மாயவரம் ஸ்பெஷல் அரிசி உப்புமா

மாயவரம் ஸ்பெஷல் அரிசி உப்புமா
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

சௌமியா சுப்ரமணியன், பல்லாவரம்.

தேவை:
பச்சரிசி – 2 கப்
துவரம் பருப்பு – 1 கப்
எண்ணெய் – 3 கரண்டி
கடுகு -1 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 8
மிளகு சீரகம் சிறிதளவு
பெருங்காயம் ஒரு சிட்டிகை
தண்ணீர் – 6 டம்ளர்
துருவிய தேங்காய் – 1/2 மூடி
உப்பு தேவையான அளவு
நெய் – 2 ஸ்பூன்
கருவேப்பிலை சிறிதளவு

செய்முறை :
பச்ரிசி, துவரம் பருப்பு , சிவப்பு மிளகாய், மிளகு, சீரகம், பெருங்காயம் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு பெரிய அளவு ரவையாக உடைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு ,பெருங்காயம் தாளித்து , கருவேப்பிலை போட்டு , தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும், அதில் தேங்காயை போட்டு , அரைத்து வைத்திருக்கும் ரவையை சேர்க்கவும். அத்துடன் நெய்யை விட்டு நன்றாக கட்டி தட்டாமல் கிளறி குக்கரை மூடி 3 விசில் வந்ததும் இறக்கவும்.

logo
Kalki Online
kalkionline.com