விராட் கோலி
விராட் கோலி

விளாசித் தள்ளிய விராட் கோலி; ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்! 

-Sanky

ர்வதேச  கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் என்றாலே ரசிகர்களிடையே அனல் பறக்கும். அந்தளவுக்கு இந்த இரு நாடுகளுக்கிடையே ஆன போட்டி வெறித்தனமான ஆர்வத்தையும், சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் இதுவரை நடந்த போட்டிகளுக்கெல்லாம் உச்சகட்ட போட்டியாக விறுவிறுப்புடனும் மிகக் கடுமையானதுமாக அமைந்தது - சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி.  

ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரில் கடந்த 23-ம் தேதி நடந்த இந்த போட்டி, சரித்திரத்தில் மறக்க முடியாத நாளாக அமைந்தது. சுமார் 90,000 க்கும் மேற்பட்ட ஆவேசமிகு பார்வையாளர்களுக்கு அன்று ஒரு திரில்லிங் கிரிக்கெட் விருந்து கிடைத்தது.   

போட்டியின் துவக்கத்தில், நம் நாட்டு தேசிய கீதம் இசைக்கையில்  ரோகித் சர்மாவின் கண்கள் பனித்தன. நமது அணி அன்றைய போட்டியில் வெற்றி பெற தம்மை தயார்படுத்திக் கொண்டு உறுதிபூண்டமைக்கு அவரது நாட்டுப்பற்றே ஆரம்ப அறிகுறியானது.  

சர்வதேச T-20 போட்டியில் பாகிஸ்தான் போன்றதொரு சீற்றமிகு அணியை வெல்வது அத்தனை எளிதான விஷயம் அல்ல. முதலில் பேட் செய்யத் துவங்கிய பாகிஸ்தான் அணி, கேப்டன் பாபர் அசாம் தலைமையில் எதற்கும் துணிந்து நின்றது!

அந்த அணியின் தொடக்க பேட்ஸ்மென்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவரை வீழ்த்துவதுதான் இந்திய அணிக்கு இருந்த  முதல் சவால்!

அதை கச்சிதமாக நமது அஷ்தீப் சிங் நிறைவேற்றினார். பாபர் அசாம் ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். பாகிஸ்தான் அணியின் முதல் சில பேட்ஸ்மென்கள் விரைவில் வீழ்த்தப்பட, பாகிஸ்தான் இறுதி ஸ்கோர் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. 

டுத்துக் களமிறங்கியது இந்திய அணி.. 

மெல்பர்ன் கிரிக்கெட் பிட்ச், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்த நிலையில் 160 ரன்கள் எடுப்பது இந்திய அணிக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், இந்திய அணி வெறும் 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை மள மள வென்று இழந்தது. இருப்பினும், விராட் கோலியும் ஹர்தீர்க் பாண்டியாவும் இணைந்து ஒருவருக்கொருவர் மிக நேர்த்தியான புரிதலுடன் 113 ரன்களைக் குவித்தனர்.  

அதிலும் கோலியின் ஆட்டம் அன்று வேறு லெவல்.. வெகு அபாரம்!  வேகப்பந்து வீச்சாளர்களை சாமர்த்தியமாக கையாண்டு, மிகுந்த பொறுப்புடன் சர்வசாதாரணமாக விளையாடினார், விளாசினார். எதிரணியினரை கதிகலங்கச் செய்தார். 

இந்திய அணியை வெற்றியின் பாதையில் அழைத்துச் சென்றார்.  ‘என் அனைத்து ஆட்டங்களிலும் இதையே மிகச் சிறந்ததாக நான் கருதுகிறேன்’ என்று விராட் கோலியே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 53 பந்துகளில் 82 ரன்களைக் குவித்து விராட் கோலி அன்று  கிரிகெட் ரசிகர்களை குதூகலப்படுத்தினார்.  

 கிரிக்கெட் போட்டி
கிரிக்கெட் போட்டி

இந்த தலைமுறையின் மிகச் சிறந்த ஆட்டக்காரரான விராட் கோலி, கோடான கோடி கிரிக்கெட் ரசிகர்களின் வாழ்த்துகளைப் பெற்று, இந்திய கிரிக்கெட் அணியின் பெருமையை மேலும் உயர்த்தியுள்ளார்… அதுவும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தன் அபார ஆட்டத்தின் வாயிலாக…! 

அதேபோல, எவ்வித பதற்றமும் இன்றி அமைதியாக விளையாடி, போட்டியின் கடைசி பந்தை லாவகமாக கையாண்டு வெற்றியை நமதாக்கித் தந்த  ரவிசந்திரன் அஸ்வினையும் ரசிகர்கள்  கொண்டாடாமல் இருக்க முடியாது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com