முகத்தை ஜொலிக்க வைக்கும் தயிர்!

முகத்தை ஜொலிக்க வைக்கும் தயிர்!

நம் வீட்டில் எளிமையாக கிடைக்கக்கூடியது தயிர்

தயிர் ஒரு ஆரோக்கியமான உணவு பொருள், மிகவும் குளிர்ச்சி தன்மையுடையது. அதுமட்டும் இல்லாமல் தயிர் (curd beauty tips) பலவகையான சரும பிரச்சனைகளை சரி செய்வதற்கு ஒரு இயற்கை பொருளாக விளங்குகிறது.

தயிரை பயன்படுத்தி சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் எப்படி சரி செய்யலாம்.

முகத்தில் ஏற்படும் பருக்களுக்கு:

சிலருக்கு சருமத்தில் அதிகளவு பருக்கள் இருக்கும், அவற்றை சரி செய்வதற்கு தயிர் மிகவும் சிறந்த இயற்கை மருந்தாக விளங்குகிறது.

எனவே சருமத்தில் அதிகளவு பருக்கள் ஏற்பட்டால் தயிரில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்றாக கலந்து, சருமத்தில் ஏற்பட்டுள்ள பருக்கள் மீது தடவி 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்வதினால் சருமத்தில் உள்ள பருக்கள் மறைந்துவிடும், அதேபோல் பருவினால் ஏற்பட்டுள்ள தழும்புகளும் மறைந்துவிடும்.

கருமையான சருமத்திற்கு தயிர் :

சிலருக்கு சூரிய காலத்தில் சருமம் பொலிவை இழந்து, சருமம் மிகவும் கருமையாக காணப்படும். இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு தயிர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து சருமத்தில் ஒரு பேக்காக போடவும், பின்பு 20 நிமிடங்கள் வரை காத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவவும்.

இவ்வாறு செய்வதினால் சருமத்தில் ஏற்பட்டுள்ள கருமை நிறம் மறைந்து, சருமம் பொலிவுடன் காணப்படும்.

சரும பாதுகாப்பிற்கு:

ஒரு பௌவுளை எடுத்துக்கொள்ளவும் அவற்றில், ஒரு ஸ்பூன் அரைத்த புதினா பேஸ்ட், ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

இப்போது இந்த கலவையை சருமத்தில் தடவி மசாஜ் செய்யவும். பின்பு 20 நிமிடம் வரை வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவவும்.

இவ்வாறு செய்வதினால் சருமத்தை பொலிவுடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளலாம்.

சிலருக்கு சருமம் மிகவும் வறண்டும், பொலிவிழந்தும் காணப்படும். இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு 1/2 கப் தயிர் எடுத்துக்கொள்ளவும், அவற்றில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமத்தில் தடவி, 20 நிமிடம் வரை வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவினால், உடல் உஷ்ணத்தால் வறட்சி அடைந்த சருமம் மிகவும் பொலிவுடனும், ஜொலிஜொலிப்பாகவும் காணப்படும்.

புத்துணர்ச்சி சருமத்திற்கு:

சிலருக்கு சருமம் புத்துணர்ச்சி இழந்து, மிகவும் டல்லாக காணப்படும் அவர்களுக்கான குறிப்புதான் இது. ஒரு துண்டு வெள்ளரிக்காய், இரண்டு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் ஓட்ஸ் அல்லது கடலை மாவு ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து ஒரு முறை அரைத்து கொள்ளவும்.

இந்த கலவையை சருமத்தில் தடவி சுமார் 20 நிமிடம் வரை வைத்திருந்து பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவவும்.

இவ்வாறு செய்வதினால் சருமத்தில் ஏற்படும் கருமை திட்டுக்கள், கரும்புள்ளிகள், சருமத்தில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் ஆயில் சருமம் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.

அடடே தயிரில் இவ்வளவு நன்மைகளா உள்ளது என்று ஆச்சரியமாக இருக்கிறதா.?

.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com