ஆஸ்கார் விருதுகள் 2023... நாமினேஷன் & வின்னர்ஸ் முழுமையான பட்டியல் இங்கே!

ஆஸ்கார் விருதுகள் 2023... நாமினேஷன் & வின்னர்ஸ் முழுமையான பட்டியல் இங்கே!

ஆஸ்கர் விருது விழா என்பது ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் திரைப்படைப்பாளிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் உலக சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளைக் கிளறி விடும் திருவிழா போன்ற நிகழ்வு. இதற்கான திட்டங்கள், கலந்து கொள்வோருக்கான வரையறைகள் எல்லாமுமே முன்பே வெகு தெளிவாகத் திட்டமிடப்பட்டு கச்சிதமாகவும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் ஒன்று இது. இதில் குறிப்பாக இந்தியத் திரைப்படங்களுக்கு...ம்ஹூம், அத்தனை பெரிதாகப் போவானேன்?! நாடுகளை விடுங்கள் கண்டங்களையே எடுத்துக் கொள்வோம், ஆசியத் திரைப்படங்களுக்கே கூட எப்போதாவது தான் வெற்றி வாகை சூடும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்தியாவைப் பொருத்தவரை 2008 ஆம் ஆண்டில் வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படம் முதல்முறையாக 8 அகாடமி விருதுகளை வென்று உலக அளவில் இந்தியத் திரைப்படங்களின் மீதான பார்வையை மாற்றியது என்றாலும் கூட அப்போதும் இந்தியா என்றாலே இந்தி திரைப்படங்கள் மட்டும் தானா? இங்கு கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு ரீதியிலான அருமை, பெருமைகளையும், சிறப்புகளையும் வெளிப்படுத்தும் விதமாக நேட்டிவிட்டியுடன் கூடிய திரைப்படங்களைத் தரவல்ல மேலும் பல மொழிகள் இருக்கின்றன அவற்றில் தேர்ந்த படைப்பாளிகள் இருக்கின்றனர். அவர்களுக்கு ஆஸ்கர் வெல்லும் திறமையும் உண்டு என்று பரவலான விமர்சனங்கள் எழத்தான் செய்தன.

அந்த விமர்சனங்களுக்கான பதில் தான் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுப் பட்டியல் வெளியீடு.

இம்முறை பான் இந்தியா திரைப்படங்களில் ஒன்றாக தேசிய அளவில் வெற்றி வாகை சூடிய RRR ஆஸ்கர் விருதுப் பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. போட்டியிட்ட பலபிரிவுகளில் மியூசிக் ஒரிஜினல் பிரிவில் ஆர் ஆர் ஆர் வென்றிருக்கிறது. தென்னிந்திய படைப்பாளிகளைப் பொருத்தவரை இது நிச்சயம் மிகப்பெரிய சாதனை தான். இத்திரைப்படத்தின் இயக்குனர் ராஜமெளலி, அவரது சகோதரர் கீரவாணி தான் படத்தின் இசையமைப்பாளர். இந்த ஒரு திரைப்படத்திற்கு மட்டுமல்ல ராஜமெளலியின் இயக்கத்தில் வெளிவந்த அத்தனை திரைப்படங்களுக்குமே இசை இவர் தான். விருது பெற்ற நாட்டு நாட்டு பாடலை எழுதிய பாடலாசிரியர் சந்திரபோஸுடன் ஆஸ்கர் மேடையில் தனது 18 ஆண்டு கால கனவு நனவானதாகக் கூறி தன் ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் நன்றி தெரிவித்தார் கீரவாணி.

பணம் சம்பாதிக்கத்தான் நாம் எல்லாவிதமான வேலைகளையும் செய்கிறோம். கிரியேட்டிவ் ஃபீல்டு என்று சொல்லப்படக்கூடிய படைப்பாளிகளையும்

உள்ளடக்கியதுதான் இந்தக் கூற்று. ஆனால், அதில் மனநிறைவென்பது அதற்கான அங்கீகாரங்களை எட்டும் போது மட்டுமே சாத்தியமாகக் கூடும். அந்த அளவில் ஆஸ்கர் வெற்றிகள் ஒட்டுமொத்த இந்தியப் படைப்பாளிகளுக்கும் ஏதோ ஒருவகையில் இன்ஸ்பிரேஷனாகத்தான் அமைந்திருக்கின்றன. அடுத்த ஆண்டில் மேலும் பல இந்தியத் திரைப்படங்கள் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படலாம் எனும் நம்பிக்கையை நாட்டு நாட்டுவுக்கு கிடைத்த வெற்றி உறுதி செய்திருக்கிறது.

இந்த ஆண்டு ஆஸ்கரில் பலரையும் ஆகர்ஷித்துக் கொண்ட மற்றொரு படைப்பு என்றால் அது தி எலிபேண்ட் விஸ்பரர்ஸ் எனும் ஆவணப் படம். 2022 டிசம்பரில் நெட்ஃப்லிக்ஸில் வெளியான இந்த ஆவணப்படம் 2003 ஆஸ்கர் பட்டியலில் ஆவணப்பட வரிசையில் விருது வென்றிருக்கிறது.

இந்த இரண்டு வெற்றிகள் மேலும் பல படைப்பாளிகளுக்கு ஆஸ்கர் வாசலைத் தட்டிப் பார்க்கும் அளவுக்குத் தங்களது திறனை மேம்படுத்தச் செய்திருக்கிறது.

நாம் இந்தியாவுக்கு கிடைத்த இரண்டு விருதுகளை மட்டுமே தெரிந்து கொண்டால் போதுமா?

சிறந்த இயக்கம், சிறந்த நாயகன், சிறந்த நாயகி, சிறந்த குணச்சித்திர கதாபாத்திரம் (ஆண்), சிறந்த குணச்சித்திர காதாப்பாத்திரம் (பெண்), சிறந்த ஒரிஜினல் இசை (ஸ்கோர்) சிறந்த ஒரிஜினல் இசை (பாடல்), சிறந்த திரைக்கதை, சிறந்த குறும்படம், சிறந்த அனிமேட்டட் குறும்படம், சிறந்த ஆவணப்படம், சிறந்த ஆவண குறும்படம், சிறந்த ஒப்பனை மற்றும் தலை அலங்காரம், சிறந்த உலகத் திரைப்படம், சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு, இப்படிப் பல பிரிவுகளில் வழங்கப்பட்ட விருதுகளில் இன்னும் வேறு எந்தெந்த திரைப்படங்கள், எந்தெந்த மொழிகளில் விருதுகளை வென்று வெற்றி வாகை சூடின என்பதையும் நாம் தெரிந்து கொண்டால் சுவாரஸ்யமாக இருக்கும் தானே?

இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்கள், அவற்றிலிருந்து பலத்த போட்டியின் பின் நடுவர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் வெற்றி வாகை சூடிய திரைப்படங்கள் மற்றும் கலைஞர்கள் குறித்து இப்போது தெரிந்து கொள்வோம்.

இதில் சில இயக்குனர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் அல்லது தொழில்நுட்பக் கலைஞர்கள் மீண்டும் ஆஸ்கர் வென்றிருக்கலாம். சிலர் வெற்றிக் கோட்டை எட்ட முயன்று கிட்டாமல் விட்டிருக்கலாம். சிலருக்கு பரிந்துரைக்கு உள்ளே நுழையும் வாய்ப்பு கூட கிட்டாதிருக்கலாம். வாய்ப்புகள் திறமை சார்ந்தது என்பதோடு திட்டமிடலையும் சார்ந்தது என்பதால் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் அதிர்ஷ்டம் யாருக்கெல்லாம் வாய்த்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஆஸ்கர் விருதுகளைப் பொருத்தவரை திரைப்படம் தயாரிக்கும் செயல்முறையின் அனைத்து அம்சங்களிலும் 20 க்கும் மேற்பட்ட பிரிவுகள்

இருப்பதால், யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதைத் தொடர்வது கொஞ்சம் கடினமாக இருந்தது.

வெற்றியாளர்களுக்கான அறிவிப்பு ஞாயிறு இரவு முழுவதும் வெளிவந்து கொண்டே இருந்தது. அந்தப் பட்டியலைப் பார்ப்போம் இப்போது.

ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் வென்று மகுடம் சூட்டப்பட்டதென அறிவிக்கப்பட்ட திரைப்படங்களின் பெயர்களை ஆங்கிலத்திலேயே தருவது சரியாக இருக்குமென்று நினைக்கிறோம். ஏனெனில் யூடியூப் அல்லது OTT ல் இந்த திரைப்படங்கள் குறித்து பின்னாட்களில் தேடிக் கண்டடைய இது மிகவும் உதவியாக இருக்கலாம். அத்துடன் இதைத் தமிழ்ப்படுத்துவது பொருத்தமாகவும் இல்லை.

சிறந்த திரைப்படம்...

சிறந்த திரைப்படங்களுக்கான பிரிவில் மொத்தம் 10 திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அவற்றில் “Everything Everywhere All at Once” திரைப்படமே வெற்றி பெற்றதென அறிவிக்கப்பட்டது.

1. “All Quiet on the Western Front”

2. “Avatar: The Way of Water”

3. “The Banshees of Inisherin”

4. “Elvis”

5. “Everything Everywhere All at Once” (விருது பெற்ற திரைப்படம்)

6. “The Fabelmans”

7. “Tár”

8. “Top Gun: Maverick”

9. “Triangle of Sadness”

10. “Women Talking”

சிறந்த கதாநாயகி...

இந்தப் பிரிவிலும் 6 படங்கள் இடம்பெற்றன. அதிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட 6 நாயகிகளில் “Everything Everywhere All at Once” திரைப்படத்தின் நாயகியான மிச்செல் யோவா விருதைத் தட்டிச் சென்றார்.

1. Cate Blanchett — “Tár”

2. Ana de Armas — “Blonde”

3. Andrea Riseborough — “To Leslie”

4. Michelle Williams — “The Fabelmans”

5. Michelle Yeoh — “Everything Everywhere All at Once” (சிறந்த நடிகை விருது பெற்றவர்)

6. Cate Blanchett — “Tár"

சிறந்த இயக்கம்...

இந்தப் பிரிவில் போட்டியிட்ட 5 திரைப்படங்களில் “Everything Everywhere All at Once” முதலிடத்தை வென்றது. திரைப்படத்தை இயக்கிய டேனியல் க்வான் டேனியல் ஸ்னெர்ட் விருதைத் தட்டிச் சென்றார்.

1. Todd Field —“Tár”

2. Daniel Kwan and Daniel Scheinert — “Everything Everywhere All at Once” (விருது பெற்ற இயக்குநர்)

3. Martin McDonagh — “The Banshees of Inisherin”

4. Ruben Ostlund — “Triangle of Sadness”

5. Steven Spielberg — “The Fabelmans”

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது...

இந்தப் பிரிவில் 5 திரைப்படங்கள் பரிந்துரையில் இருந்தன. அவற்றுள் சிறந்த நடிகருக்கான விருது “The Whale” திரைப்படத்தின் நாயகன் பிரெண்டன் ஃப்ரேஸருக்கு வழங்கப்பட்டது.

1. Austin Butler — “Elvis”

2. Colin Farrell — “The Banshees of Inisherin”

3. Brendan Fraser — “The Whale” (விருது பெற்ற நடிகர்)

4. Paul Mescal — “Aftersun”

5. Bill Nighy — “Living”

சிறந்த குணசித்திர நடிகைக்கான விருது...

இந்தப் பிரிவுக்கான விருதை “Everything Everywhere All At Once” திரைப்படத்தில் நடித்த ஜமியா லீ கர்டிஸ் சொந்தமாக்கிக் கொண்டார்.

1. Angela Bassett — “Black Panther: Wakanda Forever”

2. Hong Chau — “The Whale”

3. Kerry Condon — “The Banshees of Inisherin”

4. Jamie Lee Curtis — “Everything Everywhere All At Once” (விருது பெற்ற நடிகை & திரைப்படம்)

5. Stephanie Hsu — “Everything Everywhere All At Once”

சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது...

இந்தப் பிரிவில் போட்டியிட்ட மொத்தம் ஆறு திரைப்படங்களில் “Everything Everywhere All At Once” ல் நடித்திருந்த கி ஹுவாய் க்வான் விருதை வென்றார்.

1. Brendan Gleeson — “The Banshees of Inisherin”

2. Brian Tyree Henry — “Causeway”

3. Judd Hirsch — “The Fabelmans”

4. Barry Keoghan — “The Banshees of Inisherin”

5. Ke Huy Quan — “Everything Everywhere All At Once”(விருது பெற்ற குணசித்திர நடிகர்)

சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருது...

இந்தப் பிரிவிலும் “Everything Everywhere All At Once” திரைப்படமே வெற்றி வாகை சூடுமோ என்ற பொதுவான எதிர்பார்ப்பின் பின் பார்வையாளர்கள் ஆச்சர்யப்படத் தக்க வகையில் “Black Panther: Wakanda Forever” திரைப்படம் இப்பிரிவில் வென்றது. 5 பேருக்கு இடையிலான போட்டியில் பிளாக் பாந்தர் ஆடை வடிவமைப்புக்கான விருதை தட்டிச் சென்றது.

1. “Babylon”

2. “Black Panther: Wakanda Forever” (விருது பெற்ற ஆடை வடிவமைப்பு)

3. “Elvis”

4. “Everything Everywhere All At Once”

5. “Mrs. Harris Goes to Paris”

சிறந்த ஒலிப்பதிவு...

மொத்தம் 10 திரைப்படங்கள் போட்டியிலிருந்த இப்பிரிவில் இறுதியாக ஜூரிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது “All Quiet on the Western Front”, “Top Gun: Maverick” எனும் இரண்டு திரைப்படங்களை. பிற பிரிவுகளைக் காட்டிலும் இதில் பலத்த போட்டி நிலவியது.

1. “All Quiet on the Western Front”

2. “Avatar: The Way of Water”

3. “The Batman”

4. “Elvis”

5. “Top Gun: Maverick” (விருது பெற்ற திரைப்படம்)

6. “All Quiet on the Western Front” (விருது பெற்ற திரைப்படம்)

7. “Babylon”

8. “The Banshees of Inisherin”

9. “Everything Everywhere All At Once”

10. “The Fabelmans”

சிறந்த திரைக்கதை (தழுவல்)

5 படங்கள் பரிந்துரை பட்டியலில் இருக்க, சிறந்த தழுவல் படங்களுக்கான பிரிவில் “Women Talking” திரைப்படம் விருது வென்றது.

1. “All Quiet on the Western Front”

2. “Glass Onion: A Knives Out Mystery”

3. “Living”

4. “Top Gun: Maverick”

5. “Women Talking” (விருது பெற்ற திரைப்படம்)

சிறந்த ஒரிஜினல் திரைக்கதை விருது...

இப்பிரிவில் “Everything Everywhere All At Once” திரைப்படம் மீண்டும் வெற்றி வாகை சூடியது.

1. “The Banshees of Inisherin”

2. “Everything Everywhere All At Once” (விருது பெற்ற திரைப்படம்)

3. “The Fabelmans”

4. “Tár”

5. “Triangle of Sadness”

நேரடியாகப் படம்பிடிக்கப்பட்ட குறும்பட விருது...

இந்த பிரிவில் போட்டியிட்ட 5 படங்களில் “An Irish Goodbye” விருதைத் தட்டிச் சென்றது.

1. “An Irish Goodbye” (விருது பெற்ற திரைப்படம்)

2. “Ivalu”

3. “Le Pupille”

4. “Night Ride”

5. “The Red Suitcase”

சிறந்த அனிமேஷன் குறும்பட வரிசை

இதில் பரிந்துரைக்கப்பட்ட 5 படங்களில் “The Boy, the Mole, the Fox and the Horse” திரைப்படம் வென்றது.

1. “The Boy, the Mole, the Fox and the Horse” (விருது பெற்ற திரைப்படம்)

2. “The Flying Sailor”

3. “Ice Merchants”

4. “My Year of Dicks”

5. “An Ostrich Told Me the World Is Fake and I Think I Believe It”

மியூசிக் (ஒரிஜினல் சாங்)

இந்தப் பிரிவில் தான் நமது பான் இந்தியா திரைப்படமான ஆர் ஆர் ஆர் விருது வென்றது. இதற்கான கொண்டாட்டங்களும், எதிர்பார்ப்புகளும் கடந்த மாதம் முதலே நமது சமூக ஊடகங்களைக் கலக்கிக் கொண்டிருப்பதால் இதன் வெற்றி அனைவரையுமே மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அத்துடன் ஆஸ்கரில் திரையிடப்பட்ட போது கிடைத்த இந்தப்பாடலுக்கான வரவேற்பு மேலும் பல தென் இந்தியப் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தியுள்ளது. எனவே இனிவரும் ஆண்டுகளில் இப்படியான ஒரிஜினல் முயற்சிகளை நமது படைப்பாளிகளிடம் நாம் எதிர்பார்க்கலாம்.

1. “Applause” from “Tell It Like a Woman”

2. “Hold My Hand” from “Top Gun: Maverick”

3. “Lift Me Up” from “Black Panther: Wakanda Forever”

4. “Naatu Naatu” from “RRR” (விருது பெற்ற பாடல்)

5. “This Is a Life” from “Everything Everywhere All At Once”

சிறந்த ஆவண திரைப்படம்...

1. “All That Breathes”

2. “All the Beauty and the Bloodshed”

3. “Fire of Love”

4. “A House Made of Splinters”

5. “Navalny” (விருது பெற்ற திரைப்படம்)

சிறந்த ஆவண குறும்படம்...

5 திரைப்படங்கள் பரிந்துரையில் இருந்த நிலையில் இறுதியாக தி எலிபேண்ட் விஸ்பரர்ஸ் விருதை வென்றது.

1. “The Elephant Whisperers” (விருது பெற்ற ஆவண குறும்படம்)

2. “Haulout”

3. “How Do You Measure a Year?”

4. “The Martha Mitchell Effect”

5. “Stranger at the Gate”

சிறந்த சர்வதேச திரைப்படம்...

போட்டியிட்ட ஐந்து திரைப்படங்களில் “All Quiet on the Western Front” முன்னணி பெற்று விருதை வென்றது.

1. Germany, “All Quiet on the Western Front” (விருது பெற்ற சர்வ தேச திரைப்படம்)

2. Argentina, “Argentina, 1985”

3. Belgium, “Close”

4. Poland, “EO”

5. Ireland, “The Quiet Girl”

சிறந்த சர்வதேச அனிமேஷன் திரைப்படம்...

1. “Guillermo del Toro’s Pinocchio” (விருது பெற்ற திரைப்படம்)

2. “Marcel the Shell With Shoes On”

3. “Puss in Boots: The Last Wish”

4. “The Sea Beast”

5. “Turning Red”

சிறந்த ஒப்பனை மற்றும் தலை அலங்காரத்துக்கான விருது...

இப்பிரிவில் ‘தி வேல் திரைப்படம் வெற்றி வாகை சூடியது.

1. “All Quiet on the Western Front”

2. “The Batman”

3. “Black Panther: Wakanda Forever”

4. “Elvis”

5. “The Whale” (விருது பெற்ற திரைப்படம்)

சிறந்த தயாரிப்பு…

1. “All Quiet on the Western Front” (விருது பெற்ற திரைப்படம்)

2. “Avatar: The Way of Water”

3. “Babylon”

4. “Elvis”

5. “The Fabelmans”

சிறந்த படத்தொகுப்பு..

1. “The Banshees of Inisherin”

2. “Elvis”

3. “Everything Everywhere All At Once” (விருது பெற்ற திரைப்படம்)

4. “Tár”

5. “Top Gun: Maverick”

சிறந்த ஒளிப்பதிவு...

1. “All Quiet on the Western Front” (விருது பெற்ற திரைப்படம்)

2. “Bardo, False Chronicle of a Handful of Truths”

3. “Elvis”

4. “Empire of Light”

5. “Tár”

சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ் விருது...

1. “All Quiet on the Western Front”

2. “Avatar: The Way of Water” (விருது பெற்ற திரைப்படம்)

3. “The Batman”

4. “Black Panther: Wakanda Forever”

5. “Top Gun: Maverick”

அவ்வளவு தான் இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழா இனிதே முடிந்தது.

இதில் பெரும்பாலான பிரிவுகளிலும் ஒரே திரைப்படம் மீண்டும் மீண்டும் இடம்பெற்றது என்றால் அது All Quiet on the Western Front”, “Everything Everywhere All At Once” எனும் இரண்டு திரைப்படங்களைச் சொல்லலாம்.

முன்பெல்லாம் ஆஸ்கர் விருதுகள் என்றால் உலகின் ஏதோ ஒரு மூலையில் எலைட் திரைப்பட ரசிகர்களுக்காக நடத்தப்படும் திரைப்பட விழா என்று தான் வெகுஜன ரசிகர்கள் கருதிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இந்த ஓடிடி ஒளிபரப்பு

ஆப்சன் வந்த பிறகு எல்லா மொழித் திரைப்படங்களையும் நம்மால் ஒரே திரையில் கண்டு ரசிக்க முடியும் வசதி கிடைத்து விட்டது.

’அயலி’ பார்த்து ரசிக்கும் அதே கண்கள் அது முடிந்ததும் தாம் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே அடுத்த படியாக எமிலி இன் பாரிஸ், பிரிஜெர்ட்டன், ரைன் என உலகின் எந்த மொழியிலும் வெளியாகும் பிறமொழிப் படங்களை உடனுக்குடன் கையிலிருக்கும் மொபைல் போன் மூலமாகக் கண்டு ரசிக்க முடிகிறது. இந்த எளிமைப்படுத்தப்பட்ட வசதியும், மேம்படுத்தப்பட்ட மார்க்கெட்டிங் உத்திகளுமே இந்தியப் படங்களை ஆஸ்கர் பரிந்துரைக்குள் இட்டுச் சென்றுள்ளது என்பதை மறுக்க முடியாது. இத்தனையும் தாண்டி வெற்றி வாகை சூடிய படைப்புகளும் உன்னதமானவையே!

ரசிகர்கள் முடிந்த வரை ஆஸ்கர் வென்ற திரைப்படங்களை ஒவ்வொன்றாக பார்க்க முயலுங்கள். அனைத்துமே ஓடிடியில் கிடைக்கலாம். அல்லது இருக்கவே இருக்கிறது யூடியூப்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com