0,00 INR

No products in the cart.

சங்கு வளையல்!

வாசகர் ஜமாய்க்கிறாங்க!

தொகுப்பு : எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி

கண்ணாடி, தங்கம், பஞ்சலோகம், பித்தளை என பல வகைகளில் வளையல்கள் இருக்கத்தான் செய்கின்றன. இவையனைத்தையும் தாண்டி இன்று பிளாஸ்டிக், ஃபைபர், மெட்டல் என்று பல ரகங்களில் வளையல்கள் வந்துவிட்டன. இருப்பினும், பெண்களுடைய கைகளுக்கு அழகு சேர்ப்பதோடு, லட்சுமி கடாட்சத்தையும் கொடுக்கக்கூடிய ஒரு வளையலை பற்றித்தான் நாம் தெரிந்துகொள்ளப் போகின்றோம்.

மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது சங்கு. மகாலட்சுமியின் பிறப்பிடம் பாற்கடல் என்பதால், பாற்கடலிலிருந்து எடுக்கக்கூடிய அனைத்துப் பொருட்களிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும்.

கடலிலிருந்து எடுக்கப்பட்ட சங்கிலிருந்து செய்த வளையல்களை, மகாலட்சுமி தனது கையில் அணிந்து கொண்டிருப்பதாக ஐதீகம்.

வட மாநிலத்தவர்கள் இந்த சங்கு வளையல்களை தங்களுடைய பெண்களுக்கு சீதனமாகக் கொடுப்பார்களாம், பெண் புகுந்த வீட்டில் ஐஸ்வர்யத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக!

சங்கு வளையல் அணிந்துகொண்டிருக்கும் பெண்களின் கையில் மகாலட்சுமி குடி கொள்வாள். சங்கு வளையல் அணிந்துகொண்டு நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் அதன் மூலம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். சங்கு வளையல் அணிந்து கொண்டிருக்கும் பெண், ஒருவர் நன்றாக வாழ வேண்டும் என்று அவளுடைய கையால் ஆசீர்வாதம் செய்தால் அது உடனே பலிக்கும்.

சங்கு வளையலை அணிந்து கொண்டு, அந்தக் கையால் ஒரு வியாபாரத்தைத் தொடங்கி வைத்தால் அது ஓஹோவென பெருகும். அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று சங்கு வளையல்களை தானமாக வாங்கிக் கொடுப்பது மிக மிக நல்லது. இதனால் தானம் கொடுத்தவரும் நன்றாக இருப்பார்கள். தானத்தைப் பெற்றவர்களும் நன்றாக இருப்பார்கள்.

வறுமை இருக்கக்கூடிய இடத்தில் இந்த சங்கு வளையல்கள் இருப்பின், அந்த இடம் கூடிய விரைவில் செல்வச்செழிப்பான இடமாக மாறிவிடும். சமையலறை அரிசி பானையில் இந்த சங்கு வளையல்களை வைத்தால் காலத்திற்கும் சாப்பாட்டிற்குப் பஞ்சம் வராது. சங்கு வளையல்களை அணிந்துகொண்டு, பெண்களின் கைகளில் மருதாணி வைத்துக் கொண்டு செய்யும் பூஜை முழு பலனைத் தரும்.

மேலே சொல்லப்பட்டுள்ள அத்தனை நன்மைகளையும் பெற வேண்டும் என்றால், அசல் சங்கு வளையல்களை கொஞ்சம் செலவு செய்து வாங்க வேண்டி இருக்கும். போலியான சங்கு வளையல்கள் நிறைய விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தெரிந்த இடத்தில் சொல்லி வைத்து நல்ல சங்கு வளையல்கள் உங்களுக்குக் கிடைத்தால் வாங்கி அணிந்துகொள்ளலாம். மற்றவருக்கும் பரிசுப் பொருளாகக் கொடுக்கலாம். பெண்கள் தங்களுடைய கைகளில் இந்த வளையலைப் போட்டுக்கொண்டாலே போதும், நிச்சயம் நல்ல பலனைக் கொடுக்கும். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.

2 COMMENTS

  1. திருமணமான பெங்காலி பெண்கள் கையில் எப்போதும் சங்கு வளையல்கள் இருக்கும். பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கும். நாங்கள் கொல்கத்தாவில் இருந்தபோது இதனை கண்கூடாக கண்டிருக்கிறோம்.

  2. சங்கு வளையலின் லட்சுமி கடாட்சத்தன்மையை அறிந்து கொண்டதால் உடனடியாக வளைய ல் வாங்கத் தயாராகிவிடலாம்.
    து. சே ரன்
    ஆலங்குளம்

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

0
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...