ஏழு மலையில் ஐந்து தரிசனம்!

ஆன்மீக செய்தி
ஏழு மலை
ஏழு மலை
  • திருப்பதியில் பெருமாள் ஐந்து நிலைகளில் காட்சியளிக்கிறார். மூலவர்,  மலையப்பர், உக்ரசீனிவாசர், போக சீனிவாசர், கொலுவு சீனிவாசர்  என்னும் இவர்களை ‘பஞ்ச பேரர்கள் என்பர்.

  • மூலவர் கருவறையில் நின்ற கோலத்தில் சங்கு சக்கரம் ஏந்திய நிலையில் இருக்கிறார். இவரே கோயிலின் பிரதான மூர்த்தி.

  • ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருள்பவர் உற்சவர் மலையப்பர். தினமும் இவர் கல்யாண கோலத்தில் காட்சியளிப்பார். ‘மலைக்கினிய பெருமாள்’ என்றும் இவருக்குப் பெயருண்டு.

 பெருமான்
பெருமான்
  • உக்ர சீனிவாசர் ஆண்டுக்கொருமுறை கார்த்திகை துவாதசியன்று அதிகாலையில் பவனி வருவார். இவரை மற்ற நாட்களில் பக்தர்கள் தரிசிக்க முடியாது.

  • போக சீனிவாசர் வெள்ளியால் செய்யப்பட்டவர். இவர் அன்றாட அபிஷேகத்திற்காக எழுந்தருள்வார்.

திருப்பதி பெருமாள்
திருப்பதி பெருமாள்
  • கோயிலில் நடக்கும் அன்றாட வரவு, செலவு கணக்கை அதிகாரிகள் சமர்ப்பிக்கும்போது அதை ஏற்பவர் கொலுவு சீனிவாசர்.

  • திருப்பதி ஏழுமலையில் மீனாக பிறக்க ஆசைப்பட்டவர் குலசேகராழ்வார்.

  • திருப்பதி வெங்கடாஜலபதி பூலோகத்தில் அவதரித்த நாள் புரட்டாசி திருவோணம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com