53 வது சர்வதேச திரைப்பட விழா -2022 @ GOA !

- கோவாவிலிருந்து நேரடி ரிப்போர்ட் !
GOA FESTIVAL
GOA FESTIVAL

கண்கவர் கலை நிகழ்ச்சிகள், திரைப்பட நட்சத்திரங்களின் பங்கேற்புடன், கோவாவில் தொடங்கியது 53வது சர்வதேச திரைப்பட விழா. மத்திய ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் இணையமைச்சர்  எல்.முருகன் ஆகியோர் பங்கேற்பு.

அனுராக் தாக்கூர்
அனுராக் தாக்கூர்

 இந்தியாவின் உயர்ந்த திரைப்பட விழாவாக கருதப்படும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கடந்த ஞாயிறன்று கோவா தலைநகர் பனாஜியில் தொடங்கியது. 1952 ஆம் ஆண்டு பண்டித ஜவர்கலால் நேரு அவர்கள் பிரதமராக இருந்த போது  தொடங்கப்பட்டு இந்தியாவின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட இவ்விழா  2004 அம் ஆண்டு முதல் நிரந்தரமாக கோவாவில் நடைபெற்று வருகிறது. 

GOA festival
GOA festival

இதற்காக 2004 ஆம் ஆண்டு ஒரு சவாலாக ஐநான்ஸ் நிறுவனம் ஒரே ஆண்டில் நான்கு அரங்குகளை நிர்மாணித்தது.  முதல்  இந்திய திரைப்பட விழாவில் 23 நாடுகளில் இருந்து மொத்தம் 40  முழு நீளப்படங்கள் இடம்பெற்றன. ஆனால் இன்று  53வது திரைப்பட விழாவில் ஒரே நாளில் 40 க்கும் அதிகமான திரைப்படங்களை திரையிடும் வகையில் 79 நாடுகளில் இருந்து 280 அதிகமான திரைப்படங்கள் திரையிடப்பட்டு பிரமாண்டமாக உருவெடுத்திருக்கிறது இந்திய சர்வதேச திரைப்பட விழா.

Goa Festival
Goa Festival

போட்டி பிரிவு, சர்வதேச போட்டி பிரிவு,  புகழாஞ்சலி போற்றும் வகையில் புகழ்பெற்ற பழைய படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. பொன்விழா கண்ட இந்திய திரைப்பட விழாக்களின் விருதுகள் உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.  இந்திய திரைப்பட விழாவில் தங்கமயில், வெள்ளிமயில், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் ,சிறந்த நடிகை, சிறப்பு ஜூரி பரிசு , வாழ்நாள் சாதனை விருது இத்துடன் யுனெஸ்கோ மனித உரிமை மற்றும் வாழ்வியலை வெளிப்படுத்தும் படங்களுக்கு வழங்கும் யுனெஸ்கோ - காந்தி மெடல்,  இந்தியாவின் ஆகச்சிறந்த திரை ஆளுமை விருது என பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன. 

GOA Festival
GOA Festival

இதில் மிக முக்கியத்துவம் வாய்ந்த விருதாக தங்கமயில் விருது போற்றப்படுகிறது. இதற்கான போட்டி பிரிவுகளில் பங்கேற்கும் திரைப்படங்களில் சிறந்த ஒன்றை தேர்ந்தெடுத்து அதற்கு தங்கமயில் விருது வழங்கப்படுகிறது. இவ்வாண்டு தங்கமயில் விருதுக்கான போட்டி பிரிவில் 15 படங்கள் போட்டி போடுகின்றன.. A Minor, Cold as Marble, I have Electric Dreams,Mediterranean Fever,Neouzh,No End,Perfect Number, Red Shoes, Seven Dogs,The Kashmir Files, The Line, The Ocean Angel,The Story Teller,When the waves are gone ஆகிய படங்களோடு  தமிழ் படமான குரங்கு பெடல் படமும் போட்டியில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com