கேஸ் சிலிண்டர் காலாவதியாகும் தேதி தெரிந்து கொள்ள வேண்டுமா?

கேஸ் சிலிண்டர்
கேஸ் சிலிண்டர்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

-எம் ஏ நிவேதா, திருச்சி.

உங்கள் வீட்டில் காலாவதியான கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்துவதால் பயங்கரமான ஆபத்துகள் வர வாய்ப்புகள் உள்ளன. அதனால் இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ, அல்லது வாங்கும் போதோ, முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள். பிறகு வாங்குங்கள்.

 ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை திருப்பி தந்து விடுங்கள். ஆபத்தை தவிருங்கள்.

 - அந்த காலாவதி தேதியை (Expiry date) எப்படி கண்டுபிடிப்பது என்பதை பார்க்கலாம்.

 சிலிண்டர்
சிலிண்டர்

படத்தில் இருப்பது போலத் தான் ஒவ்வொரு கேஸ் சிலிண்டரின் உட்புறத்திலும் (inside)எழுதியிருக்கும்.

 முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர் (alphabets letter) மாதத்தின் பெயரைக் குறிக்கிறது.

 இரண்டாவதாக வரும் டூ டிஜிட்ஸ் நம்பர் (two digits number) வருடத்தின் (Year) பெயரைக் குறிக்கிறது.

 A, B, C & D இந்த நான்கில் ஒரு லெட்டர்தான் ஒவ்வொரு சிலிண்டரிலும் எழுதப்பட்டிருக்கும். அதன் முழு அர்த்தம் இது தான்.

 A - மார்ச் -முதல் காலாண்டு(1st quarter)

B - ஜூன் - இரண்டாம் காலாண்டு (2nd quarter)

 C - செப்டம்பர் - மூன்றாம் காலாண்டு (3quarter)

 D - டிசம்பர் - நான்காம் காலாண்டு (4th quarter)

 உதாரணத்திற்கு, மேலே உள்ள படத்தில் B-13 என்று எழுதப்பட்டிருக்கிறது.

 அதன் அர்த்தம் ஜூன் மாதம் 2013-ம் (ஜூன், ஜூலை, ஆகஸ்ட் வரை அந்த சிலிண்டரைப் பயன்படுத்தலாம்..!"

 அறியாமை தவறல்லா..!! அறியாமல் இருப்பது தான் தவறு. உங்களுக்கு தெரிந்த இந்த தகவலை அனைவருடனும் பகிர்ந்து விழிப்புணர்வடைய செய்யுங்கள்...

logo
Kalki Online
kalkionline.com