0,00 INR

No products in the cart.

இஞ்சி லேகியமும் பிக்பாஸ் பர்பியும்!

ஜோக்ஸ்
ஓவியம்: பிள்ளை

‘‘நீயும், உன் மாமியாரும் கடைகள்ல விலகி நின்று சமூக இடைவெளியை சரியா கடைப்பிடிக்கிறீங்களே!’’
‘‘எப்பவும், எங்கயும் நாங்க அப்படித்தான்!’’

‘‘பெரிய மாப்பிள்ளை ஸ்வீட் கடை வெச்சிருக்கார். சின்ன மாப்பிள்ளைக்கு பட்டாசு, மத்தாப்பு பிசினஸ்னு சொல்றீங்க. உங்களுக்கு பலகார, பட்டாசு செலவு கிடையாது!’’
‘‘அந்தக் கடைகளை வெச்சுக்குடுத்ததே நான்தானே!’’
– எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்.

‘‘தீபாவளிக்கு ஸ்பெஷல் ஸ்வீட் செஞ்சிருக்கியே… என்ன பெயர்?’’
‘‘பிக்பாஸ் பர்பிங்க! முந்திரிய பர்பியில தேடித் தேடி பிடிக்கணுங்க!’’

 

ஹேமலதா சீனிவாசன்

‘‘தீபாவளி வெடி ஏன்டா ஒண்ணுகூட வெடிக்க மாட்டேங்குது?’’
‘‘கொரோனா டச் பண்ணாம இருக்க சோப்பு போட்டு வாஷ் பண்ணிட்டோம் அப்பா!’’

 

‘‘தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல் செஞ்சிருக்கே பானு?’’
‘‘கொரோனா லேகியம்ங்க…’’
‘‘கொரோனா லேகியமா?’’
‘‘ஆமாங்க… இஞ்சி லேகியத்துக்குத்தான் புது பெயர்!’’

 

‘‘என்னங்க, உங்க அம்மா ரொம்பவும்தான் அடம் பண்றாங்க…’’
‘‘என்ன கேட்கறாங்க?’’
‘‘தீபாவளி குளியலுக்கு நிலவேம்பு குடிநீர்லதான் கங்கா ஸ்நானம் செய்வேங்கிறாங்க!’’
– ஆர்.மகாதேவன், திருநெல்வேலி.

 

‘‘அவர் ரொம்ப முன் எச்சரிக்கையானவர்!’’
‘‘அதுக்காக பாம்பு மாத்திரை கொளுத்தும்போது, கையில தடி வெச்சிக்கிட்டு கொளுத்துறதெல்லாம் ரொம்ப ஓவர்!’’
– பி.சி.ரகு, விழுப்புரம்

 

‘‘தீபாவளிக்கு மாப்பிள்ளை சொந்த செலவுல ஸ்கூட்டர் வாங்கிக்கிறதா சொல்லிட்டார்…’’
‘‘இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும்!’’
‘‘பெட்ரோல் செலவை மட்டும் நான் ஏத்துக்கணுமாம்!’’

ஹேமலதா சீனிவாசன்

‘‘என்னது… மாஸ்க் பட்டாசா?’’
‘‘ஆமாம் சார்! பட்டாசு வெடிச்சா, கலர் கலரா எட்டு மாஸ்க் வெளியே வரும்!’’

 

 

‘‘தீபாவளிக்கு மனைவி செஞ்ச அல்வாவை சாப்பிட்டதும் தலைவர் கண் கலங்கிடுச்சா… ஏன்?’’
‘‘ஜெயில்ல சாப்பிட்ட களி ஞாபகத்துக்கு வந்ததாம்…’’

 

‘‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் என்ன தெரிஞ்சுக்க விரும்புறீங்க மேடம்?’’
‘‘பக்கத்து வீட்டுக்காரி தீபாவளிக்கு எத்தனை பட்டுப்புடைவை எடுத்திருக்கான்னுதான்!’’
– ஆர்.கீதா, கேரளா

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

0
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...