மெட்ரோ ரயில் நிலையங்களில் மினி பஸ் சேவை: தமிழக முதல்வர் இன்று தொடக்கம்!

மெட்ரோ ரயில் நிலையங்களில் மினி பஸ் சேவை: தமிழக முதல்வர் இன்று தொடக்கம்!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் மினி பஸ் சேவையை முதல்வர் மு..ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

அந்த வகையில் முதற்கட்டமாக 12 மினி பஸ்கள் இயக்கபடவுள்ளன.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் மினி பஸ் சேவை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் மொத்தம் 210 மினி பஸ்கள் உள்ளன. னால் அவற்றில் 66 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 144 மினி பஸ்கள் நிதி இழப்பு காரணமாக இயக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் அந்த 144 மினி பஸ்களை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பயணிகளுக்கு பயன்படும் வகையில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்லது.

இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில் இந்த மினி பஸ்கள் சேவையை முதல்வர் மு.. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அந்த வகையில் சென்னை விமான நிலையம், ஆலந்தூர், கோயம்பேடு, திருவொற்றியூர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து முதற்கட்டமாக 12 மினி பஸ்கள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com