காற்றினிலே மிதக்கும் கீதம்...

காற்றினிலே மிதக்கும் கீதம்...

இசை பேரரசி எம்.எஸ் சுப்புலட்சுமி பிறந்த நாள் --செப் 16

இன்று இசைக்குயில் எம். எஸ் சுப்புலட்சுமி அம்மா அவர்களின் 106 வது பிறந்தநாள். அவரின் புகழ்பெற்ற பக்தி பாடலான  குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா...என்ற பாடல் தற்போதும் எங்கும் ஒலித்து வருகிறது. அவரது கணீர் என்ற குரலில் எப்போது அப்பாடலை கேட்டாலும் கேட்பவர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஒடும். இசையால் மனதை உருக்கும் ஆற்றல் எம்.எஸ் சுப்புலட்சுமி அம்மாவிற்கு இயற்கையாக கடவுள் அளித்த வரம். இசைக்காக தமது வாழ்க்கையே அர்ப்பணித்தவர் எம்.எம் அம்மா என்றால் அது மிகையில்லை.

மதுரையில் வழக்கறிஞர் சுப்ரமணிய ஐயருக்கும் , வீணை இசை கலைஞரான சண்முக வடிவு அம்மாளுக்கும் மகளாக பிறந்தவர் எம். எஸ் அம்மா. அவரது சகோதரர் சக்திவேல் மிருதங்க இசைகலைஞராவார். சகோதரி வடிவாம்பாள் வீணை இசை கலைஞர். சிறு வயதிலேயே இசைகுடும்பத்தில் வளர்ந்த எம்.எஸ். அம்மா வாய்பாட்டில் சிறந்து விளங்கினார். தனது பத்தாவது வயதிலேயே கச்சேரிகளில் பாட தொடங்கினார்.

இசை பிண்ணனி கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவராதலால் இவரது இசைஞானம் குழந்தை பருவத்திலேயே சிறப்பாக இருந்தது. இவரது முதல் குரு தாயார் சண்முகவடிவு அவர்களே. தாயை தவிர மதுரை சீனிவாச அய்யர், மாயவரம் கிருஷ்ணய்யர் மற்றும் மிகவும் புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகரான செம்மங்குடி சீனிவாசய்யரிடமும் கர்நாடக இசையை முறைப்படி கற்று தேர்ந்தவர் எம்.எஸ் சுப்புலட்சுமி.


இவர் இசைதுதுறையில் 1930 முதல் 1997 வரை கோலோச்சியவர். தனது சிறுவயதிலேயே தாயார் செல்லும் கச்சேரிகளில் கூடச் சென்று பாடி பல இசை ஜாம்பவான்களின் பாராட்டுதல்களை பெற்றார்.

எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் கர்நாடக இசை பாடல்கள், பக்தி பாடல்கள், திரைஇசை பாடல்கள் என அனைத்திலுமே சிறந்து விளங்கியவர். இவர் இசைப்பேரரசி , இசை குயில் , இசை ராணி  ஆகிய பட்டங்களை பெற்றவர். இவரது மீரா பஜன் பாடல்கள் உலக புகழை பெற்றது. இவர் கர்நாடக பாடல்களை பாடுவது மட்டுமல்லாமல் சில திறைபடங்களிலும் நடித்து பெரும் புகழ்பெற்றிருக்கிறார்.

இவர் 1966 ஆம் ஆண்டில் ஐ.நா சபையில் இசை நிகழ்ச்சி செய்தவர். இன்றுவரை இத்தனிப்பெரும் புகழுக்கும் பெருமைக்கு சொந்தக்காரர் நமது எம்.எஸ் அம்மா அவர்களே. இவர் உலகெங்கும் சென்று கர்நாடகா இசை கச்சேரிகளை செய்து அதில் கிடைக்கும் செல்வத்தை பல்வேறு சமூக அறப்பணிகளுக்காக வழங்கியவர். இவரது அறப்பணியை பாராட்டி பிலிப்பைன்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான மகசேசே விருதினை வழங்கி கௌரவப்படுத்தப்பட்டவர் நமது எம்.எஸ் அவர்கள்.

இவர் மிக உயரிய விருதான பத்மபூஷன் விரூதினை 1954;ஆம் ஆண்டு பெற்றவர்.  இதை தவிர சங்கீத நாடக அகதாமி வருது , சங்கீத கலாநதி விருது , இசை பேரறிஞர் விருது ஆகியவற்றை பெற்றார். அதன் பிறகு 1975 ல் பத்ப விபூஷன் விருதினை வென்றார். மேலும்  சங்கீத கலாநிதி ,  காளிதாஸ் சம்மன் விருது, இந்திராகாந்தி விருது போன்றவற்றை பெற்றுள்ளார். நாட்டின் உயர்ந்த விருதான பாரத ரத்னாவை 1998 ல் பெற்றவர் நமது எம்.எஸ் அவர்கள். 

உலகத்தில் இசை இருக்கும் வரை எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மா அவர்களின் புகழ் காற்றில் மிதந்து வரும் கீதமாக ஒலிக்கும். இந்தியாவின் மாபெரும் கர்நாடக இசை கலைஞராக பல்லாண்டு காலமாக வலம் வந்தவர் இசைக்குயில் எம்.எஸ். அம்மா.

இசை பேரரசி எம்.எஸ் சுப்புலட்சுமி அம்மா அவர்களின் 106 வது பிறந்தநாளை  கொண்டாடி மகிழும் கல்கி குழுமம் அவர்களை வாழ்த்தி வணங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com