மனதை அமைதிப்படுத்தும் அரோமா தெரபி!

மனதை அமைதிப்படுத்தும் அரோமா தெரபி!

மாற்று மருத்துவம் பலவிதங்களில் நன்மைகள் தருகிறது. வலிகள், மன அழுத்தம் என அனைத்து வகையான பயன்பாடுகளுக்கும் எண்ணெய் கொண்டு செய்யப்படும் தெரபி முக்கியமான ஒன்றாக பலன் கொடுக்கிறது.

அரோமா தெரபி

றுமணம் மிக்க தாவர பொருள்களை கொண்டு தயாரிக்கப்படும்  எசென்ஷியல் ஆயில்கள் மூலம் தரப்படும் சிகிச்சை இது. மனதுக்கு உகந்த, இனிய வாசனைக்கு மனதை அமைதிப்படுத்தும் குணம் உண்டு என்பதால் உளவியல் தொடர்பான பிரச்சனைகளுக்கு  இந்த தெரபியை அறிவுறுத்துகின்றனர்.

இதில் பயன்படுத்தும் எண்ணெய் வகைகள்: தாவரங்களில் இருந்து நீராவி முறையிலும் பிழிந்து எடுக்கப்படும் முறையிலும் பெறப்படும் எண்ணெய்கள் இவை. உதாரணம்: யூகலிப்டஸ் எண்ணெய், கிரேப் எண்ணெய். ரோஸ் அப்சல்யூட்ஸ்.

கேரியர் எண்ணெய்கள்: எண்ணெய் வித்துக்கள், விதைகளிலிருந்து பெறப்படும் டிரை கிளிசரைட்ஸ் கோளின் நீர்த்த வடிவங்கள் கேரியர் எண்ணெய்கள் எனப்படும். உதாரணம்:பாதாம் ஆயில்.

மூலிகை வடி எண்ணெய்கள்.வடித்தெடுத்தல் முறையில் பல்வேறு மூலிகைகள் தாவரங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய்கள் இவை. உதாரணம்:ரோஸ் ஆயில், லெமன் ஆயில்.

சிகிச்சை முறைகள். இந்த எண்ணெய்களில் இருந்து பெறப்படும் நறுமணங்களை காற்றில் பரவ விடுவதன் மூலம், பாதிக்கப்பட்டவரை நேரடியாக முகரச் செய்வதன் மூலமாக பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி சிகிச்சை தரும் விதமாகவும் உள்ளது.

மனதை சாந்தப்படுத்தும். அமைதி, ஆனந்தத்தை தரும் இவ்வகை சிகிச்சைகள் பக்க விளைவுகள் அற்றது. பாதுகாப்பானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com