0,00 INR

No products in the cart.

மந்திர உச்சாடனமும் முழுமையான பலனும்!

எம்.அசோக்ராஜா

ம்மை மீறிய ஒரு பேராற்றல் இந்தப் பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்துகிறது என்று நாம் உணர்ந்திருக்கிறோம். அந்த சக்தியை ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்த வகையில் பாவித்து இறைவனை வணங்குகின்றனர். அப்படி இறைவனை வணங்கும்போது சில குறிப்பிட்ட சக்தி வாய்ந்த ஒலி அதிர்வுகள் கொண்ட வார்த்தைகளை உச்சாடனம் செய்வதை, ‘மந்திரம்’ என்கிறோம். அந்த மந்திரங்கள் முழுமையான பலனைத் தர, செய்ய வேண்டிய சில விஷயங்களைத் தெரிந்து கொள்வோம்.

குரு உபதேசம் :

குரு முகமாக மந்திரங்களை உபதேசம் பெற்றவர்கள், எக்காரணத்தைக் கொண்டும் அம்மந்திரத்தைப் பிறருக்குச் சொல்லக் கூடாது. மேலும், முதன் முதலில் மந்திர உச்சாடனம் செய்யத்தொடங்கும்போது தங்களின் குல தெய்வம், உங்களின் இஷ்ட தெய்வம் மற்றும் உங்களின் குருவை மனதில் வணங்கிய பின்பு மந்திர உச்சாடனங்களைத் தொடங்கலாம்.

மந்திர உச்சாடனம் செய்பவர்கள் அதைச் செய்யும் நேரத்தில் உடல், மனம், ஆன்ம சுத்தியுடன் செய்ய வேண்டும். புலால் உணவை அறவே நீக்கியவர்களுக்கு, குருவின் மூலமாக உபதேசம் பெற்ற மந்திரங்களின் மந்திர சித்தி எளிதில் கிட்டும். ஏனெனில், புலால் உணவை உண்பவர்களின் உடலில், இறந்த விலங்குகளின் மாமிசத்தை உண்ட தோஷம் ஏற்பட்டிருப்பதால், அது அந்த நபருக்கு மந்திர சித்தி கிடைப்பதைத் தடுக்கிறது.

மாமிசம் உண்பவர்கள் மந்திர சித்தி ஏற்பட குறைந்தது ஆறு மாத காலம் ஊண் உணவை நீக்கினால் மந்திர சித்தி உண்டாகும். அறவே புலால் உணவை நீக்கி விடுவது மிகவும் சிறப்பானதாகும்.

பொதுவாக, கடவுளை எந்த ஒரு நேரத்திலும் வணங்கலாம் என்றாலும் கூட, அதிகாலை 4 மணியிலிருந்து 5 மணிக்குள்ளாக தினசரி நியமங்களை முடித்து விட்டு மந்திர ஜபத்தை மேற்கொள்வது சிறந்த பலன்களை அளிக்கும்.

எந்த திசையில் மந்திரம் ஜபிக்கலாம்?

வீட்டில் மந்திரங்களைக் கொண்டு இறைவனை வணங்கும்போது, காலை நேரத்தில் கிழக்கு திசையைப் பார்த்தபடி இறைவனை மனதிற்குள் தியானித்து மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.

மாலை அல்லது முன்னிரவு நேரத்தில் வழிபடுவதாக இருந்தால், மேற்கு திசையை நோக்கி நின்றவாறு மந்திரங்களை ஜபித்து வணங்க வேண்டும்.

மந்திரங்களை நின்றுகொண்டு ஜபிப்பதை விட, ஒரு ஜமுக்காளம் அல்லது பாயில் அமர்ந்து மந்திர உச்சாடனம் செய்வது சிறப்பானது.

தர்பைப் புல் ஆசனத்தில் அமர்ந்து மந்திர ஜபம் செய்வது, நீங்கள் விரும்பும் அனைத்தையும் விரைவில் சித்திக்கச் செய்யும்.

மந்திரம் ஜபிக்கும் இடம் :

தினமும் மந்திரங்களை ஜபிப்பவர்கள் வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து மந்திரம் ஜபித்தலை வாடிக்கையாகக் கொள்ள வேண்டும். அடிக்கடி மந்திரம் ஜபம் செய்யும் இடத்தை மாற்றக்கூடாது. மேலும், மந்திர ஜபங்களை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். காலை, மாலை, இரவு என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் மந்திர உச்சாடனம் செய்வது கூடாது.

மந்திர உச்சாடனம் செய்யும்போது துளசி, ருத்திராட்சம் மற்றும் சந்தன மணி மாலைகளில் ஏதேனும் ஒன்றை விரல்களில் உருட்டி 108 அல்லது 1008 எண்ணிக்கையை எண்ணியவாறே உச்சாடனம் செய்வது மந்திர சித்தியை விரைவில் ஏற்படுத்தும்.

நீங்கள் மந்திர ஜபம் செய்யும்போது உங்களுக்கு நெருக்கமான உறவுகளாக இருந்தாலும் கூட, அவர்கள் பார்க்கும் வகையில் மந்திர உச்சாடனங்களை செய்வது கூடாது. முடிந்தால் நீங்கள் தியானம் செய்யும் அறையின் கதவை தாளிட்டு, உங்களை அந்த நேரத்தில் யாரும் தொந்தரவு செய்யாதவாறு மந்திர உச்சாடனங்கள் செய்து வருவது விரைவில் நல்ல பலன்களை அளிக்கும்!

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாழ்வைக் கடைத்தேற்றும் பஞ்ச நாமங்கள்!

- எ.எஸ்.கோவிந்தராஜன் ‘மனிதன் தம்மை நோக்கி ஓர் அடியாவது எடுத்து வைக்க மாட்டானா?’ என கடவுள் ஆவலோடு நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாராம். அப்படி நாம் கடவுளை நோக்கிச் செல்வதற்கான முதல் படி அவனது திருநாமங்களை உச்சரிப்பதுதான்....

அக்னி தேவனுக்கு உதவிய அர்ச்சுனன்!

- ரேவதி பாலு நமது நான்கு வேதங்களான ரிக், சாம, யஜுர், அதர்வண வேதங்களுள் ரிக் வேதமே மிகத் தொன்மையானது. இந்த வேதத்தில் இருநூறு ஸ்லோகங்கள் அக்னி பகவான் குறித்தே சொல்லப்பட்டிருக்கின்றன. அக்னி என்றால் நெருப்பு....

பலன் தரும் ஸ்லோகம்

0
எதிர்மறை சக்திகள் அகல... ‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின் விளக்கினின் முன்னை வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள் விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே.’ - திருமுறை எனும் ஸ்லோகத்தை காலை, மாலை தீபம் ஏற்றும்போது மூன்று அல்லது ஒன்பது...

பள்ளியறை பூஜை பலன்கள்!

0
- எம்.ஏ.நிவேதா சிவாலயங்களில் இரவு நேரத்தில் கோயில் நடை சாற்றப்படுவதற்கு முன் நடைபெறுகின்ற பூஜை, பள்ளியறை பூஜை ஆகும். அதாவது, சுவாமியையும் அம்பாளையும் பள்ளியறை ஊஞ்சலில் ஒருசேர அமர வைத்து ஆராதனை செய்து தாலாட்டுப்...

பௌர்ணமியில் அம்பிகை பூஜை!

2
- பொ.பாலாஜிகணேஷ் முழு நிலவு காணும் பௌர்ணமி தினங்களில் அம்பிகையை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது என்று சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீ சக்ர நாயகியான ஆதிபராசக்தி பதினாறு நித்யைகளாக மகா...