0,00 INR

No products in the cart.

இடைவெளி சமாச்சாரங்கள்!

கட்டுரை : லதானந்த்
படங்கள் : சுதர்ஸன்

மூக இடைவெளி ரொம்ப முக்கியமானது என்பது இப்போது எல்லோருக்கும் ஓரளவு தெரியவந்திருக்கும். ஆனால், இடைவெளி என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல; பட்டாஸுகளுக்கும் உண்டு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்தானே?

அப்போதைய தீபாவளி பண்டிகைகளிலும் ராக்கெட் என்னும் வாணம் முக்கியப் பங்கு வகித்தது. ஆனால், இப்போதிருக்கும் ராக்கெட்டுகள் போல வானத்தில் வர்ணஜால வித்தையெல்லாம் காண்பிக்காது. ஒரு குச்சி, அதன் முனையில் திரியுடன் கூடிய சின்ன மருந்துப் பொட்டலம். இதுதான் அந்தக் கால ராக்கெட்டின் வடிவம். திரியைப் பற்ற வைத்ததும், கொஞ்ச நேரம், ‘ஸ்ஸ்ஸ்ஸ்’ என்று மெல்லச் சீறும். சில வினாடிகளிலேயே சீறல் அதிகமாகி மஞ்சள் வண்ணத்தில் தீத்துகள்களைக் கீழே வெளியேற்றிவாறு, ‘சுர்ர்ர்ர்ர்’ என்ற ஒலியுடன் வெகு வேகமாக மேலெழும்பி, ‘டமார்’ என்ற ஒற்றை வேட்டுச் சத்தத்துடன் தன் கடமையை முடித்துக்கொண்டு, வெற்றுக் குச்சியாய் எங்காவது விழும். அவ்வளவுதான். ‘சரி… இதில் இடைவெளிப் பிரச்னை எங்கே வந்தது?’ என்றுதானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன்.

ம்பவம் நடந்தது 1960களில் என்பதை நினைவில் நிறுத்தி இதைப் படிக்கவும். அப்போதெல்லாம் மதுவிலக்கு அமலில் இருந்தபடியால் பீர் பாட்டில்கள் கிடையாது. தண்ணீரை விலைக்கு வாங்கும் பொருளாதார முன்னேற்றமும் இல்லை. தோதான பிளாஸ்டிக் பாட்டில்களும் புழக்கத்தில் குறைவு. எனவே, ராக்கெட்டின் ஏவுதளமான குப்பிகளுக்கு ஏக டிமாண்ட்!

சுமுகமான நிர்வாகம் நடக்க மாநிலத் தலைமைக்கும், மையத் தலைமைக்கும் எப்படி ஒரு அனுசரணை இருக்கவேண்டுமோ அப்படி ராக்கெட்டுக்கும் அதன் ஏவுதளத்துக்கும் ஒரு புரிந்துணர்வு இருப்பது ரொம்ப முக்கியம்!

ராக்கெட் விடவேண்டும் என்று நண்பர் மாதப்பனுக்கு ஆர்வம் மிகுந்தது. ஆனால், அவரது ஆர்வக்கோளாறினால் சரியான இடைவெளி தரும் பாட்டிலை அவர் தேர்வு செய்யாதது சில வினோதப் பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிட்டது.

வீட்டில் இருந்து ஒரு சொம்பை லவட்டிக்கொண்டு வந்துவிட்டார். அதில் ராக்கெட்டின் குச்சியை நட்டார். அது தேவைக்கும் அதிகமான கோணத்தில் சாய்ந்திருந்தது. திரைப்படங்களில் அரிவாள் வீச்சுக்கு, இடுப்பையும் அதற்கு மேலேயும் பின்னோக்கி வளைத்து ஹீரோ தற்காத்துக்கொள்ளும் கோணத்தில் ராக்கெட் நிற்கிறது.

மாதப்பன் உரிய சமூக இடைவெளியில் நின்று பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்து திரியைப் பற்றவைத்தார். அது விட்ட ஆரம்பப் புகையின் காட்டம் தாங்காமல் சொம்பு உருண்டோடி விட்டது. ஆனாலும், ராக்கெட் தனது பயணத்தை நிறுத்துமா? ரோட்டுக்கு இணையான பறக்கும் பாதை ஒன்றைத் தேர்ந்தெடுத்த அது, சீறிக்கொண்டு செல்ல ஆரம்பித்தது. அப்போதெல்லாம் சைக்கிள் என்ற இரு சக்கர வாகனம் ரொம்ப ஃபேமஸ். அதை ஓட்டியவாறு, ‘உல்லாச உலகம் எனக்கே சொந்தம்’ என்ற பாடலை உரக்கப் பாடிக்கொண்டு உலகநாதன் என்பவர் வந்துகொண்டிருந்தார். அவருக்கு மூன்றடி தூரத்தில் நிலைகொண்ட நமது ராக்கெட் வெற்றிகரமாக, ‘டமார்’ என்று வெடித்தது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மாதப்பன் உடனடியாக எஸ்கேப்பானார்.

அதிக பாதிப்படையாத சைக்கிள் மாமா கீழே விழுந்துவிட்டார். தன் மீது முன்னறிவிப்பின்றி ராக்கெட் ஏவித் தாக்க முயற்சித்தவரைக் கடுங்கோபத்தில் வசைபாடியவாறு இன்றுவரை திருவல்லிக்கேணி புச்சிபாபு வீதியில் தேடிக்கொண்டிருக்கிறார் அவர்.

க, வாயகன்ற பாத்திரம் ராக்கெட் விட தோதுப்படாது என்ற அனுபவப் பாடத்தைக் கற்ற மாதப்பன், அடுத்ததாகத் தேர்ந்தெடுத்தது ஒரு டிஞ்சர் பாட்டிலை. ‘அதென்னது டிஞ்சர் பாட்டில்?’ என்கிறீர்களா? சொல்கிறேன். அந்தக் காலத்தில் காயங்களுக்குப் பூசப்படும் மருந்துதான் டிஞ்சர். கருநீல வண்ணத்தில் காட்டமான நெடியுடன் இருக்கும். காயத்தின் மீது பூசினால் செம எரிச்சலைக் கொடுக்கக்கூடிய திரவம். அதை அடைத்திருக்கும் குப்பியைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். சுமார் ஆறு அங்குல நீளமும் மூன்று விரல் அளவுக்கு சுற்றளவும் குறுகிய வாயும் கொண்ட பாட்டில் அது. அந்தக் குப்பியில் பயன்படுத்தப்படாத டிஞ்சரும் பாதியளவு இருந்தது. அந்தக் குப்பியைத்தான் மாதப்பன் தனது அடுத்த ராக்கெட் ஏவும் முயற்சிக்குத் தேர்ந்தெடுத்தார்.

கொஞ்சம் சிரமத்துடன் குப்பியின் வாயில் ராக்கெட்டின் அடிப்பாகமான குச்சியை சொருகினார். இப்போது ராக்கெட்டும், குச்சியும் புரிந்துணர்வுக்கு வந்திருக்கும் அரசியல்வாதி – ஒப்பந்ததாரர் போல இணக்கமாக இருந்தன.

திரியைப் பற்ற வைத்தார் மாதப்பன். மருந்தின் செயல்பாட்டால் மேலெழும்ப முயற்சிக்கிறது ராக்கெட். சுமார் ஆறடி மட்டும்தான் அதனால் உயர முடிந்தது. டிஞ்சர் கொண்ட பாட்டிலின் புவி ஈர்ர்ப்பு விசை அதைக் கீழே இழுக்கிறது. இருதலைக் கொள்ளி எறும்பான ராக்கெட், அந்தரத்தில் சீறிக்கொண்டு நிற்கிறது. இந்தப் புது விதமான பட்டாஸைத் தெருவே வேடிக்கை பார்க்கிறது. எதற்கும் ஒரு முடிவு இருக்குமல்லவா? ஒரு கட்டத்தில் ராக்கெட் டமார் என்று வெடித்துத் தனது இறுதிக் கடமையைச் செய்தது. அதனுடன் கூடவே வெப்பம் தாங்காத டிஞ்சர் பாட்டிலும் வெடித்தது. அதிலிருந்த டிஞ்சர், காயம் இல்லாதவர்கள் மீதும் சாயம் போல பூசியது. இந்த உபயம் செய்த மாதப்பன் மறுபடியும் எஸ்கேப். இப்பத் தெரிகிறதா சரியான இடைவெளி எவ்வளவு முக்கியம் என்று!

துவும் மாதப்பன் தொடர்பான இடைவெளி சமாச்சாரம்தான். அப்போது அவருக்குக் கல்யாணம் ஆன புதுசு. விருந்தினராக மனைவி லதாவின் தமக்கை வீட்டுக்குச் சென்றிருக்கிறார். விருந்தெல்லாம் தடபுடலாக நடந்திருக்கிறது. பின்னர் புது மணத் தம்பதிகள் உறங்கச் சரியான அறையைத் தேர்வு செய்ய வேண்டுமே?
வீட்டின் தரைத் தளத்திலும் முதல் தளத்திலும் அறைகள் இருக்கின்றன. லதாவிடம் விவரங்கள் சொல்லி மாதப்பனின் அறைத் தேர்வுக்காக அறைக்கு வெளியே பெண்டுகள் கூட்டம் காத்திருக்கிறது.

அறைக்குள் வந்த லதா விவரங்களைச் சொல்லி, “முதல் தளத்தில் இரட்டைக் கட்டில் வசதி உண்டு. ஆனால், இயற்கைக் காற்று வராது. மாடி அறையில் அற்புதமாகக் காற்று வரும்; ஆனால் ஒற்றைக் கட்டில்தான் இருக்கிறது” என்கிறாள்.

மாதப்பன், “மாடி அறையே போதும்” என்கிறார்.

“மாடி அறையில் ஒரே ஒரு கட்டில்தான் இருக்கிறதே…” என இழுக்கிறார் சகதர்மிணி. மந்தகாசமாகச் சிரித்துக்கொண்டே மாதப்பன் சொல்கிறார். “நமக்கு ஒரு பெஞ்ச் போதுமே!”
இந்த இடைவெளித் தேர்வைக் கேட்ட, வெளியில் இருந்த பெண்டுகள் முகம் சிவந்துவிட்டதாம்!

சில பொருட்களை அதனதன் இடத்தில், உரிய இடைவெளியில் வைக்காமல்போனாலும் சிக்கல் ஏற்படுவதுண்டு.

இதோ, இதை கவனியுங்கள். தீபாவளி கொண்டாட்டத்துக்காக மாதப்பன் வீட்டுக்கு வந்திருந்தார் எரகாம்பட்டிச் சித்தப்பா. அவருக்கு மாலையிலும் பல் துலக்கும் வழக்கம் உண்டு. வாஷ் பேஸின் மீது உரிய இடைவெளியில்லாமல் பல பொருட்களும் இருந்திருக்கின்றன. வந்தவர் சாயங்காலம் ஆனதும் வாஷ் பேஸின் மேலிருந்த பேஸ்ட் ஒன்றைப் பிதுக்கி, வலது கை ஆள்காட்டி விரலில் சேமித்துக்கொண்டு, சுவாரசியமாகப் பல் துலக்க ஆரம்பித்து விட்டார்.

இதையெல்லாம் வீட்டிலிருந்த குட்டிப் பாப்பா ரித்து கவனித்துக்கொண்டிருந்தது.
பல் துலக்கி முடித்த எரகாம்பட்டியாரிடம் ரித்து கேட்டது: “ என்ன தாத்தா… உங்களுக்கு வாயில சிரங்கா?”

பாய்ந்து வந்து ரித்துவை அப்புறப்படுத்தினாள் லதா.
தங்கள் அன்பான நாய் பூமலின் சிரங்கு குணமாகப் பூசுவதற்கு வைத்திருந்த பேஸ்டைத்தான் எரகாம்பட்டியார் பல் தேய்க்கப் பயன்படுத்தினார் என்ற உண்மையை ரித்து சொல்லிவிடாமல் இருக்க ரொம்பப் பாடு பட வேண்டியிருந்தது.

ரு முறுக்கு டப்பாவை இடைவெளியில்லாமல் படுக்கைக்குப் பக்கத்திலேயே வைத்திருந்தால் சில சபதங்கள் நிறைவேறியிருக்கும். அப்படிச் செய்யாததால், சபதம் முதல் நாளே முடிவுக்கு வந்ததைப் பின் வரும் நிகழ்வு சொல்லும்.
எடையைக் குறைப்பதென்று முடிவு செய்திருந்தார்கள் மாதப்பனும் லதாவும். இரவில் ஆகாரத்துக்குப் பதில் பழங்களைச் சாப்பிடுவதென்று முடிவாயிற்று.

டைனிங் டேபிளில் இரண்டே இரண்டு தட்டுகள். இரண்டுலயும் வெள்ளரிப் பிஞ்சு, அரை ஆப்பிள், உரித்த சாத்துக்குடி ஒன்று, அப்புறம் கொஞ்சம் திராட்சை அவ்வளவுதான்! எல்லாவற்றையும் ஐந்து நிமிடத்தில் தின்று தீர்த்தாகிவிட்டது. மிகவும் திருப்தியாக முகத்தை வைத்துக்கொண்டு, சீரியல் எல்லாம் பாத்து முடித்துவிட்டு லதா வருவதற்கும், கம்ப்யூட்டரில் படமெல்லாம் பார்த்து முடித்துவிட்டு மாதப்பன் வருவதற்கும் சரியாக இருந்தது. மாதப்பனுக்குத் தூக்கமே வர மறுக்கிறது. வயிற்றுக்குள்ளே உறுமல் சத்தம் கேட்கிறது. எப்படியோ ஒரு வழியாகத் தூங்கினார்கள் இருவரும். ராத்திரி இரண்டு மணியிருக்கும். பாத்ரூமுக்குப் போகலாம்னு எழுந்து, டைனிங் ஹாலைத் தாண்டிப் போகும்போதுதான் ஸ்டோர் ரூமில் இருந்த டப்பா ஞாபகம் வந்தது. முதல் நாள்தான் லதா முறுக்குச் சுட்டு டப்பாவில் போட்டு வைத்திருந்தாள்.

அடோ சாமி! முறுக்கு ரொம்ப டேஸ்டுங்கோ! அரிசி, பொட்டுக்கடலை மாவு, ஓமம், மிளகாய்த் தூள் இதெல்லாம் சரியான அளவில் கலந்து, மாவு பிசையும்போதே வெண்ணையும் சேர்த்துப் பிசைந்து, செக்கிலிருந்து சுடச் சுட வந்த, மணமணக்கிற எண்ணையும் புத்துருக்கு நெய்யும் சம அளவுல கலந்த கலவையில் சூப்பராச் சுட்டு, அதைப் பலகார டப்பாவுக்குள் போட்டு வைத்திருந்தாள் லதா.

நைசாக ஸ்டோர் ரூமுக்குள் போய், முறுக்கு டப்பாவை எடுத்துக்கிட்டு வந்து, டைனிங் டேபிள் மேல் வைத்து, மூடியை சத்தம் கேட்காம திறந்தார் மாதப்பன். மொத்தம் இருபது முறுக்கு இருந்தது. ஒவ்வொன்றாகத் தின்ன ஆரம்பித்தார். பத்து முறுக்குத் தின்றதும் வயிறு டிம்மென்று ஆகிவிட்டது. டப்பாவை மூடினார்.

இருந்தாலும், என்னமோ தப்பு செய்துவிட்ட ஃபீலிங்! மன்னிப்பு கேட்கத் தயங்காதவர்தான் மாதப்பன். அதற்கென்று தூங்குகிறவளை எழுப்பியா சொல்ல முடியும்? ஆனால், குற்ற உணர்ச்சி வாட்டுகிறதே?

ஓர் ஐடியா செய்தார். ஒரு சின்னத் துண்டு பேப்பர்ல, “மன்னிக்கவும். டப்பாவில் இருந்ததுல பாதி முறுக்க நடுச் சாமத்துல எந்திரிச்சு தின்னு போட்டன்! அன்புள்ள மாது” என்று எழுதி வைத்துவிட்டுச் சத்தமில்லாமல் வந்து தூங்கிவிட்டார்.
மறுநாள் காலை ஐந்து மணிக்கு எழுந்திரிச்சு பாத்ரூமுக்குப் போகிற வழியில பார்த்தால், முறுக்கு டப்பா திறந்து கிடக்குது. அதுவும் காலியாக் கெடக்குது.

உள்ளே ஒரு துண்டுச்சீட்டு.

“மன்னிச்சுடு மாது. மீதி முறுக்கை நான் தின்னுபோட்டேன். அன்புள்ள லதா.”
இடைவெளி சமாச்சாரத்தால் சபதம் புஸ்ஸானது!

லதானந்த்
இயற் பெயர் டி.ரத்தினசாமி. புனைபெயர் லதானந்த். வனத் துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வனங்களில் வினோதங்கள், மெமரி பூஸ்டர், வாங்க பழகலாம், எனப்படுவது, பிருந்தாவன் முதல் பிரயாகை வரை ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். உடைந்த கண்ணாடிகள், பாம்பின் கண் ஆகியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள். ’நீலப்பசு’ என்னும் இவரது சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கிய மேடை அமைப்பு, 2021ஆம் ஆண்டுக்கான ’பாரதிதாசன் விருது’ வழங்கியுள்ளது. கோகுலம் இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியுள்ள இவருக்கு, ‘சிறந்த சிறார் எழுத்தாளர்’ என்னும் விருதை தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா’ அமைப்பு வழங்கியுள்ளது.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...

வீட்டுப் பணி – அலுவலகப் பணி பேலன்ஸ் செய்வது எப்படி?

Ten Tips For Successful Work-Life Balance -உஷா ராம்கி அந்தரத்தில் நன்கு இழுத்து இறுக்கமாகக் கட்டியிருக்கும் கயிற்றின் மேல் நடக்கும் சர்க்கஸ் கலைஞர் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு கீழே விழாமல் நல்லபடியாக நடந்து...

ஸ்ரீரங்கம் (அரசு) பெண்கள் மேனிலைப் பள்ளி – மல்லுக்கட்டி நிற்கும் மகளிர்!

 -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. முன்பெல்லாம் ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு இரவு முழுவதும் அந்தக் கடை முன் வரிசையாக உட்கார்ந்து காத்திருப்பார்கள். அது ஒரு காலம். இப்போது அங்கு கூட யாரும் காத்திருப்பது இல்லை. ஆனால்...

இனிதே நடந்தேறிய விக்கி- நயன் திருமணம்!

-ஜெனிபர் டேனியல் ***************************************************************** காதலி நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ் சிவன்! சுமார் ஏழு ஆண்டுகாலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா ஜோடிக்கு 09.06.2022 அன்று மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. துள்ளலில் விக்கி! திருமண தினத்தன்று...