0,00 INR

No products in the cart.

தீபாவளி தகவல்கள்… தெரிந்து கொள்வோம்!

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

தீபாவளி தகவல்கள்… தெரிந்து கொள்வோம்!
 • தீபாவளியன்று காசி கங்கையில் நீராடி, விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணியை தரிசிப்பது புண்ணியம் தரும். 64 ஸ்நான கட்டங்கள் கங்கைக் கரையில் உள்ளன. அவற்றுள் ஆதிகங்கை என்ற தீர்த்தக் குளம், ஞான வாவி என்ற சிறு தீர்த்தக் கிணறு, மணிகர்ணிகா தீர்த்தம், சக்ர தீர்த்தம் முதலியவற்றில் மக்கள் அதிக அளவில் நீராடுகின்றனர்.

 • திருமலை திருப்பதி வேங்கடாசலபதி கோயிலில் தீபாவளியன்று மாலையில், ‘அஸ்கர தானம்’ எனும் சிறப்பு வழிபாடு நடக்கும். முதலில் மலையப்ப சுவாமி தங்கப் பல்லக்கில் உள் பிராகாரம் சுற்றி வருகிறார். பிறகு கருடாழ்வாருக்கு முன்பு இறக்கி வைக்கப்படுவார். அடுத்து, ‘விசூ விபாடி’ என்ற நிகழ்ச்சி நடக்கும். மூலவருக்கு புதிய பட்டு வஸ்திரங்கள் வழங்கப்படும்.
  – ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்.

——————————–

தீபாவளி பண்டிகையை முதன்முதலில் கொண்டாடியது யார் தெரியுமா? நரகாசுரனின் மகன் பகதத்தன். தந்தை இறந்த தினத்தில் பகதத்தன் கண்ணபிரானுக்கும் அவனது ராஜகன்னிகைகளுக்கும் பெரும் வரவேற்பளித்து, எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, பட்டு வஸ்திரம் தரிக்கச் செய்து, அரண்மனையை மிகவும் அலங்கரித்து, தனது பிரஜைகளையும் கொண்டாட வைத்தான். கண்ணபிரான் இதில் மகிழ்ந்து, அவனது பக்தியைப் பாராட்டி, ‘ப்ராக்ஜயோகிஹம்’ என்ற பட்டிணத்திற்கு (பகுதத்தனின் பட்டினம்) ‘பகதத்தபுரம்’ எனும் பெயரைச் சூட்டினார். தற்போதைய, ‘பாக்தாத்’ பட்டினம்தான் அந்நகரம்.
– ஸரோஜா ரங்கராஜன், சென்னை.

——————————–

தீபாவளி பண்டிகையின் சிறப்பினைப் பற்றி ஸ்ரீவிஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம், சேஷதர்மம், ஸ்ம்ருதி, முக்தாபலம் முதலிய நூல்கள் விரிவாகக் கூறுகின்றன.

நித்யான்னிகம்’ என்ற நூலிலும் தீபாவளி மகிமை, பெருமைகள் கூறப்படுகின்றன. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம், நரகாசுரன் மரண தருவாயில் வரம் கேட்டதால் ஏற்பட்டதுதான் இந்தத் தீபாவளி பண்டிகை.

இந்தப் புண்ணிய தினத்தில்தான் திருமகளை, திருமால் திருமணம் புரிந்துகொண்டதாக ஸ்ரீ விஷ்ணு புராணம் கூறுகிறது. இதனால் தீபாவளியை, ‘ஸ்ரீ லக்ஷ்மி பரிணய தினம்’ என்றே அழைப்பதுண்டு.

இப்படி, விவாகக் கோலத்தில் இருந்த ஸ்ரீ லக்ஷ்மி நாராயணனை தேவர்கள் ஒவ்வொருவராக நமஸ்கரித்தனர். அப்போது யம தர்மராஜனும் பணிந்து வணங்கினான். உடனே தேவி, யம தர்மராஜனிடம், ‘‘இன்றைய தினம், இப்பண்டிகையை முறைப்படி கடைப்பிடிப்பவர்களது வீட்டில், நீ என் அனுமதியின்றி உயிர்களைக் கவர்ந்து செல்லக்கூடாது’’ என்று கட்டளை பிறப்பித்தாள்.

தர்மராஜனும் ஸ்ரீதேவியின் ஆணைப்படியே நடப்பதாக வாக்களித்தான். இதனால் மகிழ்ச்சியுற்ற அலைமகள் யமனிடம், “இன்று உன்னையும் மனிதர்கள் ஆசாரத்துடன் சோபனாக்ஷதைகளால் பதினான்கு தர்ப்பணங்கள் செய்து திருப்தி செய்விக்கட்டும்” என்று வரம் அளித்தான். இதுவே, ‘யம தர்ப்பண’மாகக் கடைபிடிக்கப்படுகிறது.

தவிர, தீபாவளியன்று நரகாசுரனை பகவான் வதம் செய்யச் சென்றபோது, அரக்கர்கள் ஸ்ரீலக்ஷ்மி தேவியைக் கொல்ல பெரும் முயற்சி செய்தனர். உடனே திருமகள் சூஷ்ம ரூபம் தரித்து எண்ணெய்யில் எரிந்து கொண்டு இருந்த தீபத்தில் மறைந்து விட்டாள்.

ரகனை வதைத்துத் திரும்பிய பகவான், அரக்கர்களைக் கொன்று தேவியை மீட்டார் என்று ஸ்ரீ விஷ்ணு புராணம் கூறுகிறது. இதனால்தான் இன்று தீபத்தையும், தைலத்தையும், ஸ்ரீலக்ஷ்மி ஸ்வரூபமாகக் கொண்டாடுகிறோம். இன்று தீப பூஜையும் வட இந்தியாவில் செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகையைக் கடைப்பிடிப்பதற்கு சாஸ்திரங்களில் விதிமுறைகள் கூறப்படுகின்றன. அதாவது, ஐப்பசி மாதம் தேய்பிறையில் அமாவாசைக்கு முன் தினமான சதுர்த்தசியன்று, பின் இரவில் அதிகாலை மூன்று மணியளவில் துயில் எழ வேண்டும்.

தீபாவளிக்கு முன் தினம் இரவே, வீடு முழுவதும் மெழுகிக் கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். அதிகாலையில் எழுந்ததும் சுத்தமான தண்ணீரை எடுத்துக் குடம் அல்லது தவலையில் நிரப்பிச் சந்தனம், குங்குமம், வாசனை புஷ்பத்தால் அலங்கரிக்க வேண்டும்.

பிறகு ஆல், அரசு, புரசு, அத்தி, மாவலிங்கம் ஆகிய ஐந்து மரத்தின் பட்டைகளையும் தண்ணீரில் சேர்த்துக் கலந்து வெந்நீர் தயார் செய்ய வேண்டும். இதனை கோலம் போட்ட பலகையின் மேல் வைத்து புஷ்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
தீபம் ஏற்றி தைலம், வாசனாதி திரவியப் பொடிகள், லேகியம், புத்தாடைகள், ஆபரணங்கள் முதலியவற்றைப் பகவானுக்குச் சமர்ப்பிக்க வேண்டும். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிற்கு மாலைகள் சூட்டி, நிவேதித்து கற்பூர ஹாரத்தி காட்டி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஸ்நானம் செய்த பிறகு புத்தாடைகள் அணிந்து, ஸ்ரீலக்ஷ்மி நாராயணனை புஷ்பங்களால் பூஜித்து இனிப்புப் பண்டங்கள், பழங்கள், தாம்பூலம் நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு பகவானையும் பெரியோர்களையும் நமஸ்கரித்து, வாண வேடிக்கைகளாலும், தீபங்களாலும் வீடு முழுவதும் ஒளிரச் செய்ய வேண்டும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் தீபாவளி பலகாரங்கள் உண்டு பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.

இத்தகைய தீபாவளி தினத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணனை நன்கு வழிபட்டு அனுஷ்டித்தால் எல்லா நலமும் பெறுவோம் என்பது திண்ணம்.

‘கங்கா தேவி நமஸ்துப்யம் சிவ சூட விராசிதே
சரண்ய ஸர்வ பூதானாம் த்ராஹிமாம் சரணாகதம்’
(இக்கட்டுரையை எழுதிய வாசகர் தனது பெயர் மற்றும் முழு முகவரியைத் தெரிவிக்கவும்.)

——————————–

 •  ர்நாடக மாநிலம், குலூர் என்ற ஊரில் ஸ்ரீகணேஷ் கோயில் உள்ளது. பிருகு முனிவர் இங்கு வந்தபோது பிள்ளையாரை மண்ணால் செய்து வழிபட்டுள்ளார். அந்த நாள் தீபாவளி திருநாளாகும். அதனால் குலூர் மக்கள் தீபாவளிக்கு முதல் நாளன்று அங்கேயுள்ள மூன்று குளங்களில் இருந்து மண் எடுத்து, எட்டு முதல் பத்து அடி உயரங்களில் பெரிய கணபதி சிலை செய்து தீபாவளியன்று சிறப்பு அபிஷேகம், பூஜை செய்கிறார்கள்.
 • கேரளாவில் பொதுவாக தீபாவளி கிடையாது. ஆனால், திருவாங்கூர் அருகேயுள்ள வேங்கடாசலபதி கோயிலில் எழுந்தருளியுள்ள பூதேவிக்கு தீபாவளியன்று சிறப்பு பூஜை செய்து, ‘குமட்டி’யை கோயிலுக்குக் காணிக்கையாக அளிக்கின்றனர். விவசாயம் சிறப்பாக நடந்து, மக்கள் வளமுடன் வாழ்வதற்காகத்தான் இந்த பூஜை என்பது அவ்வூர் மக்களின் நம்பிக்கை.
 • இமயமலையிலுள்ள கங்கோத்ரியில் புராதன கங்கா தேவி கோயில் உள்ளது. இங்கு தீபாவளியன்று தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று கங்கா தேவியை வேண்டி வழிபட்டால் வாழ்க்கை இன்பமாக இருக்கும். துன்பங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
 • தீபாவளியன்று மதுரா, துவாரகா கிருஷ்ணன் கோயில்களில் ஸ்ரீகிருஷ்ணனுக்கு பால் அபிஷேகம் செய்து, வண்ண ஆடைகள் அணிவித்து, நகைகள் பூட்டி அழகு செய்கின்றனர். அன்று பக்தர்களுக்கு இனிப்புகள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
 • மத்தியப் பிரதேசத்தில் தீபாவளி, உழவர்களின் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இன்று புதிய கதிர் அறுத்து வந்து பூஜை செய்வார்கள். மறுநாள் மாட்டுக் கொட்டகையில் பொங்கல் வைத்து பூஜை செய்கிறார்கள்.
  – எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்.

——————————–

 • த்திய பிரதேசம், வடமேற்கு பகுதி ‘ரத்லா’ என்று அழைக்கப்படும். இந்த நகரத்தில் ஒரு மகாலட்சுமி கோயில் உள்ளது. இங்கு பக்தர்களுக்கு தங்கம் பிரசாதமாகத் தரப்படுவது மிக மிக ஆச்சர்யமான விஷயம். இங்கு பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற நேர்த்திக் கடனாகத் தங்கம் அல்லது வெள்ளியை காணிக்கையாகத் தருகிறார்கள். இவற்றை கோயில்களின் திருப்பணிக்குப் பயன்படுத்துவது மட்டுமில்லாமல், வருடந்தோறும் தீபாவளிக்கு இக்கோயிலுக்கு வருகை தரும் திருமணமான பெண்களுக்குப் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. அதை யாரும் விற்பதில்லை. தங்களிடம் மகாலட்சுமியே வந்திருப்பதாகவும், அதை அதிர்ஷ்டமாகவும் கருதுகிறார்கள்.
 • தீபாவளியன்று இக்கோயில் நூறு கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  – டி.நிர்மலா தேவி, மதுரை.

——————————–

 • ப்பசி மாதத்தை, ‘துலா மாதம்’ என்று சொல்வார்கள். ஏன் தெரியுமா? துலாக்கோல் என்றால் தராசு. தராசின் இரு தட்டுகளும் சம நிலையில் இருக்கும். அதுபோல், ஐப்பசி மாதத்தில் மட்டும் இரவும் பகலும் சம அளவில் இருக்கும். எனவே இது, ‘துலா மாதம்.’
 • தீபாவளிக்குக் காரணமான நரகாசுரனின் உண்மையான பெயர் பவுமன் என்பதாகும். பவுமன் என்றால், ‘பூமியின் பிள்ளை’ என்று பொருள். அவன் எல்லோரையும் இம்சித்து, நரகப் பாதைக்குச் சென்றதால், நரகாசுரன் என்ற பெயர் ஏற்பட்டு அதுவே நிலைத்து விட்டது.
 • தீபாவளி பண்டிகைக்காக மாமனார் வீட்டுக்குச் சென்ற திலகர், சீதனமாகக் கேட்டது என்ன தெரியுமா? பொன்னும் பொருளும் அல்ல; அறிவைப் பெருக்கும் நல்ல நூல்களை. இதைக் கேட்ட மாமனார் உடனே வாங்கிக் கொடுத்தார். திலகர் அளவில்லா மகிழ்ச்சியுற்றார்.

 • ர்நாடக மாநிலம், ஹாசன் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா அம்மன் கோயிலில் தீபாவளி பண்டிகை நேரத்தில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் முடிந்த பிறகு கோயில் நடை சாத்தப்படும்போது ஏற்றப்படும் தீபம், ஓராண்டு கழித்து அடுத்த தீபாவளிக்கு நடை திறக்கப்படும் வரையிலும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் என்பதும் அம்மனுக்கு அணிவிக்கும் பூவும் வாடாமல் அப்படியே இருக்கும் என்பதும் ஆச்சரிய அதிசயமாகும்.
 • சிக்மகளூர் பிண்டுகாவில் உள்ள தேவிரம்மா கோயில், டைமண்ட் வடிவில் இருக்கும். இந்த மலைக்கோயிலில் தீபாவளி அன்று தீப உத்ஸவம் சிறப்பாக நடக்கும். இந்தக் கோயிலில் மேளம் அடித்தவுடன், கோயில் கருவறை தானாகத் திறக்கும்.
  – ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

0
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...