விளையாட்டு நாஸ்டாலஜியா!

பல்லாங்குழி
பல்லாங்குழி

இப்பதோதெல்லாம் விளையாட்டுகள் என்றாலே அதற்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்று நினைத்தாலே தலைசுற்றிவிடும் போல உள்ளது. ஒவ்வொன்றில் விலையும் யானை விலை, குதிரை விலை என அதிகமாக விலை வைத்து விற்கப்படுகிறது.  ஆனால் எங்கள் கிராமப்புற விளையாட்டுகளின் தாத்பர்யமே தனி!

வெறும்  கையில் முழம் போடுவதுதான்! அட... ஆமாங்க... சும்மா ஒரு குச்சி எடுத்துக்கொண்டு நாலு கோடு போட்டாலோ அல்லது நாலஞ்சு கூழாங்கற்களை பொறுக்கினாலோ விஷயம் முடிஞ்சது. அம்புட்டுதான்!

ஆடுபுலி ஆட்டம்
ஆடுபுலி ஆட்டம்

மனதை ஒருமுகப்படுத்துவதோடு மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டு ‘கிச்சு கிச்சு தாம்பாளம்'. கவனத்தை ஒருங்கிணைத்து கைவிரல்களுக்குப் பயிற்சி கொடுக்கும் விளையாட்டு 'தட்டாங்கல்'.

தாயக்கட்டை
தாயக்கட்டை

ஐம்புலன்களும் விழிப்புடன் வைத்திருக்கும் விளையாட்டு 'கண்ணாமூச்சி' . மனப்பயிற்சிக்கும் புத்திக்கூர்மைக்குமான விளையாட்டு 'ஆடுபுலி ஆட்டம்'. மூளைத்திறனை அதிகப்படுத்தும் விளையாட்டு ‘தாயக்கட்டை’.

மற்றவர்களுக்கும் பகிர்ந்து தர வேண்டும் என்ற உணர்வினை உண்டாக்கும் பல்லாங்குழி.

தாயம்
தாயம்

தசையை உறுதியாக்கும், விளையாட்டு ‘கிட்டிப்புல்’ . வாழ்க்கையில எப்பவும் ‘அலர்ட்டா இருக்கணும் பாஸ் என்பதை சிறுவயதிலேயே சொல்லிக் கொடுத்து ‘கல்லா, மண்ணா’. இப்படி அந்தக் காலத்தில் ஒவ்வொரு விளையாட்டும் நம் உடலோடும் மனசோடும் சம்பந்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போது விளையாட்டுகள் வீட்டிற்குள்ளோ, கம்ப்யூட்டரிலோ அல்லது மொபைலிலோ என நமது உடலையும் மனதையும் குறுக்கிவிட்டது எனலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com