0,00 INR

No products in the cart.

மண்பாண்ட மேன்மை!

கட்டுரை.
– ஜானகி பரந்தாமன், கோவை

தொன்றுதொட்டு நம் முன்னோர்கள் மண்பாண்டங்களைத்தான் பயன்படுத்தியிருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் மண் பாண்டங்கள் சிந்து சமவெளி நாகரிகக் காலத்திலேயே இருந்திருக்கிறது.  (ஆதாரம் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் மண்பாண்டங்கள்). இன்றும் அது சிலரது வீடுகளில் பயன்பாட்டில் உள்ளதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆனால், ‘கொரானா’வுக்குப் பிறகு மண்பாண்டம் பயன்பாடு அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. இது சூடு, ஈரப்பதம் இரண்டையுமே சம அளவு பரப்புவதால் இதில் சமைக்கும் உணவில் ஊட்டச்சத்து அழிவதில்லை. இதனால் சுவையும், குறிப்பாக நோய் எதிர்ப்புச் சக்தியும் கூடுகிறது.

இவ்வளவு சிறப்புமிக்க மண்பாண்டங்களைச் செய்யும் நெல்லை மாவட்டம் புலியூரைச் சேர்ந்த முத்துகுமார், சொர்ணம்மாள், சரவணன். இவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இனி, நமது கேள்விகளும், அவர்களது பதில்களும்…

இந்தத் தொழில் எத்தனை வருஷமா செஞ்சிட்டு வர்றீங்க?

த்தனை வருஷம்னு கிடையாது. நாங்க தலைமுறை தலைமுறையாச் செஞ்சிட்டு வர்றோம். நான் நான்காம் தலைமுறை. என் பையனைச் சேர்த்து ஐந்தாவது தலைமுறை.

குடும்பமா வேலை பாக்குறீங்களா?

மாம். எங்களுக்குன்னு ஒரு சொசைட்டி இருக்குது , நிறையபேர் குடும்பமா இங்க வேலை பார்க்கறாங்க. என் மகன் காலேஜ் முடிச்சுட்டான். வேலை. கிடைக்கல. குலத்தொழில் இருக்க வேற வேலை எதுக்கு? அவனும் இங்கதான் வேலை பார்க்கிறான்.

போதுமான வருமானம் கிடைக்குதா?

ருமானம்னு பார்த்தா வாய்க்கும், கைக்கும் சரியா இருக்கும்.

சரி…இதுக்கெல்லாம் செய்ய எங்கேயிருந்து மண்ணு எடுக்குறீங்க?

குளத்துல இருந்து எடுப்போம். களி மண்ணு, வண்டல் மண்ணு சேர்த்து செய்வோம் . இந்த ஊரு (காரு குறிச்சி)மண்ணுக்குன்னு தனிச் சிறப்பு உண்டு. மலையடி வாரத்துல உள்ள குளத்து மண்ணு. அதனால இந்த மண்ணு மூலிகைச் சத்தும், இரும்புச் சத்தும் நிறைஞ்சு இருக்கும். கெமிக்கல் சேர்க்க மாட்டோம். பாருங்களேன் இந்தப் பானையெல்லாம் செக்கச்செவேல்னு இருக்குன்னா, அதுக்கு செம்மண்தான் காரணம். செம்மண்ண ஆத்து தண்ணில நல்ல கரைச்சு, வடிகட்டி வெயில்ல காய வெச்சு, நல்லா காஞ்சதும், திரும்பவும் நல்ல தண்ணில திக்கா கரைச்சு, காவி அடிச்சு வெயில்ல காய வைக்கனும்.

ஒரு நாள்ள எத்தன பானை செய்வீங்க?

ரு நாள்ள பத்து பானை கூட செஞ்சிடலாம். அதுக்கான மண்ணத் தயார் பண்ண ரெண்டு மூனு நாள் ஆகும் . அதிரசத்திற்குப் பாகு பதம், மாவு பதம் சரியில்லைன்னா அதிரசம் உதுருது மாதிரி, இதுல மண்ணு பதம் சரியில்லனா பானை கீறல் விழுந்துடும்.

அத எப்படி பதப்படுத்துவீங்க?

குளத்து மண்ண கட்டியில்லாம தட்டி, வெயில்ல காய வெச்சு மண்சல்லடையில சலிச்சு, அத நல்ல தண்ணில கரைச்சு, வடி கட்டி மூணுநாள் காய விடணும். வெயில் இல்லைன்னா ஒரு வாரம் ஆகும்.

விற்பனைக்கு எப்ப வரும்?

பானை சுடவைக்கணும். பத்து பானையெல்லாம் வெச்சு சுடமுடியாது. ஒரு சூளைக்கு 500 பானை வைக்கலாம். அத்தனையையும் அடுக்கி, சரிஞ்சு விழாம இருக்க இடையிடையே கம்ப வெச்சு, வெப்பம் வெளில போகாம இருக்க களி மண்ணக் குழைச்சு வைப்போம்
(அப்பா… கேட்கும்போதே தலை சுத்துது. நமக்கு இவர்களிடம் பேரம் பேசவே மனம் வராது போலும்.)

எத வெச்சு சுட வைப்பீங்க, எவ்வளவு மணி நேரம் சுட வைப்பீங்க?

வேலிக்கருவை மரம். எட்டு மணி நேரம் தீ போடணும். அதுக்கப்புறம் வியாபாரத்திற்கு வந்துடும்.

இதுல உங்களுக்கு எவ்வளவு செலவாகும்?

ரு சுள்ளை வண்டி மண்ணு, வண்டி கூலி, விறகு கூலி, ஏத்து எறக்க கூலின்னு ஒரு ஆறாயிரம் கிட்டவந்துடும்.

இங்கேயிருந்து எங்கெல்லாம் விற்பனைக்குப் போகுது?

கேரளா, மும்பை, கர்நாடகாவுக்கு… இன்னும் நிறைய இடத்துக்குப் போகுது. இங்கிருந்து வாங்கி, சிங்கப்பூருக்கும் அனுப்பறாங்க.

அரசாங்கம் உங்களுக்கு எந்த அளவு உதவி செய்யறாங்க?

ஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எடப்பாடி அய்யா பெரிய ரூம் திறந்து வெச்சாரு. அதுல பானைகளெல்லாம் பாதுகாப்பா வைக்க வசதியா இருக்கு. வெள்ள நிவாரண நிதின்னு வருஷத்துக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுப்பாங்க.

வருஷம் முழுக்க வேலை, வியாபாரம் இருக்குமா?

ருஷம் முழுக்க வியாபாரம் இருக்கும். பூந்தொட்டி, மண்பானை ஃப்ரிட்ஜ். இப்ப ஹோட்டலுக்கெல்லாம் மண் பாத்திரம் மொத்தமொத்தமா வாங்கிட்டுப் போறாங்க. இப்ப இடையில கொஞ்சமாசமா குளத்துல மண் எடுக்கப் பெர்மிஷன் கொடுக்காததனால வேலை இல்லாம இருந்தது. ஆண்டவன் புண்ணியத்துல இப்ப பெர்மிஷன் கொடுத்துட்டாங்க. இனி வருஷம் முழுக்க வேலை இருக்கும். அவர்கள் பேச்சில் ஒரு மனநிறைவு தெரிந்தது.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

போற்றி செல்வனும் போளியும்!

2
-ஆர். மீனலதா, மும்பை ஓவியம்: பிரபுராம் ஆவணி அவிட்டம் 11.08.22 “பொன்! பொன்னம்மா! கொஞ்சம் இங்க வரமுடியுமா?” லேடீஸ் க்ளப் பிரஸிடெண்ட்டுடன் பேசிக்கொண்டிருந்த ‘பொன்’ என்கிற பொன்மலர், மொபலை அணைத்து, “என்ன விஷயம்? ரொம்ப குழையற மாதிரி இருக்கே!” “நோ குழைசல்!...

ஊறுகாய் ரெசிபிஸ்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க! - ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி முள்ளங்கி ஊறுகாய் தேவை: முள்ளங்கி – 400 கிராம், கடுகு – 50 கிராம், மிளகாய்ப் பொடி – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி – 2 மேஜைக்கரண்டி,...

ஜெயித்திடடா!

0
கவிதை! - ஜி. பாபு, திருச்சி வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடமடா! அது வழங்கும் பாடங்கள் அதிகமடா! வரும் நாட்களை நினைத்துப் பாரடா! அது வளமாவது உன் கையில் இருக்குதடா! சிக்கனமாய் செலவு பண்ணுடா! வாழ்க்கை சீரும் சிறப்புமாயிருக்கும் பாரடா! எக்கணமும் யாரிடமும் ஏமாறாதேடா! வரும் இன்பத்தை...

நன்மைகள் அறிவோம்!

0
- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி தலைச் சளி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, ருசியின்மை, சிறுநீ்ர் தடங்கல், தாது பலவீனம் ஆகிய பிரச்னைகளைத் தயிர் போக்கும். நன்கு உறைந்து இனிப்புச் சுவையுடன் உள்ள தயிர்தான்...

கோயில் யானை வருகுது…

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க... ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம் - ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி   காந்திமதியின் காலுக்குச் செருப்பு! திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானைக்கு பக்தர்கள் சிலர்...