"துணிவு" திரைப்படத்தில் மியூச்சுவல் ஃபண்டை பற்றி தவறான தகவல்களா? ஆராய்கிறது இந்த கட்டுரை!

"துணிவு" திரைப்படத்தில் மியூச்சுவல் ஃபண்டை பற்றி தவறான தகவல்களா? ஆராய்கிறது இந்த கட்டுரை!

சில நேரங்களில் திரைப்படங்கள், பரபரப்பை ஏற்படுத்தி விடும். இயக்குநர்  மணிரத்னத்தின், 'பம்பாய்' திரைப்படம் வந்தபோது, பல பேரின் கோபத்தைக் கிளறிவிட்டது. மணிரத்னம் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசுகின்ற அளவிற்கு நிலைமை மோசமானது. இது ஒரு உதாரணம்தான். இதுபோன்று பல படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

சமீபத்தில் பொங்கல் வெளியீடான, அஜித் நடிப்பில் வெளிவந்த,  'துணிவு' திரைப்படத்தில், மியூச்சுவல் ஃபண்ட்(mutual fund) குறித்த விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

ஒரு வங்கியும், வேறொரு நிறுவனமும் கூட்டாக சேர்ந்து,  'மியூச்சுவல் ஃபண்டை' தொடங்குகின்றன. பின்னர் அந்தப் பணத்தைப் பல போலி நிறுவனங்களில்  (shell companies)முதலீடு செய்கின்றனர். இங்கு தான் ஒரு திருப்பம். முதலீடு செய்யப்பட்ட நிறுவனங்கள் திவாலானதாக அறிவிக்கப்பட்டு, வங்கியும், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும், கூட்டாக, கபளீகரம் செய்து விடுகின்றன. இந்தப் பணத்தை திரும்ப பெறுவது என்பதுதான், துணிவுப் படத்தில் சொல்லப்பட்டிருக்கும், மையக் கருத்தாகும்

துணிவு படத்தில் சீட்டுக் கம்பெனி போல் மியூச்சுவல் ஃபண்ட் நடத்தி பணத்தை திருடுகிறார்கள், என ஒரு தவறானக் கருத்தை கூறியிருக்கினர். இது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும், முதலீட்டார்களிடையே சுணக்கத்தை ஏற்படுத்தும். தற்போதைய சந்தை நிலவரப்படி, இந்தியாவில் 47 மியூச்சுவல ஃபண்ட் நிறுவனங்கள் இருக்கின்றன. இன்னும் சில நிறுவனங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இனி துணிவு படத்தில் கூறப்பட்டத் தகவல்களைக் கவனிப்போம். ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், இஷ்டப்படி முதலீடு செய்ய முடியாது. இதற்கான விதி முறைகளை 'செபி' உருவாக்கியிருக்கிறது.  ஒரு நிறுவனத்தின் மூலதனத்தில், சுமார் 10 சதவீதம் மட்டுமே பிற நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியும். 25 பங்காக பிரித்து, 25 போலி  நிறுவனங்களில்  முதலீடு செய்ய வாய்ப்பில்லை.

மியூச்சுவல் ஃபண்ட், 'அப்பர் மிடில் கிளாஸ்' மக்களுக்கானது, என்று துணிவு படத்தில், ஒரு பணியாளர் கூறுவார்.  இது தவறான சித்தரிப்பு.அடுத்து வரும் காட்சிகளில் சாதாரண மக்களும் முதலீட்டாளர்களாக காட்டப்படுகின்றனர்.  மியூச்சுவல் ஃபண்ட் என்பது அனைவருக்குமானது. ரூ.500 கூட முதலீடு செய்யலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மியூச்சுவல் ஃபண்ட் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்பதால், எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்யக்கூடாது. ஆனால் இந்தப் படத்தில் வரும் வில்லன், ' மக்கள் பொய்களை நம்ப ஆரம்பித்தால், வியாபாரிகள் அதனை விற்கிறார்கள்' என்று வசனம் பேசியிருப்பார். எது பொய்? மியூச்சுவல் ஃபண்டில் வருமானம் பொய்யா? இல்லையானால் மியூச்சுவல் ஃபண்டே பொய்யா?.

டிஸ்டிரிபியூட்டர்கள், மற்றும் அவர்களின் வருமானம் குறித்த தகவல்கள்  முதலீட்டாளர்களுக்கு தரப்படுகின்றன. டிஸ்டிரிபியூட்டர்கள் இல்லாமல் நேரடி முதலீடுகளும் உண்டு. 20 ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்ட் நடந்து வருகிறது.  மக்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் இந்த நேர்த்தில், தவறானத் தகவல்களை தந்திருக்கிறது, துணிவு திரைப்படம்.

மியூச்சுவல் ஃபண்டில் அபாயங்களும் உண்டு. சில நிறுவனங்களில், பிரச்னைகள் தலை தூக்கியது. ஆனாலும் முதலீட்டார்களுக்கு முதலீட்டுப் பணம் திரும்பக் கிடைத்தது.

முதலீடு செய்யும்முன், தகுந்த ஆலோசகர்களை நாட வேண்டும். முதலீட்டார்கள், தங்களால் எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியுமோ, அந்த அளவிற்குத் தகுந்தபடி முதலீடு செய்யவும். நேரடி ரொக்க முதலீடு கிடையாது. வங்கி மூலமே பரிவர்த்தனைகள் நடக்கும். வருமான உத்ரவாதம் கிடைக்காது.

வியாபார நோக்கில் எடுக்கப்பட்ட, துணிவு திரைப்படத்திற்கு இவ்வளவு எதிர்ப்பா? என்று கேட்கலாம். இது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் அனைத்து தரப்பினருக்கான விழிப்புணர்வு பதிவாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com