0,00 INR

No products in the cart.

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

ஆரோக்கியம்! 
உடலுக்கு ஏற்ற  கத்திரிக்காய்!

த்தரிக்காய் குறைந்த கலோரியும், நிறைய சத்துக்களும் கொண்டது. வாதநோய், சளி ,பித்தம், தொண்டைக்கட்டை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. முற்றிய பெரிய கத்திரிக்காய்களை விட பிஞ்சு கத்திரிக் காய்கள் மிகவும் மருத்துவப் பயன் கொண்டது. இதனை பத்திய சாப்பாட்டிற்கும் பயன்படுத்தலாம்.

பிஞ்சு கத்திரிக்காய் மூளை செல்களை பாதுகாக்கும். இதில் விட்டமின் C, A ,பொட்டாசியம், பைபர் உள்ளது. இதை உணவில் சேர்த்துக்கொள்ள அனிமியா என்ற இரும்பு சத்து குறைபாட்டை தடுக்க முடியும். இதில் உள்ள காப்பர் அதிக சிவப்பு ரத்த செல்களை உற்பத்தி செய்ய உதவுவதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும்.

பொரியல் ,பிட்லை ,துவையல், சாம்பார் ,கலந்த சாதம், தயிர் பச்சடி, பைங்கன் பர்த்தா என்று விதவிதமாக செய்து உண்ணலாம். பயத்தம் பருப்பு சேர்த்து கூட்டு செய்யலாம்.

———

வல்லமை மிக்க வல்லாரைக் கீரை

ல்லாரைக் கீரையில் இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, விட்டமின்கள், மினரல்கள் ஏராளமாக உள்ளன. வெரிகோஸ் வெயின் என்று சொல்லக்கூடிய கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சனையை சரி செய்யக்கூடியது.

வல்லமை மிக்க கீரை என்பதால் தான் இதற்கு இப்பெயர் வந்தது. இதைக்கொண்டு துவையல் செய்யலாம். பொரியல் பண்ணலாம்.மசியல் செய்யலாம். வாரத்திற்கு ஒரு முறையாவது இதனை உணவில் சேர்த்துக்கொள்ள மிகவும் நல்லது. ஞாபக சக்தியை அதிகரிக்கக்கூடிய வல்லமை மிக்க கீரை இது. இதனை சட்னி செய்தும் சாப்பிடலாம். இக்கீரையுடன் புளியை சேர்த்து சமைக்கக் கூடாது .அப்போதுதான் முழு பயனும் கிடைக்கும்

வல்லாரைக் கீரை சட்னி:

ல்லாரைக் கீரையை சுத்தம் செய்து சின்ன வெங்காயம் 6, பூண்டு 4 பற்கள்,  உப்பு சேர்த்து வாணலியில் வதக்கி துவையலாக அரைக்கவும். இக்கீரை ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

———-

சுண்டைக்காய் பயன்கள்

சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர வயிற்றுப் பூச்சிகள், கிருமிகள் அகலும். வயிற்றுப் புண் சரியாகும் .பச்சை சுண்டைக்காயை சமைத்து சாப்பிடலாம்.

சுண்டைக்காய் வத்தல்:     

லை சுண்டைக்காயை(சைஸ் கொஞ்சம் பெரிதாக இருக்கும்) நசுக்கி உப்பு, மஞ்சள்தூள்  போட்டு, மோரில் ஊற விட்டு, வெயிலில் காயவைக்கவும். நன்கு காய்ந்ததும் எடுத்து வைத்துக்கொள்ள சுவையான சுண்டைக்காய் வத்தல் ரெடி. இதனை வத்தக் குழம்பு ,மோர் குழம்பு, சாம்பார் ஆகியவற்றில் நல்லெண்ணெய் விட்டு வறுத்து சேர்க்கலாம்.  சுண்டை வற்றலை சிறிது நெய் விட்டு வறுத்து பொடிக்கவும். இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும்.  

சுண்டைக்காய் சூப்:

ச்சை சுண்டைக்காயை சூப் செய்து சாப்பிட சளி, இருமல், மூல சூட்டிற்கு மிகவும் நல்லது. சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி, உப்பு ,பூண்டு 2 பல் ,சின்ன வெங்காயம் 6,மிளகு  1/2 ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், கொத்தமல்லி சிறிது சேர்த்து சூப் செய்து சாப்பிடலாம்.

———-

 கலக்கல் கருப்பு கவுனி     

வுனி அரிசி கருப்பு நிறமாக காணப்படும் . ஆனால் வேக வைத்ததும் ஊதா நிறத்தில் இருக்கும் . இது கருப்பாக இருப்பதற்கு காரணம் இதில் உள்ள அதிகப்படியான அந்தோசினனின் என்ற மூலக்கூறு தான்.  இந்த அரிசி சீனாவை பூர்வீகமாக கொண்டது. பண்டைய சீன மன்னர்கள், மந்திரிகள், பெரிய வியாபாரிகள் மட்டும்தான் இதை முன்னர் பயன்படுத்தி வந்தனர்.

இதன் விலை சற்று அதிகம்தான் என்றாலும் சத்துக்கள் நிறைந்த அரிசி இது . ஒரு கப் அரிசியில் 160 கிராம் கலோரி ,இரண்டு கிராம் கொழுப்பு ,சோடியம் ,பொட்டாசியம், புரதம் , இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை உள்ளது. இது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைப்பதால் இதயம் பாதுகாக்கப்படுகிறது.

இதில் அதிக நார்ச்சத்து உள்ளது. புரோட்டீன், இரும்புச்சத்தும் உள்ளது. எடையை குறைக்க விரும்புவர்கள் இதனை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கஞ்சியாகவோ சாதமாக சமைத்தோ ,இட்லி தோசை என்ன செய்தோ சாப்பிடலாம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது.

இந்த அரிசி வேக நிறைய நேரம் எடுக்கும் என்பதால் குறைந்தது 8 மணி நேரமாவது இதனை ஊறவைத்து பின் சமைக்க வேண்டும் . முதல் நாள் இரவே ஊறவைத்து பின் 4 விசில் விட்டு சமைக்க நன்கு வெந்து விடும். அல்லது சூடான நீரில் இரண்டு மணி நேரம் ஊரை விட்டும் சமைக்கலாம். சாதம் உதிர் உதிராக இராமல் சிறிது குழைவாகத் தான் இருக்கும். ஆனால் ருசியும் சத்தும் அதிகம்.

இதனை ஒரு கப் எடுத்து வாணலியில் சூடு வர வறுத்து, குருணையாக உடைத்து வைத்துக் கொண்டு கஞ்சி ,பாயசம் எனவும் செய்யலாம்.

-கிருஷ்ணவேணி, சென்னை

————–

எளிய மருத்துவம்!

முருங்கைக் கீரை: வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை மென்று தின்றால் இரத்த அழுத்தம் குறையும்.

பேதி : மிளகு பொடி, வெல்லம் சேர்த்து குழைத்து சாப்பிட்டால் உடனே நிற்கும். வடிகட்டிய டீயில் எலுமிச்சை சாறு பிழிந்து பருகினால் நிற்கும்.

இளநீர்: ரத்த அழுத்தம், நீரிழிவு உணவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் அருந்தலாம்.

பூண்டு: ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதய கோளாறுகள் நீங்கும். உடலில் கொழுப்பு சேர்வதைக் கட்டுப்படுத்தும். ரத்தத்தை சுத்தம் செய்கிறது.

பாகற்காய்: இதை உணவில் சேர்த்துக் கொள்வதால் வயிற்றில் உள்ள பூச்சிகள் நீங்கும். பல்வலியை உண்டாக்கும். கிருமிகளை அழிக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாக செயல்படும்.

ஜீரணம்:  விருந்து சாப்பாடு ஜீரணமாக நீர் மோரில் சிறிதளவு பெருங்காயப் போடி கலந்து சாப்பிட்டால் போதும்.

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொல்லை ஏற்பட்டால் நான்கு மிளகையும் பத்து திராட்சைப் பழத்தையும் சேர்த்து அரைத்த வெந்நீரில் கலந்து காலை – மாலை இருவேளை சாப்பிட்டால் போதும்.

வாய்ப்புண் குணமாக மோரில் சிறிது உப்பு கலந்து வாயில் ஊற்றி சிறிது நேரம் வைத்திருந்து பின் துப்பவம். ஒரு வாரம் தினமும் இப்படி செய்தால் குணமாகும். ஜீரண கோளாறினால் வாய்புண் வந்தால் கரிசலாங்கண்ணி கீரை சாப்பிட்டால் போதும்.

தலைமுடிக்கு சிறந்தவை:

டீ தண்ணீரை தலையில் தேய்த்து ஊறியபிறகு குளித்தால், பொடுகு, சிரங்கு நீங்கி தலை குளிர்ச்சியாகும்.

கறிவேப்பிலை துவையல், வெங்காயம், கீரை, பசும்பால், பூசணிக்காய் அடிக்கடி சாப்பிட்டால் நரை வராமல் இருக்கும்.

வாழை இலையில் தினமும் சாப்பிட்டால் கூந்தலுக்கு நல்லது.

நல்லெண்ணெயில் வேப்பம்பூ சேர்த்து காய்ச்சி தலைக்கு தேய்த்துக் குளித்தால் பேன், பொடுகு வராது.
-மாலதி நாராயணன், சென்னை

2 COMMENTS

  1. மிகவும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்னுடைய எழுத்துக்கள் பதிவானதை பார்த்து நன்றி. சுண்டக்காய் வல்லாரைக் கீரை கத்தரிக்காயின் பயன்கள் பற்றி நான் எழுதிய கட்டுரை வந்தது கண்டு மிகவும் மகிழ்ச்சி.

  2. நாங்கள் வீட்டை பெருங்குடியில் இருந்து மயிலாப்பூருக்கு பேரனின் படிப்புக்காக ஷிப்ட் செய்ததால் என்னால் சரியாக நம் மங்கையர் மலர் மின் இதழை படிக்கவும், எழுதவும் முடியவில்லை. இனி தொடரும் என் வாசிப்பு பணியும் , எழுத்துப் பணியும். நன்றிகள் பல.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வெயிலுக்கேற்ற குளுகுளு மோர்! தேவையான பொருட்கள்: மோர்-1கப், இஞ்சிச் சாறு  - 2 டீஸ்பூன், விதை நீக்கிய நெல்லிக்காய் - 3, நாட்டுச் சர்க்கரை-1டேபிள் ஸ்பூன், புதினா - 1 பிடி, உப்பு -...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் இந்தியாவின் முதல் பெண் ஸ்கிப்பர் “கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போது என் பெயரை அழைத்த கேப்டன் அருண், என்னை கேப்டன் ஹரிதா என்று அழைத்து புல்லரிக்க  வைத்தார்.’ என்கிறார்...

ஒரு நாள் முழுவதும் ப்ளாஸ்டிக்கை தவிர்க்கும் சவாலை ஏற்கிறீர்களா?

-தனுஜா ஜெயராமன் ப்ளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருட்களின் தீமைகள் குறித்து அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கிய நிகழ்வாக வரும் மே 25 ம் தேதி ப்ளாஸ்டிக், குறிப்பாக டிஸ்போசபிள்...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

கடவுளை வணங்குவதும் பழக்கமே! தினமும் காலை கடமைகளை செய்துவிட்டு குளித்து பின் கடவுளை வணங்கவும். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். சின்ன, சின்னதாக 2 வரியில் சொல்லும் ஸ்லோகங்கள் சொன்னாலும் பக்தியுடன் சொல்ல பழக்குங்கள். எனக்கு அதற்கு...

ஜோக்ஸ்!

ஓவியம்: பிரபுராம்   “உன் வீட்டுக்காரர் ஜெயிலே கதின்னு இருக்காரா? அவர் என்ன ஆயுள் கைதியா?” “இல்லை… ஜெயில் வார்டனா இருக்காரு!” -ஆர். மகாதேவன், திருநெல்வேலி =================== “வோட்டுப் போட வந்தவங்களை ஏன் திரும்பிப் போகச் சொல்றாங்க?” “ஏற்கனவே 120 சதவிகிதம் வோட்டு...