தீரன் சின்னமலை வீர வரலாறு:218 ஆம் ஆண்டு நினைவு தினம்!

தீரன் சின்னமலை சிலை
தீரன் சின்னமலை சிலை

ந்தியாவினுடைய சுதந்திரப் போரை எளிதில் கடந்து விட முடியாது. எத்தனையோ தியாகங்களையும் வீரங்களையும் கண்ட வீர வரலாற்றில் தீரன் சின்னமலையின் பங்குகள் ஏராளம்.

தற்போதைய திருப்பூர் மாவட்டம் காங்கேயம், மேலப்பாளையம் பகுதியில் ரத்தினசாமி மற்றும் பெரியாத்தாள் தம்பதிகளுக்கு 1756 ஆம் ஆண்டு பிறந்தவர் தீர்த்தகிரி கவுண்டர் எனும் தீரன் சின்னமலை.

சிறு வயது முதலே சிலம்பம், போர் பயிற்சி, கம்பு சண்டை என்று வீர விளையாட்டுகளை கற்பதில் ஆறும் காட்டி வந்தார். அதே நேரத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் மக்கள் சர்வாதிகாரப் முறையில் நடத்தப்பட்டு, அடிமைப்பட்டு கடந்ததை பார்த்து வெகுண்டு எழுந்தார் தீரன் சின்னமலை. அதே நேரத்தில் மைசூர் பகுதியில் மாவீரன் திப்பு சுல்தான் தலைமைலான படைகள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தீவிரமாக போர் புரிந்து கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் மைசூரைச் சேர்ந்த ஆங்கிலேயப் படையை சங்ககிரி பகுதிகளில் வரி வசூலில் ஈடுபட்டதை பார்த்தார். இதைத் தொடர்ந்து தீரன் சின்னமலை சென்னிமலை மற்றும் சிவன் மலைக்கு இடையே ஆங்கிலேய படைகளை வழிமறித்து வரிப்பணத்தை எடுத்துச் சென்றார். மேலும் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்ன மலை பணத்தை எடுத்துச் சென்றதாக உங்கள் தலைமையிடம் கூறுங்கள் என்று கூறினார் தீரன் சின்னமலை. இதன் காரணமாகவே நாளடைவில் தீர்த்தகிரியின் பெயர் தீரன் சின்னமலையாக மாறியது என்று சான்றுகள் உண்டு.

அதன் பிறகு திப்பு சுல்தானுடன் சேர்ந்த தீரன் சின்னமலை ஆங்கிலேய படைகளுக்கு எதிரான தீவிரமாக சண்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 1799 ஆம் ஆண்டு 4ம் மைசூர் போரில் திப்பு சுல்தான் கொலை செய்யப்பட்டார். அப்பொழுதும் அஞ்சாத திப்புவின் படைகளோடு கைகோர்த்து தீரன் சின்னமலை கோவை கோட்டையை முற்றுகையிட்டார். அந்த சண்டையில் தோல்வியில் முடிவடைய திட்டங்களை தீவிரமாக தீட்ட தொடங்கினர்.

இதை அடுத்து 1801 ஆம் ஆண்டு பவானி ஆற்றங்கரையில் நடைபெற்ற போரில் ஆங்கிலேய படைகளை வெற்றி கொண்டது தீரன் சின்னமலையின் கொங்கு படைகள். 1802 ஆம் ஆண்டு சென்னிமலை, சிவன்மலை போரிலும், 1804 அரச்சலூரில் உள்ள ஆங்கிலேய படையையும் வென்று வெற்றி வாகை சூடினார் தீரன் சின்னமலை.

திப்பு சுல்தானின் பீரங்கி படைகளோடு இணைந்து ஆங்கிலேய படைகளை கலங்கடித்த தீரன் சின்னமலையை பார்த்து பயந்த ஆங்கிலேய படைகள் சூழ்ச்சி செய்து தீரன் சின்னமலையும் அவரது சகோதரரையும் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து சங்ககிரியில் வைத்து ஆங்கிலேய படைகளால் ஆகஸ்ட் 3ஆம் தேதி தூக்கில் ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

தீரன் சின்னமலையின் வீரமும் தியாகமும் அவர் பெயரை வரலாறாக மாற்றி உள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இன்று தீரன் சின்னமலையினுடைய 218 வது ஆண்டு நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் அரசு நிகழ்வாக அனுசரிக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com