ஒரே ஒரு உருளைக்கிழங்கு போதும் ! உங்கள் நிறத்தை அதிகரிக்க கூடிய அற்புத பேஸ்பேக் ....!

பேஸ்பேக்
பேஸ்பேக்

கலராக இருக்க வேண்டும் என யாருக்கு தான் ஆசை இருக்காது. நிறத்தை அதிகரிக்க கூடிய இந்த அற்புதமான இந்த பேக்கை பயன் படுத்து வாருங்கள். உங்கள் முகம் பளபளவென ஜொலிப்பதை காணலாம்.

பேக் தயாரிக்க :

இந்த பேக் தயாரிக்க முதலில் ஒரு உருளைக்கிழங்கை தோல் சீவி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு துருவி உருளைக்கிழங்கின் சாறை மட்டும் ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு சாறு 2 ஸ்பூன், கடலை மாவு 1/4 டீஸ்பூன், மஞ்சள் 1 டீஸ்பூன், கெட்டியான அதிகம் புளிக்காத தயிர் 1 ஸ்பூன் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நல்ல பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ளுங்கள்.

இதை குளிப்பதற்கு முன்பு போடுவதாக இருந்தால் குளிக்க அரை மணி நேரத்திற்கு முன்பாக உடல் முழுவதும் பூசி அதன் பிறகு சோப்பு எதுவும் பயன்படுத்தாமல் குளித்து விடலாம்.

பேஸ் பேக்காக மட்டும் பயன்படுத்துவதாக இருந்தால், இரவு உறங்க செல்வதற்கு முன்பாக முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவிய பிறகு இந்த பேக்கை போட்டு அரைமணி நேரம் கழித்து மறுபடியும் சுத்தம் செய்யலாம்.

மூன்று நாட்களுக்கு தொடர்ந்து போட வேண்டும். தினமும் இதை செய்ய சிரமமாக இருந்தால் உருளைக்கிழங்கு சாறை மட்டும் எடுத்து ஐஸ் கியூப் ட்ரெயில் ஊற்றி வைத்து தினமும் இரண்டு கியூப் எடுத்து கரைந்த பின் அதன் பிறகு சேர்க்க வேண்டியவற்றை சேர்த்து போட்டுக் கொள்ளுங்கள். இந்த எளிமையான அழகு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

சிலர் பார்க்க நல்ல நிறத்துடன் தான் இருப்பார்கள் ஆனால் கழுத்து, கண், வாய்ப்பகுதி போன்றவற்றில் கருமை படிந்து இருக்கும். ஒரு சிலர் நல்ல நிறமாக இருந்து நிறம் குறைந்து கருமையாக மாறி இருப்பார்கள். தங்களின் பழைய நிறத்தை திருப்பிக் கொண்டு வர ஒரு எளிமையான முறை தான் இந்த உருளைக்கிழங்கு பேக். இதை முகம் மட்டும் இல்லை உடல் முழுவதுமே கூட தேய்த்து குளிக்கலாம். நல்ல பலன் கிடைக்கும். இனி உங்க முகமும் தகதகவென ஜொலிக்கும் தானே...!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com