சீரகம்
சீரகம்

சீரகத்தின் பயன்கள்!

 சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.

சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் குணமாகும்.

சீரகத்தை வறுத்து மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் நீங்கும்.

சீரகத்தை லேசாக வறுத்து கருப்பட்டி சேர்த்தச் சாப்பிட்ட வர நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

மஞ்சள் வாழைப்பழத்துடன் சிறிது சீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

சீரகத்தைத் தேங்காய்ப்பால் விட்டு அரைத்து உடல் முழுவதும் பூசினால் வேனல் காலத்தில் வரும் கட்டிகள் வேர்க்குருக்கள், சரும அரிப்புகள் குணமாகிறது.

மூளைக்குக் குளிர்ச்சி தருகிறது. இருதயத்திற்கு வலிமை தருகிறது. குடல் அழற்சியைப் போக்குகிறது.

ஜீரணப் பையைச் சீராக்குகிறது. கல்லீரல், மண்ணீரல் இவற்றை வலுப்படுத்துகிறது.

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரோடு குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கிவிடும்.

சுக்கு, மிளகு,சீரகம், திப்பிலி ஆகியவற்றைப் பொடித்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உறுப்புகளும் சீராக இயங்கச் செய்கிறது.

சீரகம் நம் உடலை சீர்செய்து பலத்தையும் நன்மையையும் தருகிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com