மேற்கு வங்கத்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் மூடல்! மாநில அரசு அறிவிப்பு!

மேற்கு வங்கத்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் மூடல்! மாநில அரசு அறிவிப்பு!

இந்தியாவில் தற்போது ஒமிக்ரான் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், பல மாநிலங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மேற்கு வங்காளத்தில்

அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், ஸ்பாக்கள், சலூன்கள், அழகு நிலையங்கள், உயிரியல் பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்தும் இன்றுமுதல் மூடப்படுவதாகவும், மாற்றுத் தேதி அறிவிக்கும் வரை திறக்க வேண்டாம் எனவும் மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ல அறிக்கையில் தெரிவித்ததாவது:

மேற்கு வங்கத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும். புறநகர் ரெயில்கள் நாளை முதல் 50% பயணிகளுடன் இரவு 7 மணி வரை மட்டுமே இயக்கப்படும். மாநிலத்தில் ஜனவரி 1-ம் தேதி ஒரே நாளில் மட்டும் 4,512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலைத்திலுள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், ஸ்பாக்கள், சலூன்கள், அழகு நிலையங்கள், உயிரியல் பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்தும் இன்றுமுதல் மூடப்பட வேண்டும். மாற்றுத் தேதி அறிவிக்கும் வரை திறக்க வேண்டாம்

இவ்வாறு மேற்கு வங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதிலும் அதிகமாக கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மேற்கு வங்கம் 3-வது இடம் வகிப்பதால் இந்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com