"எதிரொலி கேட்டான் ....... வானொலி படைத்தான் "

சர்வதேச வானொலி தினம்!
"எதிரொலி கேட்டான் ....... வானொலி படைத்தான் "

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நவீன பல டிஜிட்டல் சாதனங்கள் கிடைக்கலாம் ஆனால் இவை வருவதற்கு முன்னாள், எளிய மக்களின் மாபெரும் பொழுது போக்கு சாதனமாக வானொலி இருந்தது என்றால் அது மிகையில்லை. அக்காலத்தில் வானொலி இல்லாத வீடுகள் இல்லை. உலகில் அன்றாடம் நடைபெறும் அத்தனை செய்திகளையும் தெரிந்து கொள்ள அன்றைய காலகட்டத்தில் முந்தி தருவதில் வானொலியே முதலிடம் வகித்தது எனலாம். மக்களின் ஒரே வெளி உலக தொடர்பு சாதனமாக வானொலி முக்கிய பங்கு வகித்தது.

ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பயணத்தில் மிகவும் ஒன்றி போன சாதனம் என்றால் அது வானொலியே. வானிலை தகவல்கள், காலநிலை மாற்றங்கள், இயற்கை கொந்தளிப்புகள் , தேசிய பேரிடர்கள் என மக்களுக்கு தகல்களை உடனுக்குடன் முந்தி தந்தது வானொலியே. உலக போர்களில் முக்கிய தகவல் தொடர்பு சாந்தமாக வானொலியே விளங்கியது. உலக தலைவர்களின் மரணம் முதல் உள்ளூர் அடிதடி சண்டைகள் வரை தெரிந்து கொள்ள வானொலியை தவிர வேறு வசதிகள் இல்லை அக்காலகட்டத்தில்.

எளிய வெகுஜன மக்களின் ஆக சிறந்த பொழுது போக்கு வானொலியின் திரை இசை பாடல்கள் எனலாம். அன்றைய காலகட்டங்களில் திரை பாடல்களை கேட்டு மகிழ வானொலி முக்கிய காரணமாக இருந்தது. டீக்கடை முதல் தெரு ஓரத்தில் வாழும் நரிக்குறவர்கள் இல்லங்கள் வரை வானொலியின் இசை கேட்காத இடங்களே இல்லை எனலாம். இரவில் தலையணையை விட கையடக்க வானொலியை அணைத்து தூங்கியவர்களே அதிகம்.

அன்று மட்டுமல்ல இன்றும் வானொலிக்கென்று ரகிக கூட்டங்கள் உண்டு. தற்போது வானொலி வடிவங்கள் மாறி FM ரூபத்தில் நம்மை மகிழ்வித்து வருகிறது. இன்றும் தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு வழித்துணையாக வருவது வானொலி இசையே. இன்றும் ஒரு பேருந்து பயணத்தை மகிழ்வுடன் மட்டும் மந்திர சக்தி வானொலிக்கு உண்டு.

இந்த வானொலியானது இத்தாலியை சேர்ந்த மார்க்கோனி என்பவரால் கடந்த 1888 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு, 1901 ஆம் ஆண்டு முழு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. உண்மையில் மார்க்கோனிக்கு முன்னரே ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல், மைக்கேல் பாரடே, ஹென்றிச் ஹெர்ட்ஸ் என பல விஞானிகள் மின்காந்த அலைகளை ஒலி அலைகளாக மாற்றி டிரான்ஸ்மீட்டர்களை உருவாக்க முயன்றிருந்தாலும், முழு வடிவமாக, ரேடியோவாக பொது மக்களிடையே கொண்டு சேர்த்த பெருமை குலீல்மோ மார்க்கோனி அவர்களையே சேரும்.

இந்தியாவில் 1927 ஆம் ஆண்டு மும்பை, மற்றும் கொல்கத்தாவில் முதல் வானொலி நிலையம் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1936 ஆம் ஆண்டு மத்திய அரசின் செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இருந்தது. பின்னர் தன்னாட்சி வழங்கப்பட்ட நிறுவனமாக பிரசார் பாரதி மாறியது.இந்தியாவில் தற்போது ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யா உள்ளிட்ட 16 அயல்நாட்டு மொழிகளிலும், 24 இந்திய மொழிகளிலும் என 208 ஒலிபரப்பு நிலையங்களோடு அகில இந்திய வானொலி நிலையம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, உதகை, திருநெல்வேலி, தூத்துக்குடி, காரைக்கால், நாகர்கோவில், கொடைக்கானல் ஆகிய இடங்களில் வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இலங்கை வானொலி இலங்கையின் முன்னணி ஒலிபரப்பு நிலையமும் ஆசியாவின் முதல் வானொலி நிலையமுமாகும். இங்கிலாந்தில் பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் மட்டுமே கடந்த நிலையில் இலங்கையில் ஒலிபரப்பை ஆரம்பித்தது. இந்த இலங்கை வானொலி ஒலிபரப்பிறகு ஏராளமான ரசிகர் கூட்டங்கள் உண்டு. இதில் ஒளிபரப்பப்படும் பாடல்களுக்கென்று உலகெங்கிலும் ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் இருக்கிறது என்றால் அது மிகையில்லை.

வரலாற்று சிறப்பு மிக்க வானொலி நம் அன்றாட வாழ்வோடு இரண்டற கலந்தது. வானொலியின் வடிவங்களிலும், ஒளிபரப்பிலும் பல்வேறு மாற்றங்கள் வரலாம் ஆனால் வானொலிக்கும் நமக்குமான பந்தங்கள் என்றுமே மாறாது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com