சார்லஸ் பிரிட்டிஷ் அரசர்
சார்லஸ் பிரிட்டிஷ் அரசர்

மறைந்தார் மகாராணி.. மறையுமா காமன்வெல்த்?

-ஜி.எஸ்.எஸ்.

 பிரிட்டனின் அரசியாக 70 ஆண்டுகாலம் இருந்த 2-ம் எலிசபெத் மகாராணி இறந்துவிட்டார். அவருடைய தலைமையில் உண்டான காமன்வெல்த் அமைப்பு தொடர்ந்து இருக்குமா, அல்லது ஆட்டம் கண்டு சிதறி விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனியாக விலகிய நாடுகளில் பல காமன்வெல்த் நாடுகள் அமைப்பு என்ற பெயரில் ஒரு குழுவை அமைத்தன.  இந்த அமைப்பின் உறுப்பினர்களில் இந்தியா உட்பட 33 நாடுகள் உள்ளன.

அதில் 15 நாடுகள் இரண்டாம் எலிசபெத் ராணியை தங்கள் தலைவியாக ஏற்றுக் கொண்டன.  அவை ஆன்டிகுவா, ஆஸ்திரேலியா, பஹாமாஸ், பார்படோஸ், பெலைஸ், கனடா, கிரெனைடா, ஜமைக்கா,  நியூசிலாந்து, பாபுவா கினியா, செயிண்ட் கிட்ஸ், செயின்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட், சாலமன் தீவுகள் மற்றும் துவாலு.

இவற்றில் பலவற்றில் நிலவுவது அரசியல் சட்ட முடியாட்சி - அதாவது கான்ஸ்டிட்யூஷனல் மொனார்க்கி.  இந்த அமைப்பில் அரசி அந்த நாட்டின் தலைவராக இருப்பார். என்றாலும் அவர் செய்வது முடியாட்சி அல்ல. முழுமையான முடியாட்சியில் அரசன் அல்லது அரசியிடம்தான் முழுமையான அரசியல் அதிகாரம் இருக்கும்.  அவர்கள் எந்த அரசியல் சட்டத்துக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல.  ஆனால் அரசியல்சட்ட முடியாட்சியில் அரசி ஒரு சடங்கு முறையான ஆட்சித் தலைவராக மட்டுமே இருப்பார்.

தன் தாயகமான இங்கிலாந்தில் அரசுக்கு நிறைய அதிகாரங்கள் உண்டு எந்த ஒரு சட்டமும் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பிறகு அது அரண்மனைக்கு அனுப்பப்பட்டு அரசியல் கையெழுத்திடப்பட்ட பிறகுதான் நடைமுறைக்கு வரும். 

தன் பார்வைக்கு வரும் சட்டங்களை அரசியல் செய்த நிகழ்வுகளும் உண்டு. குறிப்பான எடுத்துக்காட்டு 1999ல் ஈரானுக்கு எதிராக பிரிட்டன் எடுக்கவிருந்த ராணுவச் செயல்பாடுகள் குறித்து சட்டம்.

பிரிட்டனில் அரசிக்கென்றே பல தனி உரிமைகள் உண்டு.  அங்குள்ள அனைத்து டால்பின்கள் மீதும் அவருக்கு அதிகாரம் உண்டு.  தேம்ஸ் நதியில் மிதக்கும் எண்ணங்களுக்கும் அவர்தான் உரிமையாளர். அவர் லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டலாம்.  அவர் எங்கு செல்லவும் பாஸ்போர்ட் தேவையில்லை.

ஆனால் அவர் தலைமையை ஏற்றுள்ள பிற காமன்வெல்த் நாடுகளில் அவருக்கு தனிப்பட்ட உரிமைகள் கிடையாது.

எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு சார்லஸ் பிரிட்டிஷ் அரசர் ஆகியிருக்கிறார்.  அவரது தலைமையை காமன்வெல்த் நாடுகளில் உதறுமா?

2-ம் எலிசபெத் மகாராணி
2-ம் எலிசபெத் மகாராணி

"1789-ல் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சி நினைவிருக்கிறதா? மனித வரலாற்றில் மிக முக்கியமான ஒரு வருடம் அது. அப்போது மன்னர் ஆட்சி என்பது ஒரு குற்றச் செயல் என்றும் மக்களுக்கு எதிரான சதி என்றும் நிறுவப்பட்டது. அதே நிலை இப்போது தோன்றியிருக்கிறது" என்கிறார்கள் ஒருசாரார்.

காமன்வெல்த் நாடுகளில் முதன்முதலில் புரட்சிக் கொடியை பிடித்தது.  பார்படோஸ்.  இது கரீபியன் தீவில் அமைந்துள்ள ஒரு சுதந்திர நாடு.  பிரிட்டனிடமிருந்து இது சுதந்திரம் பெற்று 56 வருடங்கள் ஆகிவிட்டன. 

சென்ற ஆண்டு தான் காமன்வெல்த்திலிருந்து  வெளியேறுவதாக இந்த நாடு  வெளிப்படையாகவே அறிவித்து விட்டது.  'எலிசபெத்தை எங்கள் தலைவியாக ஏற்கப் போவதில்லை. 

நாங்கள் ஒரு முழுமையான சுதந்திர நாடு' என்று காமன்வெல்த் அமைப்பிலிருந்து தன்னை முழுவதுமாக விலக்கிக் கொண்டு இருக்கிறது.

ஜமைக்காவும் காமன்வெல்த்திலிருந்து வெளியேற விருப்பம் தெரிவித்து இருக்கிறது.

அதிகாரபூர்வமாக பிரிட்டனின் முடியாட்சி உடனான உறவுகளை துண்டிப்பது குறித்து ஆஸ்திரேலியாவில் விரைவில் வாக்கெடுப்பு நடக்க உள்ளது. 

இதற்காக ஒரு அமைச்சரை நியமிக்க இருக்கிறார் ஆஸ்திரேலியப் பிரதமர்.  பஹாமாஸ் பிரதமரும் இந்த விஷயத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப் போவதாக கூறியிருக்கிறார்.

பிரிட்டனின் அரசாட்சியை - அதாவது மன்னர் ஆட்சியை - அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர் ‘ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்’.  

ஒரு சீட்டை எடுத்தால் கூட சரிந்துவிடும் சீட்டுக்கட்டு மாளிகையைப் போலவே அரச சாம்ராஜ்யமும் சரிந்து விடுமோ என்ற கேள்வியை இது எழுப்பியது.   இப்போது இந்தக் கேள்வி வலுவாகி உள்ளது.

குடியரசுத் தலைவர் தங்கும் ராஷ்டிரபதி பவனிலிருந்து இந்தியா கேட் வழியாக செல்லும் சாலையில் ஒரு காலத்தில் கிங்ஸ்வே என்று அழைத்தார்கள்.  பிரிட்டிஷ் காலத்தில் வைக்கப்பட்ட இதே பெயர் இந்தியில் ராஜ்பாத் என்றழைக்கப்பட்டு அது தொடரப்பட்டது. 

சமீபத்தில் பிரிட்டனிடமிருந்து நாம் முழுவதுமாக விடுதலை பெற்றதை அழுத்தமாகக் கூறும் வகையில் ராஜ் பாத் என்ற பெயர் கர்தவ்ய பாத் (கடமைச் சாலை) என்று மாற்றப்பட்டது. அதை விட அழுத்தமாக இதை உலகுக்கு தெரிவிக்கும் வகையில் காமன்வெல்த் அமைப்பிலிருந்து இந்தியா விலகினால் என்ன என்ற நியாயமான குரல்கள் கேட்கத் தொடங்குகியிருக்கின்றன.                              

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com