சரும பராமரிப்புக்கு உணவு டிப்ஸ் 5!

சரும பராமரிப்புக்கு உணவு டிப்ஸ் 5!

சூரியனிலிருந்து சருமத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் மட்டும் போதாது. இந்த 5 உணவுகளையும் சாப்பிடுங்கள்!

வெளியே செல்லும் முன்னர் எப்போதும்  சன் ஸ்கிரீன் போட வேண்டி இருக்கிறது. கெமிக்கல் பயன்படுத்த தயங்குபவர்கள் சருமத்தை வெயில் இருந்து பாதுகாக்கும் இயற்கையான ஐந்து உணவுப் பொருட்களை பார்ப்போமா!

 1. எலுமிச்சை சாறு

நிம்புபானி ஷி காஞ்சி மற்றும் பிற எலுமிச்சை பானங்களை குடிப்பது வெளியில் உள்ள கடும் வெப்பம் உங்களை தாக்குவதை தடுத்து உடல் சூட்டையும் தணித்து உடனடியாக சருமத்தை குளிர்ச்சி அடைய உதவும். எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடெண்ட்ஸ் நிறைந்துள்ளன. புற ஊதாக்கதிர்களைத் தடுக்க உதவுகிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் ஃப்ரீ ரேட்டிகல் சேதங்களில் இருந்து பாதுகாக்கிறது.

2. லஸ்ஸி

யிர், லஸ்ஸி ஆகியவற்றை அருந்துவது நாம் சாப்பிடும் உணவில் உள்ள இரும்பு ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுதலை ஆதரிக்க உதவுகின்றன. மேலும் தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்களிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றன. அதுமட்டுமில்லாமல் சருமத்தில் ஏற்படும் சுருக்கக் கோடுகளை தடுக்க உதவுகிறது..

 3. கிரீன் டீ

டல் எடையை குறைக்க அல்லது செரிமானத்தை அதிகரிக்க நீங்கள் கிரீன் டீ குடித்து வந்தால் இன்னும் ஒரு கூடுதல் நன்மையை இருப்பதையும் உணர்வீர்கள். கிரீன் டீயில் உள்ள பாலிஃபினால் ஆன்டிஆக்சிடன்ட்கள்,  நாம் வெளியே போகும் போது சருமத்தில் ஏற்படும் பழுப்பு நிற மாற்றத்தை தடுக்க உதவுகின்றன.

 4. தக்காளி

சூரியன் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் பதிலளிக்கும் வகையில், தக்காளியில் லைகோபீன் உள்ளது. இது UVA மற்றும் UVB கதிர்வீச்சு இரண்டையும் உறிஞ்சி வெயிலால் ஏற்படும் அபாயத்தை தடுக்க உதவுகிறது.

 5. இளநீர்

ளநீர் எப்போதும் இயற்கையான மாய்ஸ்ரைசர் என்று அறியப்படுகிறது. இது சருமத்தை செழிப்பாக வைக்கவும் மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது. அதோடு ஆச்சரியப்படுத்தும் வகையில் சூரியனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் இது ஒரு சிறந்த இயற்கை வைத்தியம். சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com