மறைந்த பாடகர் எஸ்பிபி-க்கு பத்மவிபூஷன், சின்னக் குயில் சித்ராவிற்கு பத்மபூஷன்!

மறைந்த பாடகர் எஸ்பிபி-க்கு பத்மவிபூஷன், சின்னக் குயில் சித்ராவிற்கு பத்மபூஷன்!
Published on

நாட்டின் ஒவ்வொரு துறையிலும் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு பத்ம விருதுகள் அளித்து கவுரவிக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பத்ம விருதுகள் வழங்கப் படவில்லை.

இந்நிலையில் 2020- ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இதில் 29 பெண்கள், திருநங்கை உள்ளிட்ட மொத்தம் 119 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. 7 பேருக்கு பத்ம விபூஷன், 10 பேருக்கு பத்ம பூஷன், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது. 2020- ம் ஆண்டு தனது, 74 வது வயதில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிறகு இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 2011- ல் பத்ம விபூஷன் மற்றும் 2001- ல் பத்மஸ்ரீ விருதுகள் எஸ்பிபி.,க்கு வழங்கப்பட்டன

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கிட்டதட்ட 50 ஆண்டுகளாக 16 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி உள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட பத்மவிபூஷன் விருதை அவரது மகன் எஸ்பிபி சரண், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடமிருந்து பெற்றுக் கொண்டார்.

தமிழ்த் திரையுலகில் பின்னணி பாடகிகள் கே.எஸ்.சித்ரா, பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத், சாலமன் பாப்பையா ஆகியோருக்கும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. சித்ராவிற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. சித்ரா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, உருது, மலாய், லத்தின், அரபிக் உள்ளிட்ட மொழிகளில் 25,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com