0,00 INR

No products in the cart.

அனுபவம் புதுமை… பெருமை… கொடுமை!

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

படங்கள்: பிள்ளை

பாராட்டு பெற்ற பாதுஷா; சொதப்பி சமாளித்த அதிரசம்!

எங்கள் தலை தீபாவளிக்கு அகமதாபாத்தில் இருந்த என் கணவருடைய மாமா வீட்டுக்குத் தான் சென்றோம். ‘தீபாவளியா இருக்கே, ஸ்வீட் ஏதாவது பண்ணு. மாமாவுக்கும் எடுத்துண்டு போவோம்’ என்றார் கணவர். பாதுஷா பண்ணலாம் என்று ‘சமையல் புத்தகம்’ (அப்போதெல்லாம் you tube எல்லாம் கிடையாதே.) பார்த்து, தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கிப் பண்ணினேன். ஓரளவு நன்றாகவே வந்தது. முதன் முதலாகப் பண்ணின பாதுஷாவுக்கு, மாமா, மாமியிடம் பாராட்டும் கிடைத்தது.

ஒரு வருடம் தீபாவளிக்கு என் மாமியார் வீட்டுக்கு ஏதாவது இனிப்பு செய்து எடுத்துக் கொண்டு போகலாம் என்று நினைத்தேன். ‘அதிரசம் பண்ணு’ என்றார் என் கணவர். ஈர அரிசியை உலர்த்தி, மாவாக்கினேன். வெல்லத்தை, தட்டைப் பாகு காய்ச்சி, மாவையும் கலந்து ஊற வைத்தேன். இதுவரை ஓகே. மறுநாள் திறந்து பார்த்தால், மாவு இறுகிப் போய் கெட்டியாக இருந்தது. வெந்நீர் விட்டுக் கரைத்தேன். தண்ணீர் ஜாஸ்தியாகி, நீர்க்க ஆனது. மறுபடியும் மாவு சேர்த்தேன். தித்திப்பு குறைந்து போனது. அப்பப்பா… ஒரே சொதப்பல்தான் போங்க. கடைசியில் கடையில் அதிரசம் வாங்கி, ஊருக்கு எடுத்துக்கொண்டு போனோம்.
– ஜெயா சம்பத், கொரட்டூர்

பாகு பதம் (vs) கம்பி பதம்:

பாராட்டு மழையில் என்னை எப்போதுமே நனைய விடுவதும், சில நேரங்களில் நானே வெட்கப்படும் அளவுக்கு புகழ்மாலை கழுத்தில் விழுவதும் அந்த மங்கையர் மலர் மைசூர்பாக் ரெசிபியால்தான். இப்போதும் தீபாவளிக்கு ஒரு சகோதரி ஒரு கிலோ கேட்டிருக்கிறார். (ஒரு கிலோ வாங்கி என்ன செய்யப்போகிறார் என்பதுதான் தெரியவில்லை). அதே நேரத்தில் என்னை சொதப்பலில் விட்டது யூடியூபில் பார்த்து செய்த அதிரசம். வெல்ல அதிரசம் என்றார்கள். இரண்டு கம்பி பதம் என்றார்கள். வெல்லம் பாகு பதமே வராதபோது, நான் கம்பி பதம் எண்ணினேன் பாருங்கள்… இப்பவும் அழுகை வரும். பயங்கர சொதப்பல்.
‘மங்கையர் மலர் வாசகீஸ் எத்தனையோ ரெசிபி கொடுத்திருக்க, நீ ஏன் அங்கே போனாய்?’ என்கிறீர்களா? விதி!
– மங்களகெளரி பெருமாள், மலேசியா

ஹெவன் கப்:

பொதுவா, நான் செய்யும் பட்சணங்களில் முறுக்குக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைக்கும். அக்கம்பக்கத்தாருடன் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும்போது சுவையிலும் மொறுமொறுப்பிலும் முதலிடம் பெறுவது எனது முறுக்குதான். நான் செய்யும் செவன் கப் ஸ்வீட் வெளிநாடுகளிலிருக்கும் நண்பர்களிடையேயும் பிரசித்தம். அமெரிக்க நண்பர் ஒருவர், “அதென்ன செவன் கப்பா அல்லது ஹெவன் கப்பா?” என்பார்.

சொதப்பல் அனுபவம் என்றால், அது எங்கள் தலை தீபாவளிக்கு அம்மா வீட்டுக்கு சென்றிருந்தபோது நடந்ததுதான். அங்குள்ள பட்சணங்களைப் பார்த்தால் முறுக்கு, வடை, பணியாரம் தவிர்த்து எல்லாமே கடையில் வாங்கினவை. “என்னம்மா, வீட்டில் செய்த நல்ல ஸ்வீட் ஏதுமில்லையா?” என வீராப்பா கேட்டுவிட்டு மைசூர்பா செய்ய நானே களத்தில் இறங்கினேன். பாகு பதம் சரியா வராம பொல பொலன்னு உப்புமா போல வந்துச்சு. இலையில் வைக்கப் பிடிக்காம மறைச்சு வச்சிட்டேன். என்னவரோ விடாம, “நீ செஞ்ச ஸ்வீட் எங்க” னு கேட்டு பிடுங்கி எடுக்க, ஒரே ரகளையானது. இன்றும் மைசூர் உப்புமானு சொல்லி கிண்டல்தான்.
– ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்

புதுமை போளி:

தீபாவளிக்கு பட்சணம் செய்யும்போது சொதப்பி பல்பு வாங்கி, பிறகு சமாளித்து
எல்.இ.டிக்கு நிகராக புது டிஷ் கண்டுபிடித்த அம்மணிகள் நிறையவே உண்டு. என்னையும் அந்த குரூப்ல சேர்த்துக்கோங்க. சில வருடங்களுக்கு முன்பு, தீபாவாளிக்கு மாலாடு பண்ணினேன். ஸ்வீட்டை பொறுத்தமட்டில், அழகாக எலுமிச்சை போல், மஞ்சள் மினுங்க உருட்டி டிரேயில் வைத்து விட்டேன். நெய் அதிகமாகி விட்டது போல… காலையில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து விட்டன. ‘என்னடி கோமதி, உனக்கு வந்த சோதனை’ என யோசித்தேன். ஐடியா மின்னியது. மைதா மாவைப் பிசைந்து, ஊறவைத்து மாலாடுகளை சின்னதாக உருட்டி, பூரணமாக வைத்து போளி பண்ணி விட்டேன். எல்லா வீடுகளுக்கும் பட்டுவாடா பண்ணி பாராட்டும் வாங்கினேன்.
– என்.கோமதி, நெல்லை

‘ஸ்வீட்’ சர்ப்ரைஸ்:

நான் செய்யும் ஸ்வீட், கார வகைகளுக்கு குடும்பத்தினர் அனைவரும் லைக்ஸ்தான் தருவர். என் பேவரிட் பட்சணங்களான தே பர்ஃபி, நாடா பக்கோடாவிற்கு எல்லோரும் அடிமை என்றே சொல்லலாம். என் signature ரெசிபியான இவை இரண்டும் எப்போதும் சொதப்பாமல் வந்துவிடும். இதன் மூலம் ஒரு உறவினரின் வீட்டில் நடந்த சின்ன பங்ஷனில் இவற்றை என்னை செய்யச் சொல்லி ஆர்டர் கிடைத்ததுதான் ஸ்வீட் சர்ப்ரைஸ். பாராட்டு மழையில் நனைந்தது தனி சுகம்.
– மகாலட்சுமி சுப்பிரமணியன்,
காரைக்கால்

ஜாமுன் (அத்தை?) படுத்தியபாடு!

என் மாமனாருடைய அத்தை வெளியிலிருந்து வரும் எந்தப் பொருளையும் சாப்பிடவே மாட்டார். குலோப் ஜாமுன் ரெடி மிக்ஸ் பவுடர் வாங்கி செய்தால் கூட சாப்பிட மாட்டார். ஒரு நாள் என்னிடம், “குலோப் ஜாமுன் செய்வது எப்படி?” என்று கேட்டார்.

மிக அருமையாக சமையல் செய்யும் அவரே என்னிடம் குலோப் ஜாமுன் பற்றிக் கேட்டதும் நான் அந்தப் பாக்கெட்டின் பின்புறம் இருக்கும் தேவையான பொருட்கள் பற்றி அவருக்குப் படித்துச் சொன்னேன்.

“இந்தப் பவுடரை நாம் வீட்டிலேயே தயார் செய்யலாமே?” என்று கூறி அதற்குத் தேவையான பொருட்களை வாங்கி வரச் சொன்னார்.

மைதா, பால் பவுடர், பேக்கிங் சோடா என்று எல்லாவற்றையும் வாங்கி வந்தேன்.
ஒரு கப் மைதா, ஒரு கப் பால் பவுடர், ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, பிறகு ஒரு கரண்டி நெய் என்று போட்டு எல்லாவற்றையும் கலந்து அவற்றை பாலில் பிசைந்து சிறிது சிறிதாக உருட்டி நெய்யில் போட அது, ‘டப்’ என்று வெடித்தது.

“இது ஏன் இப்படி சீடை போல் வெடிக்கிறது?” என்று என்னை அவர் கேட்க,

“கலந்த விகிதம் சரியாக இல்லையோ என்னவோ? எனக்குத் தெரியவில்லையே?” என்று நான் கையைப் பிசைந்துகொண்டு நின்றேன்.

அவர், விடாபிடியாக தான் உருட்டிய உருண்டைகளை எண்ணெயில் பொரித்தெடுத்து ஜீராவில் போட்டார். அது ஊறாமல் என்னைப் பார்த்து சிரித்தது. “ஏன் இப்படி ஊறவே மாட்டேன் என்கிறது?” என்று அதைக் கிளறி விட்டு பார்த்தார்.

எவ்வளவோ முயன்றும் கடைசி வரை அவரால் அந்த குலோப் ஜாமுனை மட்டும் கடையில் வாங்கும் மிக்ஸில் செய்ததுபோல செய்யவே முடியவில்லை.
– உஷா முத்துராமன், திருநகர்

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

2
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

1
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

1
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...