கு நடை சாத்தப்படும். மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு எட்டரை மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.

“இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு வளைகாப்பு எனப்படும் வளையல் அலங்காரமும் வழிபாட்டு பூஜைகளும் சிறப்பாக நடத்தப்படுகிறது. ஆடிப்பூரத்துக்கு முதல் நாள் இரவே அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யத் தொடங்கி விடுவோம். அலங்காரத்துக்கு என்று சுமார் ஐம்பதாயிரம் வளையல்கள் தேவைப்படும். ஆடிப்பூரத்துக்கு மூன்று நாட்கள் முன்பே பெண்கள் விரதம் இருக்கத் தொடங்கி விடுவார்கள். அவர்களது விரத நாளில் அவரவர்கள் அம்மனுக்கென வளையல்கள் வாங்கி வந்து கோயிலில் கொடுக்கத் தொடங்கி விடுவார்கள். அலங்காரத்துக்குத் தேவையான வளையல்கள் கோயிலில் வந்து சேர்ந்துவிடும்.

ஆடிப்பூரத்தின் முதல் நாள் இரவு அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யத் தொடங்குவோம். முழுதாக அலங்காரம் செய்து முடிக்க சுமார் ஐந்து மணி நேரம் ஆகிவிடும். ஆடிப்பூரத்தின் அதிகாலை வேளையில் இருந்து அன்று இரவு வரைக்குமாக புத்தூர் திரௌபதி அம்மன் வளைகாப்பு அலங்காரத்தில் அருள் பாலித்துக் கொண்டிருப்பாள். ஆடிப்பூரத்தின் மறுநாள் அம்மன் அலங்கரித்துக் கொண்டிருந்த வளையல்களைக் களைந்து, கோயிலுக்கு வரும் பெண் பக்தர்களுக்குப் பிரசாதமாகப் பகிர்ந்து வழங்கப்படும்.” என்கிறார் திருச்சி புத்தூர் திரௌபதி அம்மன் கோயில் அர்ச்சகர் சுந்தர்.

1 COMMENT

  1. ஆடிப்பூரம் அம்மனுக்கு வளைகாப்பு வெகு சிறப்பு. வளையல் அலங்காரத்துடன் அம்மன் தரிசனம் கொள்ளை அழகு. பிரசாதமாக வளையல் வழங்குவது தனிச் சிறப்பு.
    எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன்,
    லால்குடி.

ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. பள்ளி நாட்களில் இருந்தே கதை, கவிதை, கட்டுரை எழுதுவதில் தீராத ஆர்வம். வானொலி நாடகங்கள் எழுதுவதிலும் கால் பதித்தது உண்டு. சமூகப் பார்வையுடனான கட்டுரைகள், நேர்காணல்கள் படைப்பதிலும் வல்லுனர். கல்கி, மங்கையர் மலர், தீபம் போன்ற கல்கி குழும இதழ்களின் நடைபாதைதனில் பயணிக்கும் நிரந்தரப் பார்வையாளன்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

மூக்குத்தியின் கதை!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!  நாயக்கரின் ஆண்டாள் பக்தி மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை அனைவரும் அறிவோம். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது கொண்டிருந்த அளவிட முடியாத பக்தி பற்றி அறிவோமா? ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உச்சிவேளை (பிற்பகல்) பூஜை...

ஆதாயம் தேடும் மனிதர்கள்!

5
சிறுகதை - கே. அம்புஜவல்லி, புத்தூர் ஓவியம்: சேகர் சி. ஏ.  படித்து தில்லியில் மத்திய அரசாங்கத்தில் தலைமைப் பதவி வரை வகித்த நடேசன், நாற்பது ஆண்டு கால பணிக்குப் பிறகு ஒய்வு பெறுகிறார். அவர் மனைவி...

மங்கையர் மலர்  F.B. வாசகர்களின் சுதந்திர தின தகவல்கள்!

0
  காந்திஜியின் தபால் தலைகள் அரிதாகப் போற்றப்படுகிறது. பத்து ரூபாய்  மதிப்பிலான தபால் தலைகள் பதினெட்டு  மட்டுமே  தற்போது  உள்ளதாக கூறப்படுகிறது. மகாத்மாவை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் 48-க்கும் மேற்பட்ட  தபால் தலைகளும், 200...

அணை கட்டும் பிராணி!

இயற்கை அதிசயம் வியந்தவர்: பத்மினி பட்டாபிராமன் ரோடன்ட் என்னும் (Rodent) பெருச்சாளி இனத்தைச் சேர்ந்த விலங்கு பீவர் (Beaver). பாலூட்டி வகையைச் சேர்ந்தது. குளம், ஏரி, ஆறுகள் போன்ற சுத்தமான நீர்நிலைகளின் அருகே வசிக்கக்கூடியவை. அமெரிக்கன்...

ஆழ்வார்கள்!

0
பகுதி -11 - ரேவதி பாலு ஆண்டாள்! பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்தான்.  ஆண்டாள் என்றாலே அவர் அருளிச் செய்த திருப்பாவையும் அது பாடப்பட்ட புனிதமான மார்கழி மாதமும்தான் நம்...