spot_img
0,00 INR

No products in the cart.

”பிரதமர் இங்கு வரவேண்டாம்!”

கட்டுரை : ஜி.எஸ்.எஸ்.

ந்திய இதய நல மருத்துவத்தின் தெய்வத்தாய் (Godmother of cardiology) என்று கருதப்பட்ட டாக்டர் பத்மாவதி சமீபத்தில் கோவிட் நோய் காரணமாக காலமானார். நூற்றி மூன்றாவது வயதில் ஒருவர் இறப்பது என்பது அதிர்ச்சிகரமான விஷயம் அல்லதான். ஆனால், அவர் மனித குலத்துக்கு, முக்கியமாக மருத்துவ உலகுக்குப் புரிந்த சாதனைகளை நினைத்துப் பார்ப்பது நம் கடமை அல்லவா? பத்ம விபூஷண் விருது இவருக்கு வழங்கப்பட்டது என்றால், அவரது சாதனைகள் அப்படி!

மருத்துவ நெறிகளைக் கடைபிடிப்பதில் மிகவும் கண்டிப்பு காட்டியவர் இவர். தேசிய இதய கழகத்தின் முக்கிய இதய அறுவை சிகிச்சை மருத்துவராக பத்மாவதி பணியாற்றிக் கொண்டிருந்த காலம் அது. அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் பிராங்க் ஆண்டனி கவலைக்கிடமான நிலையில் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை அங்கு நேரில் வந்து பார்க்க அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் திட்டமிட்டார்.

ஓர் இடத்துக்கு பிரதமர் வருகிறார் என்றால் அங்கு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும். பாதுகாப்புச் சூழலை உறுதி செய்து கொள்வார்கள். அதன்படி மருத்துவமனைக்குள் பாதுகாப்பு அதிகாரிகள் நுழைந்தார்கள். கூடவே சில மோப்ப நாய்களையும் அழைத்து வந்திருந்தார்கள். மருத்துவமனையில் இருந்த பிற நோயாளிகளை (தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் உட்பட) சோதிக்கத் தொடங்கினார்கள்.

டாக்டர் பத்மாவதி இதுபற்றி கேள்விப்பட்டு தனது அறையிலிருந்து வெளியே வந்தார். “மோப்ப நாய்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் வரும் என்றாலோ, அங்குள்ள நோயாளிகள் சோதிக்கப்படப் போகிறார்கள் என்றாலோ பிரதமர் இந்த மருத்துவமனைக்கு வரவே வேண்டாம்” என்றார். நோயாளிகளை எந்த அளவுக்கு அவர் மதித்தார் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

பத்மாவதி பிறந்தது பர்மாவில் (இன்றைய மியான்மர்). ரங்கூனில் உள்ள மருத்துவக் கல்லூரியில் டாக்டர் படிப்பை முடித்தார். அங்கு மருத்துவக் கல்லூரியை முடித்த முதல் பெண் இவர்தான். உலக நிகழ்வுகள் இவரை இந்தியாவிற்கு வரவழைத்தன.

இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் பர்மாவை ஆக்கிரமித்தது. அங்குள்ளவர்கள் உயிருக்காக அஞ்சி அந்த நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள். பல குடும்பங்களில் பெண்களை பாதுகாப்பான நாடுகளுக்கு அனுப்பி விட்டு, ஆண்கள் மட்டும் அங்கேயே தங்கினார்கள். அவர்கள் வாழ்நாள் சேமிப்பு முழுவதும் அங்கே வீடுகளாகவும் நிலங்களாகவும் அசையா சொத்துக்களாக இருந்தன. 1942ல் இப்படி இந்தியாவுக்கு வந்து சேர்ந்தவர்தான் பத்மாவதி. கோயம்புத்தூரில் அம்மாவுடனும் சகோதரியுடனும் தங்கினார். இரண்டாம் உலகப் போர் ஒரு முடிவுக்கு வந்தது. குடும்பம் ஒன்று சேர்ந்தது.

மருத்துவத்தில் முதுநிலைக் கல்வியைப் படிக்க லண்டனுக்குக் கிளம்பினார் பத்மாவதி. அந்தக் கல்வியை வெற்றிகரமாக முடித்த பிறகு அமெரிக்காவில் உள்ள பிரபல ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் இதய மருத்துவம் தொடர்பான பயிற்சி எடுத்துக் கொண்டார். ‘நவீன இதய நலத்துறையின் தந்தை’ என்று கருதப்படுபவர் டாக்டர் பால் ஒயிட். ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்த இவரிடம், நான்கு வருடப் பயிற்சி பெற்றார் பத்மாவதி. அவர்தான் இந்தியாவில், ‘ஆல் இந்தியா ஹார்ட் பவுண்டேஷன்’ என்ற அமைப்பை பத்மாவதி துவக்க வேண்டும் என்று ஊக்குவித்தவர்.

தனது வாழ்நாளின் இறுதிகட்டம் வரை பத்மாவதி தெளிவான முடிவுகளை எடுத்தார். மிகுந்த நினைவாற்றல். தன்னை விட வயதில் குறைந்தவர்கள் எந்த நிகழ்ச்சியையாவது மறந்து விடும்போது உரத்து சிரித்தபடி அவற்றை நினைவுபடுத்துவாராம். 90 வயது வரை நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டவர். இறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னால்தான் டென்னிஸ் விளையாடுவதை நிறுத்திக்கொண்டார்!

லேடி ஹார்டின்ஜ் மருத்துவக்கல்லூரியில் இந்தியாவின் முதல் இதய கத்தீட்டர் செலுத்துமுறை சோதனைச்சாலையை நிறுவியவர். (கத்தீட்டர் என்ற மிக மெல்லிய கம்பியை உடலுக்குள் செலுத்திதான் இதயத்தில் உள்ள அடைப்புகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.)

கணவர், குழந்தைகள் என்று யாருமே இல்லாத நிலையில் பத்மாவதி இறந்துவிட, அவரது தூரத்து உறவினர்களின் சம்மதத்துடன் அவரது இறுதிச் சடங்குகளை தேசிய இதய கழகத்தின் ஊழியர்கள் செய்திருக்கிறார்கள்.

நரம்பியல் நிபுணராக விளங்கிய தனது சகோதரி ஜானகியுடன் இணைந்து, அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, தனது வாழ்நாள் சேமிப்பை அதில் செலுத்தியிருக்கிறார் பத்மாவதி. பொருளாதாரத்தில் நலிந்த நோயாளிகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்ய இதிலிருந்து பணம் வழங்கப்படுகிறது. இந்த அறக்கட்டளை வாயிலாக சிகிச்சை பெறும் நோயாளிகளின் இதயங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் டாக்டர் பத்மாவதி.

3 COMMENTS

  1. பத்ம விபூஷன் டாக்டர் பத்மாவதி மருத்துவ உலகில் செய்த சாதனைகள் பற்றிய செய்திகளைப் படித்து வியந்து போனோம். தன் சகோதரியுடன் சேர்ந்து அறக்கட்டளையை உருவாக்கி பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு உதவும்

  2. டாக்டர் பத்மாவதியின் மருத்துவ சேவை போற்றுதற்குரியது. தனது வாழ்நாள் மற்றும் சேமிப்பு முழுவதையும் மனித குல மேம்பாட்டிற்காக அர்ப்பணித்தது மிகப்பெரிய தியாகம். Hats off to her.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,880FollowersFollow
1,600SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

காணக் கண்கோடி வேண்டும்!

கோடி தீபத் திருவிழா! - ராஜி ரகுநாதன் புனிதமான கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றி வழிபடுவதைப் போன்ற சுப காரியம் வேறொன்று இல்லை. வெளியில் ஏற்றும் தீபம், நம் உள்ளே உள்ள அறியாமை இருளை நீக்கி,...

கொட்டும் மழையில் கொட்டும் தேள்!

0
-ஜி.எஸ்.எஸ். எகிப்தில் உள்ளது அஸ்வான் என்ற நகரம். அதில் சமீபத்தில் கடும் மழை, புயல். இதில் மூன்று பேர் இறந்ததும், 450 பேர் பாதிக்கப்பட்டதும் தனியாகக் குறிப்பிடப்பட்டன. காரணம், அவர்கள் இறந்ததும் பாதிக்கப்பட்டதும் தேள்...

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!

0
உலக மனித உரிமை தினம் - டிசம்பர் 10 - ராஜ்மோகன் இந்த பூமி எல்லா உயிர்களுக்கும் சமமானது. இதனை உணர்ந்து வழிநடத்த வேண்டிய பொறுப்பு மனித குலத்திற்கு இருக்கிறது. இருப்பினும், மனித குலமானது நிறம்,...

வென்னீரும் வாழ்வியலும்!

தொகுப்பு: தனுஜா ஜெயராமன் ஓவியம்: லலிதா இப்போது போல வசதிகள் ஏதுமில்லா காலத்தில் குளிக்க வென்னீர் வைப்பது என்பது சவாலான வேலை. வென்னீர் வைப்பதற்கென்றே புழக்கடையில் (புறக்கடை) பெரிய சைஸ் இரு மண் அடுப்புகள் மண்ணில்...

துனிசியாவில் துணிகரமான திருப்புமுனை!

2
- ஜி.எஸ்.எஸ். ஆப்ரிக்காவின் வடக்கு எல்லைக்குள் இருக்கிறது துனிசியா. அட்லஸ் மலைத்தொடர், சஹாரா பாலைவனம் ஆகியவற்றின் பகுதிகள் இந்த நாட்டிலும் இருக்கின்றன. அறுபத்து மூன்று வயதான நஜிலா பெளடன், துனிசியா நாட்டின் முதல் பெண் பிரதமராக...